KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/அஹங்காரத்தைப் பந்தயமாக வைத்து ஆடும் ஒரு சூதாட்டம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

அஹங்காரத்தைப் பந்தயமாக வைத்து ஆடும் ஒரு சூதாட்டம்

நாத்திகப் பாதையில் கண்டுணர்ந்திருக்கிறார்கள். புத்தர் கடவுளைப் பற்றிப் பேசினதே இல்லை; ஆனாலும் அவர் ஞானமடைந்தது மட்டுமல்ல. அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் ஞானமடைந்தனர் !

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல; நீங்கள் எவ்வளவ தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதே இங்கு முக்கியம்.

ஸ்த்யத்தோடு இணைந்து வேலைசெய்வதையே நான் சீரத்தை என்று சொல்கின்றேன்.

ச் 'ரக்கை என்பது வெறுமனே, அத்யத்தைக் கேட்பதோ, படிப்பதோ அல்லது நம்புவதோ மட்டுமல்ல, சீர்த்தை என்பது ஸ்தீயங்களோடு செயல்படுவது. அவற்றை நேரடியாகச் செயல்படுத்துவது; அவற்றோடு பரிசோதனைகள் செய்வது; அவற்றோடு விளையாடுவதற்கான துணிவுகொண்டிருப்பது.

சூதாட்டம், தியானம் - இரண்டுக்குமே துணிவு கேவை. சூதாடுவதற்குக் துணிவு வேண்டும். அதேபோல, தியானிப்பதற்கும் நமக்குத் துணிவு தேவைப்படுகிறது.

தியானம் என்பதே இறுதி உச்சமான சூதாட்டம். நாம் பணத்தைப் பணயமாக வைத்து குதாடுகிறோம். தியானத்தில் நாம் நமது அகங்காரத்தைப் பணயமாக வைத்து சூகாடுகிறோம்.

சூதாட்டத்தில், சாதாரண எந்தளவுக்கு சம்பாதிக்கிறோமோ, அதைப் பொறுத்து நாம் அதிக வெற்றிபெற்றவர்களாகிறோம்.

ஆனால் அகங்காரத்தை இழக்கின்ற அளவுக்கே, நாம் அதிக வெற்றிபெற்றவர்களாகிறோம்.

ஆனால், தியான சூதாட்டத்தில் ஒன்று மட்டும் நிச்சயம், நாம் இழந்துவிட்டோம் என்றால், நாம் ஜெயித்துவிட்டோம். இதில் தோற்பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள்!

இங்கு நமது மொத்த அகங்காரத்தையும் பணயப்பொருளாக இழக்கும்போது, அதை முழுழு ஜெயித்துவிடுகிறோம்.

ஆன்மீக வாழ்க்கை, துணிவையே வலியுறுத்துகிறது.

ஆன்மீக வாழ்க்கைக்குத் துணிவு தேவை. அதனால்தான் சுவாமி விவேகானந்தர், அவரின் ஆன்மீக சீடர்களை தீரா: - - 'துணிவு மிக்கவர்களே' என்று அழைக்கிறார்.

'ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு துணிவு ஏன் தேவை? ஆன்மீக வாழ்க்கைக்கு, அமைதிதானே தேவை ?' என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை! ஆன்மீக வாழ்க்கை, துணிவையே வலியுறுத்துகிறது. இந்த ஸ்தீயங்களை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கு, நமக்குத் துணிவு வேண்டும். கடந்த பதினாறு அத்தியாயங்களில், நாம் பல்வேறு உபதேசங்களையும், பல்வேறு புரிதல்களையும், பல வெவ்வேறு நுட்பங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.