KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/பகிர்ந்துகொள்வதே, ஞானத்தின் நோக்கம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

பகிர்ந்துகொள்வதே, ஞானத்தின் நோக்கம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞான குருமார்கள் என்ன செய்கிறார்களோ, அது நீங்கள் செய்ய வேண்டியதிலிருந்து முற்றிலும் வேறானது. உண்மையில், நீங்கள் செய்ய வேண்டியவற்றுக்கு முற்றிலும் எதிரான வகையில்தான் அவர்கள் செய்ய வேண்டியது உள்ளது.

நீங்கள் தங்களைக் கொள்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும்.

உத்தரகாசியில் இருந்த இந்த நாக லாதூ ஞானம் அடைந்தவர்தான் என்றாலும், அவரால் எல்லோருக்கும் உதவ முடியாது, எவருக்கும் அவர் சொல்லிக் கொடுக்க மாட்டார். எவரையும் அவர் ஞானம் அடையச் செய்யவும் முடியாது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்களோரு டு சேர்ந்து வேலை செய்வதில்லை. அவர் அந்த வகையானவர்.

மற்றொருபுறம், ஸாத்வீகத்தை உணர்ந்த சிலர், அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்கள். சுவாமி யோகானந்தர் போன்றவர்கள் மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் சிறந்த ஆன்மாக்கள். அதுவே அவர்களின் நோக்கமாக இருந்தது.

கிருஷ்ணரைப்போல், பகிர்ந்துகொள்பவர்களை, அவதாரங்கள் என பாகவதம் அடையாளப்படுத்துகிறது.

ஸௌர்தாயத்வம் என்றால் ஒருவரைப் பார்க்க உடனேயே, நாம் அவர் முன் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென நம்முள் உணர்வது.

வேதங்களைத் தொகுத்தவரும், பாகவதம் மற்றும் மகாபாரதத்தை எழுதியவருமான வியாஸ் பகவானின் மகனான ஷுகர் மீரும்த்திடம் ஒருமுறை, ''ஷுகரைப் பார்ப்பதற்கும், வியாஸரைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?'' என்று வினா கேட்கப்பட்டது.

ஷுக பார்ம்பர் மிக அழகாகச் சொல்கிறார்: ஸௌர்தாயத்வம், தேஜஸ், ஸரஸ்வத்யம், லக்ஷ்மித்வம்.

ஸௌர்தாயத்வம் என்றால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே, நாம் அவர் முன்னால் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென நம்முள் உணர்வது. அவருடைய கருணையைப் பருகுவதற்காக, நாம் அவரை நோக்கித் தானாகவே மீண்டும் திரும்புவோம். எது சுலபமாக நமது மனத்தை ஈர்க்கின்றதோ, அது ஸௌர்தாயத்வம்.

அடுத்தது தேஜஸ் - கூர்மையான சுடர்விடும் தெளிவும், சக்தியும்.

மூன்றாவது, ஸரஸ்வத்யம் - கடினமான, சிக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள். தேவி சரஸ்வதி குடியிருக்கும் அவர்கள் நாவிலிருந்து இது அழகாக வெளிப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது லக்ஷ்மித்வம். அவர்களின் ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அவ்வண்ணமே நிகழும். இந்த நான்கு பண்புகளையும் வெளிப்படுத்துபவரே அவதாரம்.

இங்கே கிருஷ்ணர், ஸௌர்தர்யமும் ஸௌம்யத்வமும் அவசியமான பண்புகள் எனும்போது, இப்போது நாம், நமது வாழ்க்கையிலும் இந்தப் பண்புகளைக் கட்டாயமாக உள்வாங்கியாக வேண்டும்.