KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

முன்கூட்டியே தீர்மானிப்பவர்களுக்கும், ஒப்புக்கொள்ளுக்கும், ச்ரத்தையோடு இருப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை மிக அழகாக விளக்குகிறார் கிருஷ்ணர். மேலும் அவர், அவர்களின் வாழ்க்கை முறை, குணங்கள் மற்றும் ஒருவர் எப்படி அதீவ குண ச்ரக்கையை அடைவது. கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்ரீயங்களை உள்வாங்குவது எப்படி என்பனவற்றை விவரிக்கிறார்.

முன்கூட்டியே கொள்பவர்கள் மட்டத்திற்கும், ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்திலிருந்து ச்ரக்கை மட்டத்திற்கும் எப்படி நம்மை உயர்த்துவது என்பதைப் பற்றிய அழகான விளக்கங்களையும் போதனைகளையும் படிப்படியாக அளிக்கிறார். இங்கிருக்கும் நீங்கள் எல்லோருமே ஏற்கெனவே நம்புபவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் முன்கூட்டியே தீர்மானிப்பவர்கள் என்றால், நாள்தோறும் உங்களால் இங்கே வந்து உட்கார முடியாது. அங்கு ஓரமாக நின்று, இரண்டு மூன்று வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இவ்விடத்தைவிட்டு அகன்றிருப்பீர்கள்.

இங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே பலர் வருகிறார்கள். அவர்கள் இங்கே வந்து அமர மாட்டார்கள்; நின்றபடியே இருந்துவிட்டு, இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்த உடனேயே, கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நிமிடங்கள்கூட, அவர்களுடைய பாதங்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காது இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று கால்மாற்றி நின்றிருப்பார்கள்! அதன் பிறகு, "சரி, போதும். இளவயதினராக இருக்கும் இந்த ஸ்வாமி, எனக்கு ஏற்கெனவே தெரியாத வேறெதைச் சொல்லிவிடப் போகிறார்?'' என்று இங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.

'நமக்குத் தெரியாது' என்பதல்ல நம்முடைய பிரச்சினை. 'நமக்கு நிறைய தெரியும்' என்பதே நம்முடைய பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால், நம்மால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

நாள்தோறும் இங்குவந்து நீங்கள் இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பது, குறைந்தபட்சம் நீங்கள் ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள் மட்டத்தில் இருந்தால்தான், உங்களால் இங்கே உட்கார முடியும்.

இப்போது ச்ரத்தை மட்டத்திற்குச் 'சட்டென' உயருவதுதான். கீரத்தையாளர் மட்டத்திற்கு உயர்ந்த அக்கணமே, உங்களால் ஸத்யத்தை உணர முடியும். நீங்கள் கிருஷ்ணராக மாறிவிடுவீர்கள். உங்களால் கிருஷ்ண உணர்வை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

இப்போது ச்ரத்தையை அனுபவப்பூர்வமாக உணரும் நுட்பத்திற்குள் செல்ல உணர்வு நுழையத் தொடங்குகிறோம்.

கவனியுங்கள், இங்கே நீங்கள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். ஒன்று, நீங்கள் முழுமையான ச்ரத்தையாடு இருந்து, நான் ஸதீயம் என்று சொல்வதை சத்தியம் என்று நம்புங்கள். அல்லது நான் சொல்வதெல்லாம் பொய் என்பதில் மிகத்தெளிவாக இருங்கள்.

நான் சொல்வதை உங்களால் செயல்படுத்த முடிந்தால், அதை உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால், நான் ஸத்யத்தைப் பேசுகிறேன். அப்படி உங்களால் செயல்படுத்த முடியவில்லையென்றால், இந்த ஸத்யத்தினால் ஆகப்போகும் பயன்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

இந்தப் பதினெட்டு நாட்களுக்கு, உங்களின் நேரத்தில் மூன்று மணி நேரமும், என்னுடைய நேரத்தில் மூன்று மணி நேரமும் வீணாகும், அவ்வளவுதான்.

இதை உங்களால் உள்வாங்க முடியவில்லையென்றால், இது உங்கள் வாழ்க்கையில் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தவில்லையென்றால், இது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலே. இங்கு நிகழ்ந்தவையெல்லாம் ஸத்யம் அல்ல.

என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய விழிப்புணர்வில் ஏற்படுத்தும் உணர்வுமாற்றமே, விளைவுகளே என்னுடைய வார்த்தைகள் ஸத்யமா, பொய்யா என்பதை முடிவுசெய்யும்.

நான் சொல்வது ஸத்யமா, இல்லையா? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். உங்களால் மட்டுமே அதை முடிவுசெய்ய முடியும். வேறு யாரும் உங்களுக்காக அதை முடிவுசெய்ய முடியாது. உங்களுக்காக நான் முடிவுசெய்ய முடியாது.