நம்பிக்கைதான் முக்தி அடையச் செய்யும்
மதம் என்பது ஒரு 'ஒப்புக்கொள்ளுதல்'தான் (Belief), நம்பிக்கை (faith) கிடையாது.
சாதாரணமாக, இவ்விரண்டையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று இணையான சொற்கள் கிடையாது. அவை எதிர்ச்சொற்கள். அவை எதிர்ப்பதங்கள்.
'ஒப்புக்கொள்ளுபவரை', நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. 'ஒப்புக்கொள்ளுபவருக்கு' நம்பிக்கை பற்றி எதுவுமே தெரியாது.
'ஒப்புக்கொள்ளுதல்' என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது ; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அனுபவம். 'ஒப்புக்கொள்ளுதல்', தலையில் இருந்து அதாவது தர்க்கத்தில் இருந்து வருவது; அது, தர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும். நம்பிக்கை, இதயத்தில் இருந்து வருவது; அது, இதயத்தின் உடையது.
'ஒப்புக்கொள்ளுதல்' என்பதன் பொருள், நம்முடைய சந்தேகத்தைத் தற்காலிகமாக
மறைத்திருக்கிறோம் என்பதாகும். சந்தேகம் என்ற ஒரு இருண்ட ஒட்டையை ஒர் அழகான 'ஒப்புதல்' மூலம் அடைப்பது. ஆனாலும் சந்தேகம் அங்கே இருந்துகொண்டுதான் இருக்கும்.
சந்தேகத்தை அகற்றுவதற்கு இது சரியான வழி அல்ல. சந்தேகத்தைப் பற்றிய புரிதலே அதை அகற்றுவதற்கான சரியான வழி! உண்மையில், அதை மூடி மறைப்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், மூடி மரைக்கும்போது, அதைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை; அதனால் அது, உள்ளே மறைந்திருக்கும் புற்றுநோயைப்போல நமக்குள்ளேயே பரவுகிறது.
சந்தேகத்தைப் பற்றி அறிந்துகொள்வதே நல்லது. அப்படியென்றால் மட்டுமே, நம்மால் அதை அகற்றுவதற்கு ஏதாவது செய்ய முடியும். அதை மறந்துவிடுவதும் மூடி மறைத்துவிடுவதும் மிகவும் ஆபத்தைத் தரும். அது நமது இருப்பு முழுவதும் பரவி விடும்.
மதவாதிகள், அடி ஆழத்தில் அவர்களிடம் சந்தேகம் மறைந்திருக்கும். அவர்களின் ஒப்புதல் அவர்களை ஆன்மீகவாதிகளாக ஆக்காது.
'ஒப்புக்கொள்ளுதல்' என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அழைவம்.
இதுநாள்வரையில் சரித்திரமே அப்படித்தான் இருக்கிறது.
மற்ற எல்லாவற்றையும்விட, மக்களின் 'ஒப்புக்கொள்ளுதல்'கள்தான் பூமியில் அதிக இரத்தத்தைச் சிந்த வைத்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை கொல்கிறார்கள். இன்னும் இதுபோல எவ்வளவோ நடக்கிறது. ஒவ்வொரு மதவாதியுமே யாரோ ஒருவருடைய கழுத்தைப் பிடித்துக் கொல்வதற்குத் தயாராக இருப்பதுபோல் தெரிகிறது.
பெரும்பாலும், ஆன்மீகத்தைப் பற்றிய புரிதலோ செயல்பாடோ இம்மியளவும் இல்லாதவர்கள்தான், தங்களை 'மதத் தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களைக் கொல்கிறார்கள்.
'ஒப்புக்கொள்ளுதல்'கள் ஒருபோதும் ஒருவரை ஆன்மீக வாதியாக ஆக்குவதில்லை. அவை, அவரை ஒரு மதவாதியாகவே மாற்றும்.
'ஒப்புக்கொள்ளுதல்' சாதாரணமாக நம்முடைய முகத்தை மட்டுமே மூடும். ஆனால் நமது அடி ஆழத்தில், நாம் அசிங்கமாகத்தான் இருந்து கொண்டிருப்போம். இருந்த போதிலும், நம்மைப்போன்றே 'ஒப்புக் கொள்ளுதல் தன்மையுடைவாகளும், நம்முடன் பயணிப்பவர்களும் மட்டுமே நம்மை மதிக்கிறார்கள். அவர்களும், நம்மோடு அதே படகில் பயணிப்பதன் காரணமாக நம்மை வழிபடுகிறார்கள்.
யாரோ ஒருவர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார், ''கோடிக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவம் எப்படித் தவறாக இருக்க முடியும் ?''
அவர் கேள்வி கேட்டவரிடம், "மொத்த ஜனத்தொகையில் பகுதியினர் முட்டாள்களாக இருக்கிறார்களென்றால், அவர்கள் எப்படிச் சரியாக இருக்க முடியும் ?'' என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டார்.
சத்யம், கூட்டத்தின் எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை. ஒரு கூட்டத்திலிருந்து, அக்கூட்டத்திற்கு எதிராக, எப்போதாவதுதான் ஒரு மனிதர் எழுகிறார், ஸத்யத்தின் உச்சங்களை அடைகிறார்.
பள்ளத்தாக்குகளில்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருப்பார்கள். ஒரே 'ஒப்புதல்' தன்மை கொண்டவர்களோடு சேர்ந்து வாழ இது உதவுகிறது. இது நமக்குப் பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. ஆனால் நம்பிக்கை என்பது வேறுவிதமானது.
'ஒப்புக்கொள்ளுதலுக்கு' இங்கு அவசியமே கிடையாது. எந்தப் பேச்சுக்களையும் எழுத்துகளையும், என்னுடைய எழுத்துகளையும் பேச்சுக்களையும்கூட ஒப்புக்கொள்ளாதீர்கள். அதனை வாழுங்கள். அதைப் பரிசோதித்துப் பாருங்கள், அதைப் பகுத்தராய்வு செய்யுங்கள், அதை உங்கள் அனுபவமாக்குங்கள்.
அது, 'ஒப்புக்கொள்ளுதலாக' மட்டும் இருக்காது; நம்பிக்கையாக மாறும். இந்த நம்பிக்கை மட்டுமே உங்களை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.