KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/பரிசோத்த்துப் பார்க்காத அறிவு அபாய சேமிப்புSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

பரிசோத்த்துப் பார்க்காத அறிவு அபாய சேமிப்பு

நாம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டோம். இவற்றை எல்லாம் பரிசோதிப்பதற்கான துணிவு நம்மிடம் இருந்தால் மட்டுமே, இவற்றால் நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு உதவ முடியும். அப்படியில்லையென்றால், இவை நம் தலைக்கனத்தை அதிகப்படுத்தும், அவ்வளவுதான்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த உபதேசங்களை எல்லாம் கேட்டு, நமது மண்டையில் சேமித்துவைத்தால், நமக்குத் தலைக்கனம் அதிகரிக்கும். வேறெதுவும் ஏற்படாது.

இப்போது நாம், 'எனக்குக் கீதை தெரியும்' என்று நினைக்கிறோம். ஆனால் கீதையை நாம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும், அதை நம்முடைய அனுபவமாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, அதிக உணவு உண்டுவிட்டு, அதை ஜீரணிக்க முடியாவிட்டால், என்ன ஆகும் ? நமக்கு வயிற்றுவலி ஏற்படும், வாந்தி எடுப்போம். அதேபோல, கீதையைக் கேட்டுவிட்டு, அதை நம்முடைய அனு பவ மாக்க வில் லை யென்றால் , நமக்குத் தலைவலி உண்டாகும். நாம் யாரையாவதுப் இதையெல்லாம் அவர்களிடம் வாந்தி எடுத்துக் கொண்டிருப்போம்.

நம்மிடம் இந்த ஸ்தீயங்களுடனான பரிசோதனையைச் செயற்படுத்தவில்லையென்றால், இந்த ஸ்த்யங்களைக் கேட்பது ஆயத்தாகத்தான் முடியும்.

இதை மேலும் விளக்கமாகச் சொல்கின்றேன்: ''நீங்கள் பயிற்சிசெய்யாமல், வெறுமனே

இந்த ஆபத்தானது !''

உடனே நாம், 'ஏன்? எப்படி?' என்றுதான் கேட்போம். ஏனென்றால், தொடர்ந்து பல நாட்களுக்கு இந்த ஸ்தீயங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாலும் படித்துக்கொண்டிருப்பதாலும், 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற மயக்கத்தில் சிக்கிக்கொள்வோம்; ஆனால் உண்மையில் நமக்கு எதுவும் தெரியாது. அது மிகவும் ஆபத்தான விளையாட்டு. ஒருபோதும் அந்த விளையாட்டில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!

ஆன்மீக வாழ்க்கைக்குத் துணிவு, சீரத்தை, தீர உணர்வு இருக்க வேண்டும்.

நான் சொல்கின்ற 'கடைதல்' என்ற ஒரு செயல்முறையைப் பலர் கடக்கிறார்கள். உங்களின் அவசியமாகிறது. அதனால், சீடரது எல்லாப் பழைய மதிப்பிடும் செயல் அமைப்புகளும் (value system) மறுபரிசீலனைக்காக மேலெழும்பி வரும். அதை மீண்டும் அனுபவித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

நீங்கள் எப்படி இருக்கிரிகளோ, அப்படியே உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ள, ஜ்ஞாநகுகுரு உங்களுக்கு உதவி செய்கிறார்.

அவை, நிலையிலிருந்து, விழிப்பு நிலைக்கு மேலெழுந்து வரும்போது, தேவையற்றவை எல்லாம் அழிந்து போகின்றன. சீடரின் உயர் விழிப்புநிலை புத்திசாலித்தனத்தின் ஒளியில், அவை எல்லாம் எரிந்து போகின்றன.

ஜ்ஞாரதகுரு ஒரு வழிகாட்டி. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளவும், உங்களைச் சுற்றி உள்ள விஷயங்களை, அவை எப்படி உருவாகி இருக்கின்றதோ, அப்படியே அவற்றை ஏற்றுக்கொள்ளவும் அவர் உங்களுக்கு உதவிசெய்கிறார்.

ஆம், உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றதோ, அதை மாற்றுவதற்கான முயற்சிப் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வேலை செய்யாது. இந்த உலகத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு, அது உங்களுடையது அல்ல. பேரரசர்களும் தலைவர்களும்கூட, இது தங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

உலகை, 'உள்ளது உள்ளபடியே' ஏற்றுக்கொள்வதே மிகவும் விவேகமானது. மாற்றம் உங்களுக்குள் நிகழ வேண்டும். இந்த உலகத்தில் என்ன மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அது உங்களுக்குள் நடக்க வேண்டியது அவசியம்.

ஏற்றுக்கொள்ளுவதைப் பற்றிய புரிதல் நிகழும்போது, உங்களுக்குள் மிகப்பெரிய அளவிலானதொரு விடுதலை நிகழ்கிறது. அது ஒரு அளப்பறிய சுதந்திரம். அது, காலத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை, அது மனத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை, மரணத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை.

திடீரென்று நீங்கள் முடிவற்ற, எல்லையற்ற விட்டிரணத்துவத்தின்) பரிமாணத்திற்குள் நுழைவீர்கள். உடனே நீங்கள் கடவுளுக்குச் சமமானவராகி விடுவீர்கள்.

இந்த விடுதலை, நிகழ்கின்ற ஒர் அனுபவம், அதைக் கற்க முடியாது, அதைக் கற்றுக்கொடுக்க முடியாது. ஆம், நீங்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டிருக்கலாம், அந்த இடத்தை அடைய என்னுடைய உடல்மொழிகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் முயற்சி உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். அது, உங்களுடைய சாதனை, அது, உங்களின் கண்டுபிடிப்பு. அது நிகழும்போது, நீங்கள் வியப்பில் மலைத்துப் போய் அமாந்திருப்பீர்கள். உலகில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கும்.

ஒவ்வொரு நொழயும், ஓர் ஆச்சரியம்

ஒரு ஜென் ஞானி இறந்து கொண்டிருந்தார்! அங்குக் குழுமியிருந்த அவரது சீடர்களுள் மூத்த சீடரொருவா் ஞானியிடம் கேட்டார், " குருவி, உங்கள் உடலை எங்கே புதைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? நீங்கள் பிறந்த இடத்திலா அல்லது நீங்கள் ஞானமடைந்த அந்த மரத்தினடியிலா அல்லது உங்கள் உடலை விட்டுப் பிரியப்போகின்ற இந்த இடத்திலேயேவா ?'

ஞானி ஒரேயொரு கண்ணை மைட்டும் திறந்து, கண்சிமிட்டிச் சிரித்து விட்டு, "என்னை ஆச்சரியப்படுத்துங்கள்!" என்று சொல்லி விட்டார்.

ஒவ்வொரு நொடியும் ஓர் அதிசயம், ஓர் ஆச்சரியம் !

இந்த உலகத்தில் என்ன மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அது உங்களுக்குள் நடக்க வேண்டியது அவசியம்.

அசிரத்தையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு

உங்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது என்கின்ற விழிப்புணர்வை அடையுங்கள். நீங்கள் எந்த உஜாதியையோ, மதக்கோட்பாடுகளையோ, மாநிலத்தையோ, தேசத்தையோ சேர்ந்தவர் அல்ல, நீங்கள் தெய்விகமானவர், நீங்கள், உங்களைக் கடவுளோடு அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். 'நான்' என்ற கருத்தைத் துண்டித்து, அதைக் கடந்து மேலே செல்லுங்கள். அதனைத் தாண்டி எல்லைகளைக் கடந்து செல்லுங்கள்.

நாம் யார் என்பதை உணர, நாம் உடலையும் மனத்தையும் கடந்து செல்ல வேண்டும். ஆத்ம விசாரணை என்பது 'நான்' என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதைக் கடந்து செல்வதைப்பற்றியது.

நமது அடையாளம், நமது பெயர், நமது உறவுகள், வெற்றிகள், தோல்விகள் உட்பட, நம்முடையது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற முத்திரைகளையும் நாம் கைவிட வேண்டும்.

ஒருவர், தம்மை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்கிறாரென்றால், அவர் முதுமை, நோய், மரணத்திற்குப் பயந்துகொண்டிருப்பார்.

ஒருவர், அடையாளப்படுக்கிக் கொள்கிறாரென்றால், அவர் போவதைப் பற்றியும், நினைவுத்திறன் குறைவு மற்றும் இது போன்ற பிற விஷயங்களுக்கும் பயந்து கொண்டிருப்பார்.

நாம் உயர் விழிப்புணர்வே, அதைவிட குறைந்தவர் அல்ல. நாம் உடலும் அல்ல. மனமும் அல்ல. இந்த உடலையும் மனத்தையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் ஸாக்ஷி உணர்வு.

நமது உண்மையான இயல்பு ஒருமுக - பரிமாணம் அல்ல, அது பன்முக - பரிமாணமாக இருக்கிறது. அது இயற்கையைப் போன்றது. இயற்கையின் வா்ணங்களைப் போன்றது.

இயற்கையில், ஒளிக்கு ஏழு நிறங்கள் உண்டு, ஒலிக்கு ஏழு ஸ்வரங்கள் உண்டு. ஏழு நிறங்களும் ஒன்றிணையும்போது, வெள்ளை நிறம் உருவாகும். இசையின் ஏழு ஸ்வரங்களும் ஆழந்த ஒருங்கிணைப்பில் ஐக்கியமாகும்போது, மௌனம் பிறக்கிறது, இசையில், மௌனமே இறுதி நிலை.

வெள்ளை, ஒரு நிறமாகத் தோன்றாது, அதேபோல மௌனமும் இசையைப்போல ஒலிக்காது. ஏனென்றால், அது எல்லா நிறங்களையும் உள்ளடக்கியது. அனால் அது போன்றதொரு கலவையில் அது போன்றதொரு சேர்க்கையில், எந்தவொரு நிறத்தையும் அது முன்னிலைப்படுத்தாது. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று காணாமல் போய்விடும். சரியாக அதே வகையில் மௌன்மும் ஒர் இசை. உச்சநிலை இசை.

ஆனால் எந்தவொரு ஒசையும் கேட்காத அளவுக்கு மிக ஆழமானதொரு ஐக்கியம் அது.

ஜென் ஞானிகள் இதை, 'ஒரு கை ஒசை' என்கிறார்கள். கேட்க முடியாது. கேட்க முடியாது. கேட்காதபோது, இசை நிகழ்கிறது. அதைக் கேட்பதற்கு, உங்களுக்கு உணர்வுக்கூர்மையும், கொஞ்சம் அதிகமான விழிப்புணர்வும், கொஞ்சம் அதிகமான தியான உணர்வும் தேவை.

நமது உண்மையான கயல்பு. ஒருமுக - பரிமாணம் அல்ல. அது பன்முக - பரிமாணம். அது இயற்கையைப் போன்றது.

கேட்க முடியாத அதை ஒருவர் கேட்கத் துவங்கும்போது, அறிய முடியாத விஷயங்கள் எல்லாம் அவருக்கு அறிய வருகின்றன.

ஒரு கை ஓசையைக் கேட்பதற்கான மற்றும் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு நுட்பமே தியானம். தியானத்தில் நம்மை நாம் கண்டுபிடிக்கிறோம். இதுவே, நம்மைப்பற்றிய இறுதி ஸக்யத்தின் தளம். இங்கு நாம் யார் என்பதை அறிந்து கொள்கிறோம். 'நாம் யார்' என்கின்ற அறிவே'ஞானமடைதல்'.

ஞானமடைதல் என்பது ஓர் இலக்கு அல்ல அது, நாம் போய்ச் சேர வேண்டிய ஒரு இடமாக இருக்க முடியாது, ஏனென்றால், நாம் ஏற்கெனவே அங்கேதான் இருக்கிறோம். நாம் யார் என்கின்ற விழிப்புணர்வை நாம் அடைய வேண்டும், அவ்வளவுதான்.

என் சீடர்களுக்கு நான் சொல்வதுண்டு, அவர்கள் வழிபடும்போது, கடவுளைத் தேடுகிறார்கள். அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடுகிறார்கள்.

தியானத்தின்போது அவர்களே கடவுளாக மாறுகிறார்கள். அவர்கள் தங்களையே ஆழமாக நம்பி, விழிப்புணர்வு உடையவர்களாகிறார்கள்.

'ஒப்புக்கொள்ளுதல்' அசைக்க பரிணமிக்கும்போது ஆனத்தம் மலர்கிறது. நன்றியுணர்ச்சி பொங்குகிறது.

இனியும், குருநாதர் வெளியில் வாழ்வதில்லை. அவர் உங்களுக்குள் இடம்பெயர்ந்து கொள்கிறார். ஆத்ம குருவே இறுதி குரு.