KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/'நீங்கள்' அங்கு இல்லாதபோது மட்டுமே, முடிசூட்டப்படுகிறீர்கள்.Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

'நீங்கள்' அங்கு இல்லாதபோது மட்டுமே, முடிசூட்டப்படுகிறீர்கள்.

அந்த முரண்பாட்டைத் தியானியுங்கள். 'நீங்கள்' இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; 'நீங்கள்' மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள். நீங்கள், தலையின் உச்சியில் இருக்கும் சக்தி மையமான ஸ்வரஸ்ராரத்தை எட்டுவீர்கள்.

நீங்கள் இருக்கும்போது, நாலாபுறங்களிலிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லாப் பரிமாணத்திலிருந்தும் கடவுள் உங்களை நிரப்புவார். நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள். அதுதான் முடிசூட்டுவிழா.

கடவுள் மனிதனுக்கு முடிசூட்டாத வரை, அவன் வாழும் வாழ்க்கை வீணே. அவன்

நீங்கள் முற்றிலும் வெறுமையாக இருக்கும்போது, எல்லாத் திசைகளில்ருந்தும், எல்லாப் பரிமாணத்திலிருந்தும் கடவுள் உங்களை நீரப்புவார். நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள். அதுவே முடிசூட்டுவிழா.

வாழவில்லை, வெறுமனே இருக்கிறான். நரகத்தில் வாழ்வதற்காக வெறுமனே அவன் இருக்கிறான்.

'வாழ்வது' என்றால் ஜீவனுடைய உச்ச நிலையில் இருப்பதே. அது ஜீவனின் விழிப்பு நிலையாகும். ஒரு பாறை இருக்கிறது. சராசரி மனிதனும் தான் வாழ்வதாக நம்புகிறான்; ஆனால், அவன் பாறையைப்போலத்தான் இருக்கிறான். ஒரு புத்தரோ அல்லது கிருஷ்ணரோதான் உண்மையில் வாழ்கிறார்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும்? நாம் எப்படி இந்த இறுதி நிலையை எட்டுவது ?

'நீங்கள்' இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; 'நீங்கள்' மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள்.

'மறைந்துவிடுவகன்' நம்மால் அந்த நிலைக்கு வரமுடியும். அதனால் கரைந்துவிடத் தயாராக இருங்கள். குருவிடம் நீங்கள் எல்லாம் துல்லியமாகப் பொருந்திவிடும் ; ஒர் ஆழ்ந்த அமைதி தோன்றும். நீங்கள் இல்லாதபோது, அங்கே முரண்பாடான கருத்துக்கள் இருப்பதில்லை. அது ஓர் இசையைப்போல, ஓர் கவிதையைப்போல எல்லாமே கொண்டாட்டமாக இருக்கும்.

எப்போதுமே நாம் இருப்பதைத்தான் கேட்டுக்

கொண்டிருக்கிறோம்; இதனால்தான், உள்ளிருந்து எழும் குரலை நாம் தொடர்ந்து தவறவிடுகிறோம். கடவுள், நமது உள் மையத்திலிருந்து பேசுகிறார். குருவின் மொழியில் நமது ஜீவனின் எதிரொலியைக் கேட்கிறோம்.

குரு, ஒரு கண்ணாடியைப்போலச் செயல்படுகிறார். அவர் நம்முடைய நிஜமான முகத்தைப் பிரதிபலிக்கிறார். கடவுள் நம்மிடம் எதைச் சொல்ல விரும்புகிறாரோ, அதை குரு நம்மிடம் சொல்கிறார். ஏனென்றால், நமது உள்ளார்ந்த ஜீவனின் குரலை நாம் கேட்பதில்லை.

குருவின் பேச்சை நாம் கேட்கத் தொடங்கியதும், நாம் மெதுமெதுவாக குருவின் வார்த்தைகளுக்கும், நமது உள்ளார்ந்த குரலுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைக் கவனிக்கத் தொடங்குகிறோம்.

குரு, நமது ஆன்மாவின் சார்பாகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் குருவிடம்சாணடைவது என்பது வோறு யாரிடமோ சரணடைவது அல்ல; அது நம்முடைய சொந்த மையத்திடமே சரணடைவது.

நாம் மேலோட்டமாகவே, வெளிவட்டத்திலேயே வாழ்கிறோம், நாம் மனத்தில் வாழ்கிறோம். நமக்குள் இருக்கும் அமைதியை, மெல்லிய குரலைக் கேட்க அனுமதிக்காத அளவுக்கு, மனம் எப்போதும் மிகவும் இரைச்சலாக இருக்கும்.

நாம் வெளிப்புறச் சத்தங்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதால், கருவியைப்போலக் கடவுள் சொல்ல முயற்சிக்கிறாரோ, அதையே குரு வெளியிலிருந்து சொல்கிறார்.

வெளியில் இருக்கும் குருவின் வார்த்தைகளைக் கேட்கத் தொடங்கவிட்டால், உள்ளுக்குள் இருக்கும் குருவின் குரலையும் கேட்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மெது மெதுவாக விழிப்புணர்வாக மாறுவீர்கள்,

குருவோடு இருப்பதென்பது, உள்முகமாகத் திரும்பத் தயாராகுதலாகும். அப்போது மட்டுமே நீங்கள், உங்கள் உள்ளுணர்வு, உங்களிடம் தொடர்ந்து என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கேட்க முடியும்.

நிகழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவீர்கள்.

குரு சொல்லும் விஷயங்களை நீங்கள், ஏதோவொரு வகையில், உங்களுக்குச் காட்டிலும், உங்களின் சொந்த உடலைக் காட்டிலும் நெருக்கமானதாக, சொந்தமானதாக உணர்வீர்கள். ஆகவேதான், கிழக்கத்திய நாடுகளில் குருவை. 'கடவுள்' என்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், அவர்கள் குருவை, 'கடவுள்' என்று ஏன் அழைகிறார்கள் என்று!

குரு, உங்களின் உண்மையைப் பிரதிபலிப்பதால், குரு, உங்களின் உண்மையான ஜீவனைப் பிரதிபலிப்பதால், அவர் கடவுளைப் பிரதிபலிக்கிறார்.

குருவோடு இருப்பதென்பது, உள்முகமாகத் திரும்பத் தயாராகுதலாகும். அப்போது மட்டுமே நீங்கள், உங்கள் கண்களை மூடி, உள்முகமாகப் பார்க்க முடியும்; உங்கள் உள்ளுணர்வு, உங்களிடம் தொடர்ந்து என்ன என்பதை உங்களால் கேட்க முடியும்.

மேலும், உள்ளுணர்வு எப்போதும் சரியானதாகவே இருக்கும். பட்டறிவு சொல்வது இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அது, 'இதுவா' அல்லது 'அதுவா' என்ற சந்தேகத்தையே எப்போதும் கொண்டிருக்கும். அது, சந்தேகமில்லாமல் ஒருபோதும் இருக்காது.

உள்ளுணர்வுகொண்ட மனிதன் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை ; ஏனென்றால், அவன் ஒருபோதும் எதையும் தவறாகச் செய்வதில்லை. அவன், தனக்குள் கேட்கும் கடவுளின் குரலைப் பின்பற்றிச் செல்கிறான்.

அனால் உள்ளுணர்வில், சந்தேகம் என்பதே இருக்காது; அது, அறியும். உள்ளுணர்வுகொண்ட மனிதன் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை ; ஏனென்றால், அவன் ஒருபோதும் எதையும் தவறாகச் செய்வதில்லை. அவன், தனக்குள் கேட்கும் கடவுளின் குரலைப் பின்பற்றிச் செல்கிறான்.

ஆனந்தம் - கடவுள் தன்மையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்