KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/உங்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை - ஆனந்தமாக இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

உங்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை - ஆனந்தமாக இருங்கள்

கடவுள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர், நம் அருகிலேயே இருக்கிறார். இருதயம் தயாரான உடனேயே, அவர் உடனடியாக தோன்றுகிறார். அவர் கதவைத் தட்டிக் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால், அது, உங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்குமென்பதால்! அவர், உங்கள் அனுமதி இல்லாமல் நுழைவதில்லை, ஏனென்றால், அவர் மனிதர்களுக்கு மதிப்பளிக்கிறார்.

நீங்கள் அவரை அழைக்கும்வரை, அவர் காத்திருப்பார்.

வழிபாடு என்பது கடவுளை அழைப்பதற்கான ஒரு வழி. மேலும், கடவுளை அழைப்பதற்கான சிறந்தவழி என்பது - நீங்கள் நடனமாடிக் கொண்டிருக்கும்பொழுது, உங்களின் முழுமு இருப்பும் பாடிக் கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு நாடித்துடிப்பும் கொண்டாட்டத்தில் இருக்கும்பொழுது -என்பதாகவே இருக்க வேண்டும். அப்போது அவர் உடனே வருவதற்குத் தயாராக இருப்பார். அங்கு ஒரு சிறிய இடைவெளியும்கூட இருக்காது, அது உடனே நிகழும்.

ஒரேயொரு நிபந்தனையை மை மட்டும் பூர்த்திசெய்யுங்கள்: 'ஆனந்தமாக இருங்கள்'. ஆனந்தம், அன்பிலிருந்தே மடல் விரிக்கும். அன்பு மட்டுமே நிஜமான கவிதை.

இருதயம் நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த வாழ்க்கையும் கவிதையாக, சத்தத்திலிருந்து இசையாக, மரண்பாட்டிலிருந்து உருமாறிவிடும்.

இருக்கும் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த வாழ்க்கையும் உரைநடையிலிருந்து கவிதையாக உருமாறிவிடும்.

அன்பில்லாத இதயம் பாலைவனம் போன்றது. அன்பில்லாத இதயம் உள்ளவர், அழகற்றவராக இருக்கிறார். வாழ்க்கையை நோக்கிய அவரது அணுகுமுறை உணர்ச்சியற்றதாக இருக்கும். அவருக்குள் உயிர்ப்பு இருக்காது; இருப்பின் அழகைப் பாராட்ட வேண்டுமென்ற உணர்வு இருக்காது; கடவுள் கொடுத்திருக்கும் அனைத்திற்கும், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டுமென்ற விழிப்புணர்வு இருக்காது.

எப்படிப் பாராட்டுவது, எப்படி நன்றியுணாவுடன் இருப்பது, நடனமாடுவது, அதிலடங்கியிருக்கும் எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் எப்படிக் கொண்டாடுவது என்பது கவிஞர்களுக்குத்தான் தெரியும்.

அதுவொரு அற்புதமான உற்சாகம். அப்படி இருந்தாலேபோதும். அதுவே தேவைக்கு அதிகமானதாக இருக்கும், ஆனாலும் அதை உணர்வதற்கு, நாம் உணர்வாளர்களாக இருக்க வேண்டும். நாம் உணர்வாளர்களாக வளர வேண்டும்.

உணர்வாளர்களாக வளரக் கற்றுக்கொள்ளுங்கள், அப்படியென்றால் மட்டுமே, வாழ்க்கை ஒரு கருத்தாக இல்லாமல், ஓர் உணர்வாக மாறிவிடும். நாம் சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறிய பின், அதற்கடுத்ததாக ஒரேயொரு படிதான் இருக்கிறது, அது உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவது; அது மிகவும் சுலபம்.

முதல் படி மிகவும் கடினமாக இருக்கும்: சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறுவதற்கு, நாம் நிறைய வேலைகள் செய்தாக வேண்டும். இரண்டாம் படியான, உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவதற்கிடையில் தூரம் அதிகம் இல்லை. பெரும்பாலும் தானாகவே வந்துவிடும்; அதற்காக நாம் ஒன்றும் வேண்டியதிருக்காது. ஒரு கவிஞர், எந்த நிமிடமும் ஞானியாக முடியும். நிஜமான பிரச்சி னை என்னவென்றால், எப்படி நமது சிந்தனையிலிருந்து வெளியே வருவது என்பதும், மேலும் மேலும் உணர்வு நிலையைப்பெறுவது என்பதும்தான்.

மேலும் மேலும் அதிக அன்பு காட்டுங்கள். மேலும் மேலும் அதிகம் உணருங்கள். மேலும் மேலும் அதிக மகிழ்ச்சியாக இருங்கள். அதன் மூலம் மட்டுமே, உங்கள் இதயத்தை வளர்க்க முடியும்.

குரியோதயத்தையும், குரிய அஸ்தமனத்தையும், மேகங்களையும், வானவில்லையும், பறவைகளையும், மலர்களையும், மிருகங்களையும், பாறைகளையும், மக்களையும் பாருங்கள் - அவற்றின் கண்களைப் பாருங்கள். இது ஓர் அற்புதமான பன்முக பரிமாண இருப்பு ஆகும். ஒரு கவிஞரைப்போல எல்லாப் பரிமாணங்களையும் பாருங்கள்-பாராட்டுவதற்கும், உணர்வதற்கும் ! பேரானந்தத்தில் மூழ்குங்கள்!