ஸத்யம், ஒருபோதும் காயப்படுத்தாது
பட்டறிவுவாதிகளுக்கு இரண்டு ஆயுதங்கள் உண்டு: வார்த்தைகள் மற்றும் தர்க்கம். அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு அவை ஒரு பயனுள்ள பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும். இல்லையென்றால், அவை ஆபத்தான ஆயுதங்களாக மாறிவிடும். எப்படி அவற்றைப் பயன்படுத்துவது -அதாவது அறியாமை நிலையிலிருந்தா, ஆளுமை நிலையிலிருந்தா அல்லது நல்லெண்ண நிலையிலிருந்தா - என்று தேர்ந்தெடுப்பது நம்மைப் பொறுத்தது..
வார்த்தைகள், தர்க்கம் -இவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு அவை ஒரு பயனுள்ள பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும்.
'தி ஹிட்டன் மெசேஜஸ் இன் வாட்டர்' என்ற புத்தகத்தில், வார்த்தைகளுக்கு இருக்கும் அளவற்ற சக்தியை எடுத்துக்காட்டிய ஜப்பானிய விஞ்ஞானியான எமோட்டோவைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அவர், அடைக்கப்பட்ட வெவ்வேறு தண்ணீர் மாதிரிகளிடம், வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்திப் அந்தத் தண்ணீர் மாதிரிகளை உறையச் செய்து, ஆய்வு செய்கிறார். அவர் அன்போடு பேசிய தண்ணீர் மாதிரிகள் வைரத்தைப் போலவும், வெறுப்போடு பேசிய தண்ணீர் மாதிரிகள் விகாரமாக இருந்தன.
அந்தப் படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. நீங்கள் அவற்றைப் பார்க்கலாம். வார்த்தைகள், நீரிலேயே இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்றால், மனிதர்களுக்குள் அது என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று நினைத்துப்பாருங்கள். நம் உடலின் பெரும்பகுதி நீரின் மூலக்கூறால் ஆனது. அதனால்தான் வார்த்தைகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன; அல்லது மிகவும் குணமளிப்பவையாக இருக்கின்றன. வார்த்தைகள் மூலமாக நம்மால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.
கிருஷ்ணர் செயலில் இருக்கும் தவம் பற்றியும் பேசுகிறார். அவர், ஸத்யம் - எண்ணம், செயலில் உண்மையே கடைப்பிடித்தல்; அஹிம்ஸா - வன்முறையற்ற தன்மை ; அஸ்தேய - பிறர் பொருளைக் கவரும் எண்ணமில்லாமை; அபரிக்ரஹ - எளிமை; மற்றும் ப்ரும்மசர்ய – பரமாத்மாவை உயர்கதியாகக்கொண்டு தவ வாழ்க்கையை உண்மையுடன் வாழ்வது என்னும் ஐந்து கட்டுப்பாடுகள் பற்றிப் பேசுகிறார். இவை, பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமான யமவில் சொல்லப்பட்டுள்ள ஐந்து ஒழுக்கமுறைகளாகும்.
வருத்தப்பட வைப்பதாக இருந்தால்கூட, ஸத்யம் சொல்லப்பட்டே ஆக வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அது யாரையாவது காயப்படுத்துமேயானால், அது ஸத்யம் இல்லை, அவ்வளவுதான். அது, நமது மனத்தால் ஸத்யம் என்று காட்டப்பட்ட நமது அகங்காரத்தின் பிரதிபலிப்பே.
நாம் நம் புலன்கள் மூலம் சில கருத்துகளைக் கிரகித்து, அந்தக் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு, நமது எல்லைக்குட்பட்ட அறிவின் துணையுடன் சில முடிவுகளைத் தீர்மானிக்கும்பொழுதும், பிறகு அவற்றை நமது ஸத்யங்களாகச் சொல்லி, யாரையாவது காயப்படுத்தும்பொழுதும், நாம் ஸத்யத்தில் நிலைக்கொள்வதில்லை. இப்படி நாம் செய்தால், நாம் உணர்ச்சிவேகத்திலும், அறியாமையிலும்தான் இருக்கிறோம். நாம் ஸத்யத்தில் இல்லை. நாம் ஸாத்வீக குணத்தில் இல்லை.
ஸ்தீயம் என்பது கருணையின் பிரதிபலிப்பு, கருணையின் வெளிப்பாடு. ஸ்தீயமும் கருணையும் எப்போதும் இணைந்தே இருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஸ்தீயும் ஒருபோதும் காயப்படுத்தாது.
ஒவ்வொரு சுவாசமும் ஓர் அன்பளிப்பு