ஞானம் இல்லாவிட்டாலும்கூட ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால் அது நிஜமான ஆனந்தமாக இருக்காது.
அதைத்தான் மக்கள் சந்தோஷம் என்கிறார்கள். அது வரும், போகும். அது தற்காலிகமானது. நாம் ஆழமான தடுமாற்றத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கும்போது, அது நம்மை விட்டுச் சென்றுவிடும். அதற்கான விலை மிக அதிகம். ஆனால் அந்த விலைக்கேற்ற மதிப்பு அதற்குக் கிடையாது.
அதேபோல, ஆனந்தமாக இல்லாமலும்கூட ஞானத்துடன் இருக்க முடியும். அதுமாதிரியான ஞானம் போலியானது, தவறானது. அதை, 'அறிவு' என்றுதான் சொல்ல வேண்டும். அது கடன் வாங்கப்பட்டது. அதனால் அது சுமையாகத்தான் இருக்கும்.
நமது நம்மைப் பிணிக்கும் பந்தமாகத்தான் இருக்கும். அது, நமது அகங்காரத்தையே வளர்க்கும். ஆனால், நமது சுயத்தை அதனால் வெளிப்படுத்த மட்டுமே ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஒன்றாகப் பெற முடியும்.
தியானியுங்கள். ஒருபுறம், நீங்கள் ஆனந்தமுடையவர்களாக ஆவீர்கள். மறுபுறம், நீங்கள் ஞானி ஆவீர்கள்.
ஒரு வகையான ஆழ்ந்த ஒத்திசைவுடன் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும். இறுதி நிலையில், ஆனந்தமே ஞானமாகவும், ஞானமே ஆனந்தமாகவும் ஆகும்.
ஆனந்தமாக இருப்பதென்பது, பிரார்த்தனை உணர்வில் இருப்பதே. மற்ற அனைத்து வழிபாடுகளும் சம்பிரதாயமாகச் செய்யப்படுபவையே.
நீங்கள் அழகான வார்த்தைகளை உச்சரிக்கலாம், ஆனால் அவை உங்களின் உதட்டளவில் மட்டுமே இருக்கும். வார்த்தைகள் மனத்திற்குச் சொந்தமானவை. ஆனால் இருதயத்திற்கு, வார்த்தைகள் தெரியாது. அது, வார்த்தையற்றது. அது, மௌனமானது. அது, அன்பினால் நிறைந்திருக்கும். இருந்தாலும்கூட, அது, வார்த்தைகளற்றது. அது, உற்சாகமானது. அது, பாடும், ஆனால் மௌன ராகத்தில்! அது, ஆடும், ஆனால், கண்ணுக்குத் தெரியாத வகையில்!
தலை, தூல இருப்பு கொண்டது, ஆகையால் தலையில் இருக்கும்
உறுப்புகள் ஒவ்வொன்றுமே கட்புலனாகும் வண்ணிமே உள்ளது. அது, ஒரு ல்தூல பொருளாக இருக்கிறது. அதுவொரு இயந்திரம். ஆனால் கட்புலனாகாதவற்றின் மையமாக இருப்பது இருதயம். அது, ஒரு ஸ்தூல பொருள் அல்ல. அது, விழிப்புணர்வு.
ஆனந்தமாக இருப்பது எப்படி, நேயத்துடன் இருப்பது எப்படி என்பது இருதயத்திற்குத் தெரியும். ஆனந்தமாக இருப்பது, கடவுள் தன்மைக்கான கதவுகளைத் திறக்கும்.
உண்மையாகத் தேடுபவர்களால் மட்டுமே ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஒன்றாகப் பெற முடியும்.
பொதுவாக மக்கள், தங்கள் வாழ்வில் ஏமாற்றம் வரும்போது மட்டுமே, கடவுளிடம் செல்வார்கள். அது தவறான தருணம், ஏனென்றால்,நாம் ஏமாற்றத்தில் இருக்கும்போது, நாம், நம்மை இறுக மூடிக்கொள்கிறோம். கடவுள், 'கிடைக்கக்கூடியவராகவே' இருக்கிறார், ஆனால், நாம் கடவுளுக்கு 'கிடைக்கக்கூடியவராக' இல்லாதவரை, கடவுளுடைய 'கிடைக்கக்கூடிய' தன்மையினால் எந்தவொரு பயனும் நமக்கு இல்லை.
துக்கத்தில் இருக்கும்போது, மக்கள் கடவுளை நினைப்பார்கள். ஆனால் அவரை நினைப்பதற்கான சரியான தருணம் அல்ல அது. அத்தருணங்களில் வரும் பிரார்த்தனைகள், பெரும்பாலும் துக்கங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவும், நிலைமை மேம்பட
வேண்டும் என்ற என்ற கோரிக்கைகளையும் ஆசைகளையும் கொண்டதாகவே இருக்கும். அவை நிஜமான வழிபாடு கிடையாது.
உண்மையான வழிபாடு, ஒரேயொரு நறுமணத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, வழிபாடு, ஒரேயொரு சுகந்தத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, கோரிக்கைகளையோ யோ அல்லது ஆசைகளையோ அறியாது.
கடவுள், அபரிதமாக அளித்திருப்பதாலும், மிகுந்த கருணையோடு இருப்பதாலும்,
இருதயம் மௌனமாக, அந்த இறைவனின் தாள் பணிகிறது. அதுவே உண்மையான வழிபாடு, அதுவே வழிபாட்டின் மொத்த சாரம்! ஆனநீதமாக இருங்கள், அதுவே உங்களின் வழிபாடாக மாறட்டும்.