வழிபடும் முறை
17.1 அர்ஜுனன் சொன்னது: ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளை ஸ்ரத்தையோடு, ஆனால் வித நெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸாத்வீக வகையைச் சார்ந்ததா? ராஜஸ் வகையைச் சார்ந்ததா? அல்லது தாமஸ் வகையைச் சார்ந்ததா?
அர்ஜுனன் கேட்கிறார்: கிருஷ்ணா, வித நூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு யாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன ?
பண்டைய புராணங்கள் அல்லது நூல்களின் நெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன? அவர்கள் அமைதியான நிலையில் (சாத்வீக) இருக்கிறார்களா, அமைதியற்ற நிலையில் (ராஜஸ்) இருக்கிறார்களா அல்லது அறியாமை நிலையில் (தமஸ்) இருக்கிறார்களா?'
அர்ஜுனன் ஓர் அழகான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். அர்ஜுனனின் கேள்வி, மூன்று மனோபாவங்கள் அல்லது மூன்று குணங்களைப் பற்றியதாக இருக்கிறது.
வழிபாடு என்பது நமது சக்தி நிலைகளையும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள், கோயில்களுக்குப் போவது, புனித நதிகளில் நீராடுவது, பூஜைகள் போன்ற உடல் நிலையிலான நுட்பங்கள் மூலமாக வழிபாடு செய்வதையே சௌகரியமாக உணர்வார்கள். சக்தியளவில் பார்க்கும்போது, இவை எல்லாம் நிலசக்தியோடும் நீர்ச்சக்தியோடும் தொடர்பு கொண்டவை.
மற்றொரு சாரார், யாகம் அல்லது ஹோமம் போன்ற செய்வார்கள். இவை நெருப்பு சக்தியோடு தொடர்பு கொண்டவை. இதன் தாத்பாயம் என்னவென்றால், நெருப்பு சக்தியானது, உச்சாடனங்களின்மூலம், மந்திர அந்த ஹோம குண்டங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் குடத்து நீருக்குள் ஏற்றப்படுகிறது. பிறகு, சக்தியூட்டப்பட்ட இந்நீர், விக்ரஹங்கள் மீதும், அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் மீதும், நிலத்தின் மீதும் தெளிக்கப்படும். அதன்மூலம் இவையனைத்துமே சக்தியூட்டப்படும்.
அடுத்த பஞ்சபூத சக்தியான காற்று சக்தி, பிராணாயாமம் போன்ற சுவாச நுட்பங்கள் மூலமாகப் பெறப்படுகிறது. சிவ சூத்திரத்தின் முதல் ஒன்பது சூத்திரங்களில், சிவபெருமான் அவர் பக்தையான தேவிக்கு இந்த நுட்பங்களைத்தான் விளக்குகிறார்.
பஞ்சபூத சக்திகளுள் மிகவும் ஸூஷ்மமான ஆகாச சக்தியை, நாம் தியானத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும், ஆனால் இதற்குப் புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
வழிபாட்டின் அல்லது யாகத்தின் ஒவ்வொரு வடிவமுமே, ஒவ்வொருவரின் இயல்பையும் மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் வேத நூல்களில் விரிவாக
விளக்கப்பட்டிருக்கின்றன, வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல நெறிமுறைகள் வேதங்களில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் அவரின் சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்தால் என்ன நடக்கும் என்று அர்ஜுனன் கேட்கிறார்.
இதுவொரு அருமையான கேள்வி. தமிழ்நாட்டில் ஒரு ஞானி, தமது கண்களைத் தோண்டி எடுத்து, சிவலிங்கத்திற்கு வைக்கும் அளவிற்கு மிகத் தீவிரமாகச் சிவனை வழிபட்டு வந்தார். இன்னும் சில ஞானிகள், மாமிசத்தைக்கூட கடவுளுக்குப் படைத்திருக்கிறார்கள்.
ஞானிகள், பல தெய்வங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப வழிபட்டிருக்கிறார்கள், அவர்கள் வழிபாட்டு முறைகளில் நிற்கவில்லை. ஆனால், இந்த ஞானிகள் தாங்கள் செய்யும் வழிபாட்டு முறையை ஒருமுகப்பட்டு செய்தார்கள். அவர்களிடம் ஸ்ரத்தை இருந்தது. அதுதான் முக்கியம்.
பல ஞானிகள், தங்கள் இஷ்ட தெய்வங்களை அவரவர்கள் விருப்பத்திற்கூற்ப வழிபட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஞானிகள் தாங்கள் செய்யும் வழிபாட்டு முறையை ஒருமுகப்பட்டு செய்தார்கள்.
கேள்வி இதனோடு அர்ஜுனனின் தொடர்புடையதே
உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவைப்படுவதெல்லாம், ஸத்யத்துடனான பரிசோதனையைச் செய்துபார்ப்பதற்கான துணிவும், ஸ்ரத்தையும்.
நாம் எல்லாவற்றையும் கேட்கிறோம். எங்கெல்லாம் சொற்பொழிவுகள், ஆன்மீக விளக்கங்கள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் சென்று, யார் பேசினாலும் கேட்கிறோம்.
நாம் எல்லாப் புத்தகங்களையும் படிக்கிறோம். அந்த அறிவைப் பரிசோதிப்பதற்கான சூழ்நிலை நேர்கொள்ளும்போது, அதைச் செயலில் காட்டுவதில்லை. அப்போது நீங்கள், ''நடைமுறை
தேவைகளுக்காக, வேண்டியதாக இருக்கிறது, ஸ்வாமிஜி. அவை இல்லையென்றால், எங்களால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்...?' என்று கேட்பீர்கள்.
நடுங்குதல் - ஒரு கோழைத்தனம்
விட்டுக்கொடுத்தல் புரிந்துகொள்ளுங்கள், எதிலும் நடுங்கும் வழக்கத்தையே கொண்ட ஒருவர், வாழ்க்கையில் எதையும் அனுபவிப்பதில்லை; ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையிலும்கூட!
ஒரேயொரு ஸத்யத்தை உணர்வதற்கான ஸ்ரத்தைவேகூட போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. பெரிதாக ஒன்றும் நாம் செய்ய வேண்டியதில்லை. ஆழமாக அன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஏதோவொன்றைப் பெரிதாகச் செய்துவிட்டதாலேயே ஒருவரை, 'ஒரு பெரிய மனிதர்' என்று சொல்லிவிட முடியாது. அவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் எப்படி அதைச் செய்கிறார் என்பதுதான் முக்கியம்.
உதாரணமாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிறந்த ஞானியான நம்மாழ்வார், தம் வாழ்க்கை முழுவதும், விஷ்ணு பகவானுக்காகப் பூமாலை தொடுக்கும் தொண்டு ஒன்றையே செய்துவந்தார். அவர் வேறெதையும் செய்யவில்லை. நாள்தோறும் தோட்டத்திலிருந்து
நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதை வெளிப்படுத்தும் துணிவைக் கொண்டிருங்கள்.
மலர்களைக் தொடுத்து, அதைக் கடவுளுக்குச் சாற்றுவது என்ற ஒரு தொண்டினை மட்டுமே செய்துவந்தார்.
அவர் ஞானம் அடைந்தார்.
பல செய்துவிடவில்லை. அவர்கள், சின்ன சின்ன விஷயங்களையேகூட 'சிறந்த முறை'யில் செய்தனர். அவர்கள், அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இன்னொரு ஞானி, இன்னொரு மாலைகூடக் கட்டித் தரவில்லை. அதற்குப் பதிலாக, நாள்தோறும் அவர் சிவலிங்கத்தின் மீது ஒரு கல்லை விட்டெறிவார். அவர் பெயர் ஸாக்ய நாயனார் (ஸாக்ய என்றால் புத்த மரபைக் குறிக்கிறது, நாயனார் என்றால் சிவ பக்தர்களைக் குறிக்கிறது).
எப்படியோ அவர், ஒரு புத்த துறவியாக ஆகிவிட்டார். அவர் புத்த துறவி என்பதால், அவரால் மற்றவர்கள் முன்னிலையில், சிவலிங்கத்தை வழிபட முடியவில்லை. இருந்தாலும், அவருக்கு சிவன் மீது தீராத மரியாதையும், பக்தியும் இருந்து வந்தது.
எதிலும் நடுங்கும் வழக்கத்தையே கொண்ட ஒருவர், வாழ்க்கையில் எதையும் அனுபவிப்பதில்லை : ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையிலும் கூட!
புத்த மதத்தில், குடும்பத்திற்கு ஒரு நபரை, சிறுவயதிலேயே புத்த மடத்திற்குக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள், அக்குழந்தையை ஒரு புத்த துறவியாக வளர்த்து ஆளாக்குவார்கள். அப்படித்தான், ஸாக்ய நாயனாரும் அவரது குடும்பத்தினரால் ஒரு மடத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தார். இருந்தாலும், அவருக்கு சிவன் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. நாள்தோறும் அவர், சிவன் கோயிலுக்கு அருகில் செல்வார். அதுவொரு கோயில்கூட கிடையாது, ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருக்கும், அவ்வளவுதான்.
ஒரு கல்லை எடுத்து, அதை ஒரு மலராகப் பாவித்து, தூரத்திலிருந்தே அதை சிவலிங்கத்தின் மீது எறிந்துவிட்டுச் செல்வார். இதைப் பார்த்து யாராவது, ''என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், ''நான் சிவலிங்கத்தின் மீது கல்லை எறிகிறேன்,'' என்று சொல்வார்.
அப்படி ஒருநாள் கல்லை எறியும்போது, திடீரென்று அங்கு வந்த ஒரு வயதானவர், ''என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். இவரும் வழக்கம்போல், ''நான் சிவலிங்கத்தின்மீது கல்லெறிகிறேன்,'' என்று சொன்னார்.
'நீ கல்லெறியலாம். ஆனால் நீ கல்லெறியும் விதத்தைப் பார்த்தால், அதில் உன்னுடைய பக்திதான் தெரிகிறது. நீ யார்?'' என்று கேட்டார்.
ஸாக்ய நாயனாரும், "எப்படியோ, நான் புத்த குடும்பத்தில் பிறந்துவிட்டேன், இருந்தாலும் எனக்கு சிவன் மீது ஆழமான பக்தி இருக்கிறது. நாள்தோறும் நான் கல்லை எறிவதுபோல, என்னுடைய 'இருப்பை'யே அவருக்கு அளித்து வருகிறேன்,'' என்றார்.
உடனே வயதான உருவில் வந்த சிவன் அவருக்குக் காட்சி தந்து, ஞானமருளினார்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாலும், வீட்டைத் துடைத்துச் சுத்தம்செய்து கொண்டிருந்தாலும்கூட, அந்தக் கணத்தில் அதை முழுமையாகவும் ஆழ்ந்த ஸ்ரத்தையோடும் செய்தால், அதுவே போதுமானது. அந்தக் கணத்தில் வாழுங்கள்.