KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/ஆன்மீகப் பயிற்சியின் முதல் படிSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

ஆன்மீகப் பயிற்சியின் முதல் படி

ப்ரியவறிதம் ச யத் – ஸாத்வீகத்தைப் பேசுவதும் இனிமையாகப் பேசுவதுமே வார்த்தையால் செய்ய வேண்டிய தவம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகள் மூலம் குணப்படுத்துதல் விளைவை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது, ஒரு ஆன்மீக சாதகருக்கு இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான பண்பு. மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக்கூடாது. மற்றவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும்.

எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். கடுமையான அல்லது எரிச்சல்தரும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

இன்னொரு விஷயம், சில சமயங்களில் நம்முடைய பேச்சுகள் மற்றவர்களுக்கு எப்படி உணர்ச்சி ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன, மற்ற ஜீவன்களை எப்படி அவமானப்படுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. நம்முடைய பேச்சில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் யாருடனாவது அமர்ந்திருக்கும்போது, நம்முடன் அமர்ந்திருக்கும் அந்நபர், 'இன்னும் சிறிதுநேரம் இவரோடு இருக்க முடியுமா?

சரஸ்வத்யம் - கடினமான, சீக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள்.

இவரோடு நான் அதிக நேரம் செலவிட முடியுமா? நாளை இவரை மீண்டும் பார்க்க முடியுமா?' என்று நினைக்க வேண்டும்.

மற்றவர்களுக்குள் குணப்படுத்தும் உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, மக்கள் நமக்காகக் காத்திருக்க வேண்டும். பொதுவாக நாம், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறோம். நாம் ஒரு அசௌகரியமான உணர்வைத்தான் ஏற்படுத்துகிறோம். மக்கள் நம்மை விட்டு விலகி ஓடுகிறார்கள்.

முறையில்லாமல் பயன்படுத்தப்படும் சாதாரணமான ஒரு வார்த்தை போதும், இனிமையான உறவுமுறையை முழுமையாகக் கெடுத்துவிடும். ஒரு வார்த்தைகளைத்தான் பேச வேண்டும், மற்றவர்களைத் துன்புறச் செய்யக்கூடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாம் மற்றவர்களைத் துன்புறச் செய்யாதபோது, இறுமாப்புடையவர்களாக நாம் இருப்பதில்லை. இது ஒரு நன்னெறிகூட இல்லை. இது ஒரு ஆன்மீகப் பயிற்சி.

லக்ஷ்மித்வம் -ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும் நிலை.

நான் மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாதென்று நினைத்து, அந்த எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டால் போதாது. ஏனென்றால், நாம் உபயோகிக்கின்ற வார்த்தைகள் நம்மையும் காயப்படுத்தும். அதே வார்க்கைகளைத்தான் நாம் நம்மை நோக்கியும் பயன்படுத்துவோம்.

இந்த தத்துவம் எல்லோருக்கும் பொருந்தும். அதனால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கிருஷ்ணர், ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிப்பதால், அந்த ஸத்யங்கள் மீண்டும் நமது மூளைக்குள் செல்கின்றன.

அதன் விளைவாக, நமக்கு ஸத்யத்தைச் சோதிக்கும் துணிவு கிடைக்கிறது. இந்த ஸத்யங்களோடு செயல்படுவதற்கான துணிவு நமக்குள் உண்டாகிறது.

ஏதாவது ஒரு லக்ஷ்யத்தை எடுத்துக்கொண்டு, குறைந்தபட்சம் சில முறைகளாவது அதைப் பயிற்சிசெய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். உதாரணமாக, 'எனக்கு, எனக்கு, எனக்கு' என்ற கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படாதீர்கள். மாறாக, 'உங்களுக்காக, உங்களுக்காக, உங்களுக்காக' என்ற கருத்தை முயற்சி செய்து பாருங்கள் என்று நேற்று சொன்னேன்.

இதைக் குறைந்தபட்சம் பத்து முறையாவது முயற்சிசெய்து உங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் பலன் என்ன என்று பாருங்கள். அது முடியவில்லையென்றால், அதைத் தூக்கி எறிந்து விடுங்கள். அது உங்களைப் பொறுத்தது, ஆனால் குறைந்தபட்சம் பத்து முறையாவது பயிற்சிசெய்யுங்கள். கிருஷ்ணர் வெளிப்படுத்திய ஸத்யத்தை உங்களால் ஒரு துளியாவது அனுபவிக்க முடியும்.