Part 3: Bhagavad Gita Explained
Chapter 17
வழிபடுகிறார். ஏஜூ குணத்தில் இருக்கும் ஒருவர், யக்ஷர்களையும் ராக்ஷஸா்களையும் வழிபடுகிறார். தமோ குணத்தில் இருக்கும் ஒருவர், ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்.
உங்கள் லட்சியம் என்னவாக இருந்தாலும், எதை நீங்கள் உயர்வாக நினைத்தாலும், நீங்கள் யாரைப் பின்பற்றினாலும், நீங்கள் எதை வழிபட்டாலும், அதுவே உங்களின் இயல்பாக இருக்கிறது. அதுவே உங்கள் குணத்தைத் தீர்மானிக்கிறது.
இளைஞர்களின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தங்கியிருக்கும் அறையைப் போய்ப் பார்த்தால்போதும். சுவாமி விவேகானந்தரின் புகைப்படம் அங்கு ஒட்டப்பட்டிருக்கிறதா இல்லை ஒரு நடிகரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கே, அவர்களின் ஹீரோ யார் என்பதை நம்மால் தீர்மானித்துவிட முடியும்.
சுவாமி விவேகானந்தரின் படத்தை ஒட்டிருந்தோமானால், அவர்தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப்போல ஆக விரும்புவோம். அவரைப்போல வாழ விரும்புவோம். நாம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.
ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரைப்போலவே முடியை வெட்டிக் கொள்வோம். அவரைப்போல உடை அணிய நினைப்போம், அவரைபோலத் தெரிய வேண்டும் என்பதற்காக நாம் என்னென்னமோ செய்துகொண்டிருப்போம்.
நமது அறையில், சுவாமி விவேகானந்தரின் படத்தை ஒட்டிருந்தோமானால், அவர்தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப்போல ஆக விரும்புவோம்.
அதற்காக நாம் எதையும் செய்யத் தயாராக இருப்போம். நாம் ருஜோ மற்றும் தமோ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.
தமோ குணம் என்பது, ஒரு வன்முறை சண்டைக்காட்சியைப் நாள்தோறும் அந்தக் காட்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்: மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும், அடித்துக்கொண்டும், குரங்குகளைப்போல ஒருவரை ஒருவர் உதருவர் உதைத்துக்கொண்டும் இருப்பார்கள். இது எனக்கு ஒருபோதும் புரிவதில்லை. சண்டையிடுதல் என்பது ஒரு நெறிபிறழ்வு. ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து இந்தச் சண்டை நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள்; கற்பனையும் செய்து பார்க்க முடிவதில்லை. நாம் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்திருக்கிறோம் பாருங்கள் !
நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில், சண்டைக்காட்சிகளைப் பார்க்குக் கொண்டிருந்தீர்களென்றால், நீங்கள் தமோ குணத்தில்தான் நிலைகொள்வீர்கள்.
நாம் சரியான உருவத்தை வழிபட்டோமென்றால், நாம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.
நமது லக்ஷியங்களின் அடிப்படையில், நமது
குணங்களை (பண்புகளை) வரையறுத்துச் சொல்லிவிடலாம் என்கிறார் கிருஷ்ணர்.