KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/உங்கள் ஜீவனுக்குப் பிடிக்காத ஒன்றை யாரும் செய்ய முடியாதுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

உங்கள் ஜீவனுக்குப் பிடிக்காத ஒன்றை யாரும் செய்ய முடியாது

கேள்வி: ஸ்வாமிஜி, வாசனைகளே ஆன்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன் ?

அருமையான கேள்வி!

ஒருமுறை சென்றிருந்தபோது, பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு தியான சிகிச்சை (Spiritual Healing) கொடுத்த கதையை உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கின்றேன். இந்தக் கேள்விக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், நான் அதை மீண்டும் இங்குச் சொல்கிறேன்.

அந்தப் பெற்றோர்கள் பாரதத்திலிருந்து வந்திருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது.

ஆன்மீக பந்தம், ஒருபோதும் பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஏற்படுவதில்லை.

நான் அந்தப் பையனைத் தொட்ட உடனேயே, அவன் கடுமையான குரலில், என்னுடைய கைகளை அவன் மீதிருந்து எடுத்துவிடும்படி கத்தினான். அதுவும் தமிழில் மொழியிலேயே! அவன் குணமடைய விரும்பவில்லை !

அவன் உக்கிரமாக பேசிய விதம், மேலும் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு மொழியில் அவன் பேசியதையும் பார்த்தவுடன், நான் தியான சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டு, கைகளை எடுத்துவிட்டேன். பிறகு அவனிடம், ''ஏன் தியான சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கிறாய் ?'' என்று கேட்டேன்.

தான் விரும்பியே உடல் - மன வளர்ச்சி குன்றிய ஒரு பிறப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பொறுப்புகளை ஏற்க விரும்பவில்லை என்றும் அந்தச் சிறுவன் சொன்னான். அவன், தன்னுடைய கடந்தகால ஆசைகளை, ப்ரார்ப்த காமாக்களை விரும்பினான்.

''நல்லது, அப்படியே இருக்கட்டும், ஆனால் நல்லவர்களான உன்னுடைய பெற்றோரைத் தொந்தரவு செய்து வருகிறாயே. அவர்களை ஏன் துக்கப்படுத்துகிறாய் ?'' என்று கேட்டேன்.

அந்தச் சிறுவன் உடனடியாகப் பதிலளித்தான், ''என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ளாத ஒரு குடும்பத்தில் போய் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் நல்லவர்கள் என்பதற்காகதான் நான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன், அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்!'' என்றான்.