பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)
அகங்காரம் இறந்தால் ஒழிய, கடவுள் உங்களுக்கு முடிசூட்ட மாட்டார்.
கேள்வி: ச்ரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லையே. அதில் நிறைய படுகுழிகள் இருக்கின்றதே. நாங்கள் ஆனாத்தத்தை அனுபவிக்கும் போதுகூட, எங்களால் அதை உணர முடியாமல் போகிறதே. நாங்கள் இதிலிருந்து மீள்வது எப்படி?
ஆனந்தம் சதாரணமாகக் கிடைத்துவிடாது. நீங்கள் அதற்காகப் போராட வேண்டும். அது எப்போதும் அப்படித்தான் இருந்துவருகிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இங்குதான் கீர்த்தை உள்ளே நுழைகிறது.