பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)
பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
|---|---|
| த்ருபதன் | : திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன் | |
| சி' கண்டி | : சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | : கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசா் |
| உத்தமௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | |
| யுதிஷ்டிரா் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பிமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | : ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பிஷ்மர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்' வத்தாமன் | : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' (நபர் | : கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | : பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | : கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர். |
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | : மேலான புருஷன் |
| மதுஸூதனன் | : மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | : லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்'வரன் | : யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
| விஷ்ணு | |
|---|---|
| ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர் | |
| ஜநார்தன் | : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர் | |
| அனகன் | : பாபம் அற்றவர் |