KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள்

கடைசி ஸ்லோகத்தில் அவர் சொல்கிறார், ''தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள். அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, என்னையும் சேர்த்து தண்டிக்கிறீர்கள், ஏனென்றால், உங்களுக்குள் நான் இருக்கிறேன்! '

வேத நூல்கள் கடுமையான பயிற்சிகளையும் தவங்களையும் பரிந்துரைக்கவில்லை. தீ மிதிப்பது போன்ற செயல்களெல்லாம் அவசியமற்றவை.

ஒருசில சமயங்களில் ... உங்களை இவற்றையெல்லாம் நான் செய்ய வைக்கிறேன். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் மன அமைப்பை உடைக்க வேண்டுமென்பதற்காக!

ஆனால், இவற்றை ''ஒவ்வொரு நாளும், காலையில் நான் எழுந்தவுடன் பத்தடி நெருப்பில் நடப்பேன் ... , '' என்கின்ற அளவுக்கு உங்கள் தினசரி சடங்காக்கிக் கொள்ளாதீர்கள். இதுபோன்ற விஷயங்களையெல்லாம் செய்யத் தேவையில்லை என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். 'நான் இதை எல்லாம் செய்தேன்' என்று பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும், தங்களுடைய அகங்காரத்தைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவும் மக்கள் இதைச் செய்கிறார்கள். பேராசை மற்றும் பற்றினால் உந்தப்பட்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஆணிப்படுக்கையில் ஆண்டுக்கணக்காகப் படுத்துக் கிடக்கும் தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். சிலர் ஒரு கையை உயரே உயர்த்தியபடியே இருக்கும் தவத்தை மேற்கொள்கிறார்கள். இது போன்ற கடுமையான பயிற்சிகள் அனைத்துமே முட்டாள்தனமானவையே. இவர்கள் தங்கள் உடலை சித்ரவதை செய்வதுடன், அதற்குள் உறைந்திருக்கும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்கிறார்கள்.

கிருஷ்ணர் 'உறைந்திருக்கும் ஆன்மாவைச் சித்ரவதை செய்யாதீர்கள். உங்கள் உடலை அவதூறு செய்யாதீர்கள். உடல்தான் கடவுள் வாழும் ஆலயம்.'

கடவுளின் ஆலயத்தைச் சித்ரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்மவைச் சித்ரவதைக்குள்ளாக்குகிறீர்கள் உடலுக்குள் இருக்கும் பரமாத்மவைச் சித்ரவதைக்குள்ளாக்குபவர்கள் ராஷஸர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இராவணன் தவம் செய்தான். அவன் தன்னுடைய தலைகளை வெட்டி, அவற்றைத் தீயிலிட்டான். இது, தனது உடலையும் அந்த உடலுக்குள் உறையும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்யும் 'ராக்ஷஸ தவம்'. சுய சித்ரவதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

உங்களை நீங்களே சீத்ரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் உங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

உங்களை நீங்களே சித்ரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் உங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

யாரையாவது அழிக்கத் திட்டம்தீட்டிக் கொண்டிருப்பதுதான் ராக்ஷஸர்களின் இயல்பு. அதனால்தான் அவர்கள் இதுபோன்ற கொடூரமான விஷயங்களை தங்களுக்குத் தாங்களே இந்தத் தவங்களையும் சித்ரவதைகளையும் வளர்ப்பதற்கும், அதிகாரத்தை வேண்டியுமே செய்கிறார்கள்.

மற்றவர்களை எப்படிக் கொல்வது, மற்றவர்களை எப்படிச் சிக்ரவகை செய்வது, மற்றவர்களுக்கு எப்படிச் சூனியம் வைப்பது என்று எந்த வேத நூலும் நமக்குக் கற்றுத் தருவதும் இல்லை, அவற்றை அவை விரும்புவதும் இல்லை.

யாராலும் உங்களைச் சபிக்க முடியாது

ஒரு சொற்பொழிவில் நான், யந்திரங்கள் எப்படிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன என்பதைப் பற்றிப் பேசினேன். யந்திரம் என்பது சக்திவாய்ந்த மந்திரத்தைக் குறிக்கும் வரைபடம் பதிக்கப்பட்ட ஒரு சக்தியூட்டப்பட்ட உலோகத் தகடு.

அந்தச் சொற்பொழிவு முடிந்த பிறகு ஒரு அன்பர் என்னிடம் வந்து, ''நான் ஒரு யந்திரம் வாங்கி வந்தேன். ஆனால் நான் யாரிடம் அதைத் திருப்பிக் கொடுக்க நினைத்தபோது, அவர், என்னைச் சபித்து விடுவதாகப் பயமுறுத்துகிறார்,'' என்றார்.

ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்,

ஒரு ஞானியால் மட்டுமே சாபம் தர முடியும். அவருக்கு மட்டுமே அந்த சக்தி இருக்கிறது. ஆனால் ஞானி ஒருபோதும் சாபம் தரமாட்டார்.

ஒரு ஞானியால் மட்டுமே தம்முடைய சாபத்தை உபயோகமான வழியில் பயன்படுத்த முடியும், மற்றவர்களால் முடியாது.

யார் வேண்டுமானாலும் சபிக்கலாம், அது நிஜமாகிவிடும் என்பதெல்லாம் நடவாத செயல். அப்படி ஒருவர் சபிக்கிறார் என்றால், அவர் ஞானி அல்ல. அவருடைய சாபத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய சாபம் பலிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஸத்வ நிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஒருபோதும் பலிக்காது.

இறுதி பேராற்றலை எட்டியவா்களின் வார்த்தைகள் மட்டுமே நிஜமாகும். மீண்டும் சொல்கிறேன், ஞானிகளால் மட்டுமே சபிக்க முடியும். ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். ஏனென்றால், ஞானிகள் பிரபஞ்ச உணர்வில் இருப்பதால், மற்றொருவரைச் சபிப்பதென்பது அவர்கள் தங்களைத்தாங்களே சபிப்பதற்கு ஒப்பாகும். அதனால், சாபங்களுக்காகப் பயப்படாதீர்கள்! யாராலும் உங்களைச் சபிக்க முடியாது.

உங்கள்மீது திணிக்கப்படும் எந்தவொன்றையும் துணிவோடு விட்டெறியுங்கள்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம், சாபம் கொடுக்கும் நபர், மற்றவர்களைக் காயப்படுத்துவதைவிட, அவர் தம்மைத்தாமே அதிகம் காயப்படுத்திக் கொள்கிறார். அதனால் சாபங்களுக்காக ஒருபோதும் பயப்படாதீர்கள்.

ஆன்மீக பந்தம், ஒருபோதும் பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. பயத்தின் காரணமாக ஒருபோதும் யாருக்கும் அடிபணியாகீர்கள். உங்களைப் பயமுறுத்தி, திணிக்கப்படும் எந்தவொன்றையும் துணிவோடு விட்டெறியுங்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மாதிரியான தவங்களுக்கு இங்கு அவசியமே கிடையாது. பெருமைக்காகவும், அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காகவும் செய்யப்படும் இந்த மாதிரியான தவங்களால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் இவற்றினால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.

இப்படிப்பட்ட தவங்களைச் செய்பவன் ராக்ஷன். அவன் ஆழ்ந்த தமோ நிலையில், அறியாமையில் இருக்கிறான். அவன் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ கவலைப்படாமல், தமது அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதில் மட்டுமே கவனம் கொண்டிருப்பான். இவன் ஆன்மீகத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவனாகவே இருக்கிறான்.