KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/ஆத்மாவும் உடலும்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

ஆத்மாவும் உடலும்

  • 13.31 குந்தி புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
  • 13.32 எங்கும் நிறைந்திருந்தாலும் ஆகாச் ம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ, அவ்வாறே ஆத்மாவும் இவ்வுடலில் வசித்தாலும், இந்த உடலோடு அது கலப்பதில்லை.
  • 13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படிச் சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மானுன்றே இந்த க்ஷத்ரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது.
  • 13.34 இவ்விதம் கிஷத்ரம் மற்றும் கிஷத்ரஜ்குன் இவற்றின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஐக்குராக் கண்களால் தத்வ ரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல் ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமாத்மாவை அடைகிறார்கள்.

ஆத்மா அமைதீக்கும் அப்பாற்பட்டது

கிருஷ்ணர், மீண்டும் மீண்டும் பரமாத்மாவின் உண்மை நிலையைப் பற்றிப் பேசுகிறார். அவர், 'ஆத்மாவானது எந்தப் பிடிப்புகளிலும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கிறது, அது எல்லையற்றது, முடிவற்றது. மனம் கடந்தநிலையில் உள்ளது. இந்த 'ஸ்தூல உடலோடு தொடர்பு கொண்டிருந்தாலும்கூட, அது இன்னமும் சுதந்திரமாகத்தான் இருக்கிறது' என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.

முந்தைய ஸ்லோகங்களில், நம் உடல், எப்படி ஆத்மாவின் கோயிலாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசினோம். கடந்த பிறவிகளின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே, இந்த ஆத்மா எப்படி இந்த உடலை எடுக்கிறது என்பதைப் பார்த்தோம்.

உண்மையில் ஆத்மா, எதையுமே செய்வதில்லை. அது பயம், பேராசை என்னும் சிக்கல்களில் தன்னைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை. நம் மனம்தான், புதுப்புது ஆசைகளை, தொடர்ந்து பட்டியலில் சேர்த்துக்கொண்டேயிருக்கிறது. உடலையும் அவற்றின் பின்னாலேயே ஓட வைத்துக்கொண்டும் இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் ஆதீமா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறது. அதற்கு பந்தமே கிடையாது.

ஆத்மா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறது. அதற்கு பந்தமே கிடையாது!

அது, தடாகத்தில் மிதக்கும் தாமரையைப் போன்று இருக்கிறது. தாமரை இலைகளின் மேல் விழுகிற நீர்த்துளிகள், அதில் ஒட்டுவதில்லை. அவை உருண்டோடி விடுகின்றன. அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆதமாவினிடத்து, ஒட்டுவதில்லை.

உடல் தொடர்புகொள்கிறது.் இத்தமா தொடர்புகொள்வதே இல்லை. ஆத்மாவானது பரமாத்மாவுடன் முடியும்.

கிருஷ்ணர், நிர்குணம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். குணங்களுக்கும் அப்பாற்பட்டது' என்று அர்த்தம்.

மூன்று குணங்களாகிய அமைதி, பேராசை, சோம்பல்தனம் ஆகியவை உடலோடும் மனத்தோடும் ஆத்மா, இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டது. அது அமைதியானதும் அல்ல ; சோம்பலானதும் அல்ல; தூய்மையானது. உண்மையில், அது தூய்மைக்கும் அப்பாற்பட்டது.

ஆக்மாவாகிய நீங்கள் எதனாலும் பாதிப்படைய மாட்டர்கள்

ஆதமாவிற்குத் பயன்படுத்தும்பொழுது, அதனை அமைதி என்னும் குணத்தோடும் சம்பந்தப்படுத்தலாம் என்று அர்த்தமாகிறது. ஆனால் ஆதீமாவானது அமைதிக்கும் அப்பாற்பட்டது. அதனால்தான் நான், 'தூய்மைக்கும் அப்பாற்பட்டது' என்று சொல்கிறேன். அதனை எதுவுமே சுற்றி வளைத்துக் கட்டுப்படுத்த முடியாது.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், நம் மனத்தால் பார்க்கப்படும் ஒரு விஷயத்தைத்தான், வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். நம் மனத்தில் ஓடும் உள் அரட்டையின் வெளிப்பாடே சொற்கள். மனம் இல்லாதபொழுது சொற்களே இல்லை.

மலைகளால் குழப்பட்ட இமயத்திற்குச் செல்லும்பொழுது, முதலில் நிகழ்வது 'பெரும்வியப்பு'. வார்த்தைகளே வெளி வராது. நாம் மிக அமைதியாக இருக்கிறோம். நம்முடைய இருப்பு, அந்த அழகை அனுபவிக்கிறது; நமது இருப்பு, அதனை வேறு எதனோடும் சம்பந்தப்படுத்திப் பார்க்க முயலாது. நம் மனது, இன்னமும் அதனை வேறு எந்த வார்த்தையோடும் சம்பந்தப்படுத்தவில்லை. ஒரு சில நொடிகள் கழித்தே 'ஆஹா' என்னும் உணர்ச்சியை அனுபவிக்கிறோம். அதை விவரித்துச் சொல்ல இயலாது.

அதைப் போலவே, ஜ்ஞாருமடைதலையும் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது. ஜீஞாநம் என்பது என்ன என்பதை வார்த்தைகளால் விவரிக்க எந்த ஒரு ஜ்ஞாந குருவாலும் இயலாது.

ஆத்மாவை, அமைதி அமைதி என்ற வெல்லுடன் தொடர்புபடுத்திச் சொல்வதற்குக்கூட, நமது மனம் தேவைப்படுகிறது. ஆனால் ஆத்மர அதற்கும் அப்பால் உள்ளது. எந்தச் சொல்லும், அதை விவரிக்க முடியாது. அது வெறுமனே 'இருக்கிறது' அவ்வளவுதான்.

ஜ்ஞார குருமார்கள், த்ரிகுண ரூறிதர்களாக இருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு

ஆத்மா. அதன் உரைவிடத்தின் குணங்களால் பாகிக்கப்படுவதேயில்லை. நிலையில் வாழ்கிறார்கள் என்பதாகும். முக்குணங்களுக்கும் அப்பால் அவர்கள் சென்று பந்தப்படாமல் சுதந்திரமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த உடல், அவர்களுக்குத் தெரியும்; உடல், ஆத்மாவைப் பாதிக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

கிருஷ்ணர் இந்த தெளிவாக்குவதற்கு, ஒரு உதாரணத்தைச் சொல்கிறார்: ஆகாசம், அதில் இருக்கும் எந்த ஒரு பொருளாலும் பாதிக்கப்படுவதில்லை!

ஸூஷ்ம சக்தியான ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மூலக் கூறிலும் அணுவிலும்கூட, இந்த ஸூக்ஷ்மமானசக்தி உள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் அது நிறைந்திருந்தாலும், அவற்றின் தன்மைகளை அது சுவீகரித்துக் கொள்வதில்லை. அது, ஒரு மலரில் இருந்தாலும், அதன் நறுமணத்தைக்கூட அது எடுத்துக் கொள்வதில்லை.

அதைப் போலவே ஆத்மா, அதன் உறைவிடத்தின் குணங்களால் பாதிக்கப்படுவதேயில்லை.

மக்கள், தாங்கள் பாவங்கள் செய்தால், தங்களின் ஆத்மா நரகத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். தெய்வ பக்தியுடன் வாழ்ந்தால்,

சொர்க்கத்திற்குச் நினைக்கிறார்கள். செயல்களால் ஆதீமா பாதிக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள்.

தயவுசெய்து வெளியே நம் இன்னுமொன்றை உங்களுக்குச் சொல்கிறேன், சொர்க்கம் என்றோ, கிடையாது. அவை புவியியல் ரீகியான இடங்கள் அல்ல; அவை மன ரீதியான நிலைகள்.

உடலின் வெளிச் செயல்கள், ஆத்மாவின் கறுதி இலக்கைப் பாகிப்பதில்லை.

நாம் விழிப்பில்லாமல் எதையாவது செய்தால், நாம் நரகத்தில் இருக்கிறோம். நாம் விழிப்புணர்வுடன் ஒரு செயலைச் செய்தால், நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். அப்பொமுது நமது செய்கைகள் அனைத்துமே, இயல்பாகவே, எல்லோருடைய நன்மைக்காகவே அமையும்.

உடலின் வெளிச் செயல்கள், ஆக்மாவின்இறுதி இலக்கைப் பாதிப்பதில்லை. நமது பாவங்கள், நமது ஆதீமாவின் தன்மையை பாதிப்பதில்லை. ஆத்மா, அவற்றிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறது. ஆத்மா எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.