கேள்வி: ஸ்வாமிஜி, ஆனந்தத்திற்கான பாதை தனிமையான பாதை அல்ல, அது தனித்த பாதை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விளக்க முடியுமா?
எல்லாத் தேசங்களின் பழங்காலக் கதைகளும், கடவுள் தனிமையில் இருந்தார். தம் தனிமையை வெறுத்த அவர் இந்த உலகைப் படைத்தார் என்று சொல்கின்றன. நான் அந்தக் கதைகளை எழுதியிருந்தால், அபரிமிதமான வளங்களோடு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அதைப் பகிர்ந்துகொள்ள அவருக்கு யாராவது தேவைப்பட்டனர். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் படைத்தார் என்று சொல்லியிருப்பேன்.
அபரிம்தமான வளங்களோடு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே இந்த மொத்தப் பிர்பஞ்சத்தையும் படைத்தார்.
கடவுள், தனிமையிலும் மகிழ்ச்சியற்றும் வேலையற்றும் இருந்தார் என்பதற்காக இந்த உலகைப் படைக்க முடிவுசெய்தார் என்பது அல்ல. இந்த முடிவில், துக்கத்தின் சாயல் இருக்கிறது. இது எப்படியிருக்கிற தென்றால், அவர் தம்மை ஏதாவதொரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்வதற்கும், உற்சாகமாக இருப்பதற்கும் அவருக்கு வேறொரு நபர் தேவைப்பட்டார் என்பது போல் இருக்கிறது.
தனிமையால் பாதிக்கப்பட்ட
மனிதர்களே இதுபோன்ற கதைகளை உருவாக்கி இருப்பார்கள்! புத்தர் இந்தக் கதைகளை எழுதவில்லை. அது மட்டும் நிச்சயம். பெரும்பாலும் எல்லோருமே ஏதோவொரு தருணத்தில் தனிமையால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட தனிமையில் இருக்கும்போது, அவர்கள் பிறரைக் குடுகிறார்கள். அவர்கள் தங்களின் தனிமையைக் கடவுள் மீது ஏற்றியிருக்கிறார்கள்.
அவர்கள் தனிமையில் இருக்கும்போது, நிச்சயம் முடியாது. அதனால் அவர்கள், 'கடவுள் மட்டும் தனிமையில் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும் ?' என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களை அதேபோன்றே கடவுளையும் நினைக்கிறார்கள்.
நான் அந்தக் கதைகளை எழுதியிருந்தால், அபரிம்தமான வளங்களோரு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அந்த மகிழ்ச்சி யைப் பகிர்ந்துக்கொள்ளவே இந்த மொத்தப் பிரபஞ்ச த்தையும் படைத்தார் என்று சொல்லியிருப்பேன்.
அவர்களுக்கு மற்றொருவர் தேவைப்படுகிறார். ஆணுக்கு ஒரு பெண் தேவை. பெண்ணுக்கு ஓர் ஆண் தேவை. நமக்குக் கண்டிப்பாக இன்னொரு நபர்
தேவை. இல்லையென்றால் நாம் தனிமையில் மூழ்கிவிடுவோம்.
'எது கடவுளாக இருக்க வேண்டும், எது தெரிந்துகொள்ளப்பட வேண்டும், எது விழிப்பிக்கப்பட வேண்டும்' என்பதைப் பற்றி அறியாதவர்களே இதுபோன்ற கதைகளை எழுதியிருப்பார்கள். புத்தர் இந்தக் கதைகளை எழுதியிருந்தால், அது முற்றிலுமொரு வித்தியாசமான மணத்துடன் இருந்திருக்கும்.
இவற்றை ஒரு சூஃபி ஞானி எழுதியிருந்தால், 'கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக, ஆனந்தமாக, நகைச்சுவை உணர்வோடு இருந்தார். அதை பகிர்ந்துகொள்ள யாராவது வேண்டுமென விரும்பினார். அவர் நிரம்பி வழிந்தார், அதனால் பகிர்ந்து கொண்டாரே தவிர, அவருக்கு மற்றவர்களின் துணை தேவைப்பட்டது என்பதால் அல்ல. அவரே அவருக்குப் பொதுமானவர். ஆனால் அது, தாங்கவொணா அளவிற்கான எல்லையில்லா ஆனந்தம். அதனால் அதைப் பகிர்ந்துகொள்ள அவர் இந்த உலகத்தை உருவாக்கினார்' என்று எழுதியிருப்பார்!
தனித்த பாதை என்பது தனிமையான பாதை என்பதிலிருந்து வேறுபட்டது. தனித்த பாதை, முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. தனிமை, சிதறிப்போகச் செய்கிறது.
தனித்த பாதை என்பது தனிமையான பாதை என்பதிலிருந்து வேறுபட்டது. தனித்த பாதை, முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. தனிமை, சிதறிப் போகச் செய்கிறது.
கடவுள் அவரின் தனித்துவத்திலிருந்து இந்த
உலகைப் படைத்தார், தனிமையிலிருந்து அல்ல. தாம் கருணையால் நிறைந்திருப்பதாக உணர்ந்ததனால், அதை அவர் எல்லா ஜீவன்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் வைத்திருந்ததையெல்லாம் எல்லா ஜீவன்களுக்கும் அன்பளிப்பாகக் வேண்டியிருந்தது.
ஒவ்வொன்றுமே அவருடைய அபரிமிதமான வளத்திலிருந்து வந்த அன்பளிப்புதான். அதை உணர்வதே, நன்றியுணர்வோடு இருத்தலாகும். அதை உணர்வதே பிரார்த்தனையாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே: மேலும் மேலும் அதிக நன்றியுணா்வோடு இருங்கள். நன்றியுணர்வுதான் பிரார்த்தனையின் சாரம். எல்லாவற்றையும் ஒரு அன்பளிப்பாகப் பார்த்தால் மட்டுமே, அந்த நன்றியுணர்வு சாத்தியம்!
ஒவ்வொரு சுவாசமூம் ஓர் அன்பளிப்பே! என்னவொரு பரிசு! விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு அது மிகவும் மதிப்புமிக்கது. அதற்கு விலையே கிடையாது. நீங்கள் வாழ்க்கையை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புலன் உணர்வுகளை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் படைப்புத்திறனை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புத்திசாலித்தனத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. அவை உங்களுக்கு அளிக்கப்பட்டவை.
நீங்கள் அவற்றைக் கேட்பதற்கு முன்பாகவே, அவை உங்களுக்குக்
கொடுக்கப்பட்டு விட்டன. உங்களுக்குள் கொஞ்சம் தேடினால் போதும், பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களாகக் காண்பீர்கள். கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.