KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/'ஆம்' என்பது விழிப்படைந்த மனிதனின் பாதைSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

'ஆம்' என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை

அன்பு செலுத்துவது எப்படி என்பதும், நம்பிக்கை வைப்பது எப்படி என்பதும் ஆனந்தம் தெரிந்தவர்களுக்குதான் சாத்தியப்படும்.

எப்படிச் சரணடைவது, எப்படிப் பக்தியோடு இருப்பது, எப்படிப் பணிவோடு இருப்பது என்று தெரிந்தவர்களுக்கும்தான் இக்கதவு திறந்திருக்கும்.

நமது இதயம் 'ஆம்' என்று சொல்லும்போது, நமது இருப்பிலிருந்து 'இல்லை' என்பது முழுமையாக மறைந்துவிடும்போது ஆனந்தம்

சாத்தியப்படும். ஏனென்றால், 'இல்லை' என்பது இருட்டு; 'ஆம்' என்பது வெளிச்சம். 'இல்லை' என்பது அகங்காரம்; 'ஆம்' என்பது அகங்காரமின்மை. 'இல்லை' என்பது விழிப்புணர்வற்ற மனிதனின் பாதை; 'ஆம்' என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை.

'இல்லை' என்னும் வார்த்தையை மறந்து, எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்வதுதான் துறவின் ஒரு நெறிமுறை. அப்போதுதான் இணக்கம் அதிகரிக்கிறது. எல்லாவித முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. நாம் 'இல்லை' என்று சொல்வதால் எல்லாவிதமான முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

'இல்லை' என்பது சண்டை - போர். 'ஆம்' என்பது அன்பு.

அன்பு செலுத்துவது எப்படி, நம்பிக்கை வைப்பது எப்படி என்பது தெரிந்தவர்களுக்குதான் ஆனந்தம் சாத்தியப்படும். 'ஆம்' என்பது முழுமையுடன் ஏற்படும் ஆழ்ந்த இணக்கம். ஆனந்தம் என்பது அந்த இணக்கத்தின், அந்த இசைவின் மற்றொரு பெயர். ஆனந்தத்தைப் பெற ஒருவருக்கு தகுதியிருக்குமேயானால், அவர் அதை அடைந்தே தீருவார். தகுதியடைவதற்கான ஒரே வழி, கரைந்துவிடுவதுதான் - 'இருப்பது' அல்ல.

'இருப்பது' என்பது ஒரு தடை. அகங்காரம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் ஆணிவோாக இருக்கிறது. அகங்காரம் இல்லாதபோது, அகங்காரம் மறைவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப்போல, ஆனந்தம், பிரபஞ்ச இருப்பின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலிருந்தும் பாய்ந்தோடி வந்து நம்மை அடைகிறது.

அகங்காரம் மூடிய நிலை: கதவுகளும் ஜன்னல்களும் முடப்பட்டேயிருக்கும். அதன் காரணமாக நாம் மிகவும் தனிமையான, இறுக்கமான வாழ்க்கையையே வாழ்கிறோம். அகங்காரம் ஒரு (Capsule)

அகங்காரம் முட்டையைப் போன்றது : அதில் எதையுமே உள்ளே அனுமதிக்கும் அளவிற்கு, ஒரு சிறிய ஓட்டைகூட இருக்காது.

ஆனந்தத்தை அடைவதற்கான ஒரே தகுதி, கரைந்துவிடுவதுதான் -'இருப்பது' இல்லை.

பயத்தைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே, அது தன்னைத்தானே மூடிக்கொண்டு விடும், தனக்குள்ளாகவே குறுகிவிடும். இப்படித்தான் நாம் துக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

ஆனந்தம் என்பது பிரபஞ்சத்துடன் இசைந்து செல்வது, முழுமையாக அதனோடு ஒன்று கலந்திருப்பது. அகங்காரம் என்பது உறைந்த பனிக்கட்டி போன்றது, அகங்காரமின்மை என்பது பாய்ந்தோடும் நீரைப் போன்றது.

நாம் திரவமாக இருந்தால்தான், கடலின் ஒரு பாகமாக இருக்க முடியும். அந்த நிலையில் நமக்கு தனிப்பட்ட இலட்சியமோ அல்லது இலக்கோ கொண்டிருக்க மாட்டோம். ஒவ்வொரு கணமுமே ஆனந்தம்தான், நம்பவியலாத அளவிற்கு பேரானந்தம்தான்.

மனத்தால் இதைப் புரிந்துகொள்ளவோ அல்லது முடியாது. மனம் என்பது அகங்காரத்தின் ஒரு பகுதியே. எப்படி மூடுவது என்பதுதான் அதற்குத் தெரியும்; எப்படித் திறந்திருக்க வேண்டும் என்பது அதற்குத் தெரியாது.

அன்பு செலுத்துவது என்பது, சரணடைந்து விடுவதே!

அன்பு செலுத்துவது என்பது சரணடைந்து விடுவதே! அதாவது, பிரபஞ்சத்திற்கு, மலர்களுக்கு, நட்சத்திரங்களுக்கென எல்லாவற்றிற்குமாகத் திறந்திருக்கும் வகையில் நமது மொத்த முயற்சியும் இருக்க வேண்டும்.

மொத்த பிரபஞ்சத்திலும் நிறைந்திருக்கும் இந்த அழகான இசைக்காக மனத்தைத் திறப்பது எப்படி? எப்போதும் நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்காக நம் மனத்தைத் திறந்து வைத்திருப்பது எப்படி?

மலர்கள் நட்சத்திரங்களையும் ஆனந்தமாக அனுபவிக்கின்றன. அவை எப்போதும் ஆனந்தநிலையில் இருக்கின்றன. மனிதனைத் தவிர, மற்ற எல்லாமே இசைவாக இருக்கின்றன. மனிதன் மட்டுமே இசைவில்லாமல் இருக்கிறான், ஏனென்றால், அவனிடம் விழிப்புணர்வு இருக்கிறது.

விழிப்புணர்வால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: அதனால் அகங்காரத்தை உருவாக்க முடியும். அகங்காரமின்மையையும் உருவாக்க முடியும்.

அது அகங்காரத்தை உருவாக்கினால், நாம் நரகத்தில்தான் வாழ்வோம். அது அகங்காரமின்மையை உருவாக்கினால், நாம் சொர்க்கத்தில் வாழ்வோம்.

மொத்த உலகமும் சொர்க்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை மற்ற ஜீவராசிகள் உணர்வதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே சொர்க்கத்திற்குள் முழுமையாகத் தெரிந்துகொண்டு நுழைகிறான். அதுவே மனிதனின் சிறப்பு, அதுவே மனிதனின் அழகு. ஆனால் அதுவே மனிதனுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது.

ஏனென்றால், ஒருமுறைதான் யாராவது ஒருவர்தான் இதற்குள் நுழைகிறார். மற்றவர்கள் அனைவரும் சுலபமாக அகங்காரத்தின் வலையினுள் மாட்டிக் கொள்கிறார்கள்.

அகங்காரமற்று இருங்கள், உங்களுக்கே! ஆனந்தம் என்பது கடவுளின் கருணையால் கிடைப்பது.

'நாம் யார்' என்பதையே நாம் மறந்துவிட்டிருக்கிறோம். நாம் பேரரசர்கள், ஆனால் நம்மைப் பிச்சைக்காரர்களாகவே கனவு காண்கிறோம். நமது இருப்பிற்குள் மொத்த கடவுளின் சாம்ராஜ்ஜியமும் இருக்கிறது. இருந்தும், சாரமற்ற விஷயங்களையே நாம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமது ஜீவனுக்குள் எல்லையில்லா வற்றா வளங்களும் பொக்கிஷங்களும் குவிந்திருப்பதை அறியாமல், நாம் சில்லறை விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் கடலைப் போன்றவர்கள். இருந்தும், நமது 'சுய'த்திலிருந்து நம்மைநாமே துண்டித்துக்கொண்டதால், நாம் தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது அடையாளத்தின் காரணமாக, நம்மிடம் இருந்தே துண்டித்துக்கொண்டோம். நாம் அடையாளங்களாக ஆனால் யாராக இருக்கிறோமோ, அதுவே நமது தனித்தன்மை. நாம் அடையாளத்திலிருந்து நமது தனித்தன்மைக்கு நகர வேண்டும்.

விழிப்புணர்வால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: ஒன்று, அகங்காரத்தை உருவாக்க முடியும். அல்லது அகங்காரமின்மையையும் உருவாக்க முடியும்.

பொய்மையிலிருந்து

நிஜத்திற்கு,

போலித்தனத்திலிருந்து சிரத்தைக்கு மாற வேண்டும். சிரத்தையான தேடல் என்பது, சரணடைதலைப் பற்றியதே, அதாவது ஸ்தீயத்தைத் தேடுவதே சரணாகதி. அதையும் நம்மால் மிகச் சுலபமாகச் செய்ய முடியும், ஏனென்றால், நாம் எப்படித் தொடர்பற்றுப் போனோம் என்பதோ, எந்தளவிற்கு நாம் அதை மறந்திருக்கிறோம் என்பதோ, எத்தனை காலமாக நாம் மறந்திருக்கிறோம் என்பதோ ஒரு பொருட்டு அல்ல.

ஒரே நொடியில் அதை நாம் நினைவுக்குக் கொண்டுவர முடியும். உடனே அதனோடு இணைய முடியும். நம்பிக்கைதான் இணைப்பைக் கொடுக்கிறது.