KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/மஹாபாரதின் கதைச் சுருக்கம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

மஹாபாரதின் கதைச் சுருக்கம்

பருதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட ஆகுசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாயாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவா், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருத்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் பரிய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மருத்ரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். குரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கா்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில்விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் காணன் துரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸலறதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவா்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரா், தா்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி முலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோகனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரா், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சுகுனி வஞ்சகமான முறையில் பாண்டவாகளைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ் ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விகிக்கார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவாகம் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

பாரததேசத்தின் அனைத்து அரசா்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவர்களுடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடக் கயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவா் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை கோர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,'' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர் மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன் கிருஷ்ணரைத் கேர்ந்தெடுத்த பின்னர், கமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைக் கேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.