சோதித்துப் பார்க்கப்படாதவரை ஸத்யத்தால் உதவ முடியாது
நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இதை நீங்கள் முழுமையாகவும், மிகத் துல்லியமாகவும் செய்யவேண்டிய அவசியங்கூட இல்லை. இதைப் பரிசோதிப்பதற்கான போதியளவு துணிவு பெற்றிருந்தாலே போதும்.
இத்தனை நாட்களாக என்னுடைய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள், 'சரி, இந்த நுட்பங்களை நான் ஏன் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குப் பயிற்சிசெய்யக்கூடாது?' என்று முடிவுசெய்வீர்களானால், அந்த அளவு துணிவு நீங்கள் கொண்டால், அதுவே போதும்.
நீங்கள் தென் பாரதத்தில் இருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு சில மாதமும்கூட நீங்கள் விரும்பினாலும், சில பேச்சுக்களை நீங்கள் கேட்டே ஆகவேண்டும். அரசியல்வாதிகளின் ஒலிபெருக்கி மூலம் நகரம் முழுவதும் ஒலிக்க விடுவார்கள். அதைக் கேட்காமல்
நீங்கள் முழு கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை உங்கள் மையம்வரை உள்வாங்குங்கள்.
ஒருவரும் தப்பித்துவிட முடியாது.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்மீது செயல்பட நாம் அனுமதிக்க மறுத்தால், இந்த வார்த்தைகளை நாம் செயல்படுத்திப் பார்க்கவில்லை என்றால், இந்தக் கூட்டமும் மற்றொரு அரசியல் கூட்டமாக, ஆனால் அமைதியான அரசியல் கூட்டமாக - மாறிவிடும். தயவுசெய்து, நீங்கள் இதை ஓர் அரசியல் கூட்டமாக மாற்றிவிடாதீர்கள்.
'இவர், தாம் எங்கேயோ படித்த விஷயங்களை இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்றுகூட உங்களுள் சிலர்
உங்களின் மொத்த ஜீவனும், ஒரே சிந்தனையால் அதிரட்டும். நினைக்கலாம். இவர் பேசுவது ஸத்யம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இல்லை என்று அர்த்தம்.
இவர் பேசுவது ஸத்யமே என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் நம்பாதிருந்தால், நாள்தோறும் நீங்கள் இங்கே நேரம் அமர்ந்திருக்க மாட்டீர்கள்.
உங்களுக்குச் செய்வதற்கு வேறெந்த வேலையும்
உங்கள் வீட்டுத் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து உங்கள் பொழுதை போக்கியிருக்கலாம். நீங்கள் போவதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் இங்கிருப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறீர்கள். அதனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஏதோ ஸத்யம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதையே காட்டுகிறது. அப்படி நினைத்தால், அதைச் சோதித்துப் பார்க்க ஒருபோதும் தாமதிக்காதீர்கள்.
நீங்கள் முழு கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை உங்கள் மையம்வரை உள்வாங்குங்கள். உங்களின் மொத்த ஜீவனும், அந்த ஒரே சிந்தனையால் அதிரட்டும்.
சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 'ஒரு சிந்தனையை நீங்கள் ஏற்கும்போது, அந்த ஒரே சிந்தனையால் உங்கள் இரத்தம் கொதிக்க வேண்டும். உங்களின் முடிகூட அந்தத் திசையில் நிற்க வேண்டும். உங்களின் எலும்புகள், உங்களின் எண்ணங்கள், உங்களின் உடல், உங்களின் மனம் அனைத்தும் அதற்காகத் துணிந்து நிற்க வேண்டும். உங்களின் மொத்த ஜீவனும் அந்தக் கருத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயமாகும்!'
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரேயொரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கடைபிடியுங்கள். ஒருவேளை அதில் தோல்வி அடைய நேர்ந்தாலும், அது ஸத்யம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், தெளிவடைவீர்கள். உங்கள் தேடலை வேறு பக்கம் தொடர்வீர்கள். அதனால் அதைக் கடைபிடிக்கும் துணிவைக் கொண்டுவாருங்கள்.
நீங்கள் வெற்றி அடைந்தால், அது ஸத்யம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், நீங்கள் ஜீவன்முக்தனாவீர்கள். நீங்கள் ஆனந்தத்தை உணர்வீர்கள்.