KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள்

  • 13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பற்றியும், என்னால் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும் !
  • 13.19 ப்ரக்ரு'தி புருஷன் இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உணர்வுமாற்றங்களும் ப்ரக்ரு 'தியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
  • 13.20 உடலையும் புலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் ப்ரக்ரு தி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.
  • 13.21 பொருள் சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம்.
  • 13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா லாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
  • 13.23 இவ்வாறு புருஷனையும், குணங்களோடு கூடிய ப்ரக்ரு தியையும் எந்த மனிதன் தத்வ ரீதியாக அறிவானோ, அவனுடைய இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.