KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/சாத்வீகமாக இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

சாத்வீகமாக இருங்கள்

அறியாமையையும் சுய-சித்ரவதையையும் அடிப்படையாகக்கொண்ட தவங்கள், மற்றவர்களுக்கு அழிவையோ அல்லது பாதகங்களையோ ஏற்படுத்தும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதுபோன்ற செயல்கள் அறியாமையின் காரணமாகவே செய்யப்படுகின்றன. இதையே நான் இதற்கு முன் பில்லி சூன்யங்களைப் பற்றி பேசும்போது குறிப்பிட்டேன்.

எந்தப் பில்லி சூன்யங்களும் உங்களை எதுவும் செய்ய முடியாது. எந்த கெட்ட ஆவியையும் உங்கள் மீது யாரும் ஏவிவிட முடியாது. ஞான குருமார்களால் மட்டுமே சாபம் கொடுக்க முடியும், ஆனால் ஒரு ஞானி சாபம் கொடுக்க மாட்டார். அவர் ஆசீர்வதிக்க மட்டுமே செய்வார்.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுங்கள். ஆர்வம் காட்டாதீர்கள். இவையெல்லாம் தாமஸிலிருந்து வெளிப்படுபவை. அவை ஒருபோதும் வேலை செய்யாது. அவை அதைத் தூண்டிவிடும் நபர்களைத்தான் தொல்லைப்படுத்தும். ஒருபோதும் மற்றவர்களுக்கு இடையூறு செய்ய முடியாது.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் முழுமையான சரணாகதி இயல்பிலிருந்து செய்யப்படும் தவமே ஸாத்வீக நிலையில் இருக்கிறது

ருஜஸ் மதிப்பிற்காகவும், மரியாதைக்காகவும், பிறர் வணங்குவதற்காகவுமே தாரங்களையும் தவங்களையும் மேற்கொள்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த முறையில் மேற்கொள்ளப்படும் தவம் அல்லது காரியங்கள் நிலையாக நீடிப்பதில்லை. மக்கள், அவர்கள் காலில் விழுந்து வணங்கும் வரையில்தான், அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களை மதிக்கவில்லையென்றால், அவர்கள் தங்களின் தவத்தை நிறுத்திவிடுவார்கள்.

பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் தவம்... ஞானம் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமும்கூட... ரடூர் மனநிலையிலிருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவதுதான்.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் முழுமையான சரணாகதி இயல்பிலிருந்து செய்யப்படும் தவமே ஸ்தீ நிலையில் இருக்கிறது, ஆன்மீக மதிப்பு உடையதாகிறது.

என்னுடைய தவம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பரிவீராஜக வாழ்வை மேற்கொண்டு, பாரதம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தபோது, பல கடினமான விஷயங்களைச் செய்தேன். அவற்றில் பலவற்றை நான் ஒதுக்கியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

ஞானமடைதலுக்கான கதவைத் திறக்கும் உண்மையான சாவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், நான் பத்தாயிரம் சாவிகளைப் பரிசோதித்துப் பார்த்தேன். நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று என்னுடைய பக்தர்களுக்குச் சொல்வதுண்டு. அதற்கு எளிமையான, சுலபமான, விரைவான வழி இருக்கிறது!

ஞானத்திற்கான என்னுடைய ஆன்மீகப் பயிற்சியில் நான் போராடிக் கொண்டிருந்தவரை, அது என்னை விட்டு விலகியே இருந்தது. நான் பல ஆண்டுகளாக என்னோடு வைத்திருந்த, எனது ருத்ராட்ச மாலையையும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் புகைப்படத்தையும் தூக்கி எறிந்து 'என்ன நடக்கின்றதோ, நடக்கட்டும்' என்ற உணர்வோடு தியானத்தில் அமர்ந்தபோதுதான், என்னால் என்னை உணர முடிந்தது.

இங்கே கிருஷ்ணர், ஸௌம்யத்வம் என்ற வார்த்தையை அழகாகப் பயன்படுத்துகிறார். சௌகரியமான உணர்வையும் குறிக்கிறது.

யாருடைய பார்வை உங்களை முழுமையான அமைதியை உணர வைக்கின்றதோ, உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தச் செய்து, மனத்தை நிலைநிறுத்துகின்றதோ அதுவே ஸௌம்யத்வம் எனப்படுகின்றது. ஸௌம்யத்வமும் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதுமே ஒரு ஆன்மீகவாதி பயிற்சிசெய்ய வேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்.

சிலர் ஞானமடைந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் யாருக்கும் உதவ முடியாது. உதாரணமாக, நான் இமாலயத்தில் ஒரு நாக லாதூ ஞானியைப் பார்த்திருக்கிறேன். நாக என்பது உடை உடுத்தாத ஓர் சந்நியாசியைக் குறிக்கும். அந்தக் குளிர் பகுதியிலும், அவர்கள் ஆடையில்லாமல்தான் பரமஹம்ஸாகள் என்றழைக்கப்படுவார்கள். அவர்கள், கடவுள் நகரங்களுக்குள் யார் நடமாடுகிறார்களோ அவர்கள்.

ஆடை உடுத்துவார்கள், மற்ற சமயங்களில் அவர்கள் ஆடைகள் அணியக்கூடாது என்று கருதப்படுகிறது. அவர்கள் குழந்தைகளைப்போல வாழ்கிறார்கள்.

பரமஹம்ஸரான அவர் கஞ்சா புகைக்கும் குழாயின் உள்ளே கஞ்சாவை நிறைத்துவிட்டு, அதனோடு ஒரு தாமிர நாணயத்தையும் போடுவார். நாள் முழுவதும் கஞ்சா புகைத்துவிட்டு, அவர் அந்தப் புகை உறிஞ்சும் குழாயைக் கவிழ்த்தினால் ... , சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அதிலிருந்து ஒரு தங்கக் காசு கீழே விழும்! அந்த நாணயத்தை விற்று, மீண்டும் கஞ்சா வாங்குவார். இப்படிப் பலமுறை நடந்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். எனக்கு அவர் மேல் நல்ல மதிப்பு இருக்கிறது, ஏனென்றால், அவர் ஒரு தபஸ்வி.

நான் அவரிடம், " பாபா, நீங்கள் ஒரு பெரிய தபஸ்வி. ஓர் ஆத்மஞானி (தம்மை உணர்ந்தவர்). ஒரு ப்ரும்மஜ்ஞானி (பிரம்மத்தை உணர்ந்தவர்), பிறகு ஏன் நீங்கள் கஞ்சா புகைக்கிறீர்கள் ?'' என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "ஒரு பெரிய யானையை, ஒரு சிறு குடிசையில் அடைத்துவிட முடியாது. அதைக் கொஞ்சம் மந்தப்படுத்தி, அமைதிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த யானையைச் சிறு குடிசையில் இருக்க வைக்க முடியும். அதைப்போலவே, ஞானம் அடைந்த பிறகு, ஆன்மாவை இந்தச் சிறிய உடலுக்குள் தங்கவைக்க முடியாது. நான் அதைக் கீழேகொண்டு வந்து மந்தப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இதைச் செய்கிறேன்,'' என்றார்.

அவர்கள் புகைபிடிப்பதற்கான காரணம் என்பது சாதாரண மனிதர்கள் புகைபிடிக்கும் காரணத்திலிருந்து வேறானது.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் '' ஸ்வாமிஜி, விவேகானந்தருக்கும்கூட புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது, நான் ஏன் புகைபிடிக்கக்கூடாது ?'' என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

'' ஸ்வாமி விவேகானந்தர் புகைபிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே ஞானம் அடைந்துவிட்டார். ஞானமடைந்த பிறகு நீங்களும் புகைபிடிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்ன சாதித்தார்களோ அதைச் சாதிக்காமல், அவர்கள் செய்ததை நீங்களும் செய்வது தவறு," என்று அவருக்கு விளக்கினேன்.