பரிசோதித்துப் பார்க்காமல், தீர்மானிக்காதீர்கள்
ஆன்மீக பயிற்சியென்றால், நீங்கள் அடர்ந்த காட்டிற்குள் அமர்ந்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு, இடகலை வழியாகப் பத்து முறை மூச்சு விட வேண்டும், பிங்கலை வழியாகப் பத்து முறை மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஆழமாகவும், ஸ்ரத்தையோடும்
நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்தக் கணத்தில் அதை முழுமையாகவும் ஆழ்ந்த ஸ்ரத்தையோடும் செய்தால், அதுவே போதுமானது.
அதை வெளிப்படுத்தும் துணிவைக் கொண்டிருங்கள். என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பரிசோதிக்கவும், அதைச் செயல்படுத்தவும் துணிவு கொண்டிருங்கள்.
நீங்கள் நம்புகின்ற ஸத்யம், உச்சமான ஸத்யம்தானா கவலைப்படாதீர்கள். அதைப் பரிசோகித்துப் பார்க்கும் துணிவு உங்களிடம் இருந்தால் ஒழிய, அது உச்சமான ஸத்யம்தானா என்பதை உங்களால் அறிய முடியாது.
பரிசோதித்துப் பார்க்காமல், உங்களால் தீர்மானிக்க முடியாது. பரிசோதித்துப் பார்க்காமல் நீங்கள் தீர்மானித்தீர்களென்றால், அது தீமையில்தான் முடியும்.
உங்களுக்கு வேண்டுவதெல்லாம் ஒன்றே, நீங்கள் நம்பும் ஸத்யத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான துணிவுதான்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு, தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன.
வாய்மை - வாய்மூலமாக ஸத்யம் பேசுவது. அடுத்தது, உண்மை -மனம்மூலமாக அல்லது இதயம்மூலமாக ஸத்யத்தைச் சிந்திப்பது.
மூன்றாவது, ஓர் அருமையான வார்த்தை, மெய்மை - உடல் மூலமாக ஸத்யத்தை வாழ்வது. தமிழில், 'மெய்' என்றால் உடல் என்று அர்த்தம்.
வாயால் ஸத்யம் மனத்தால் ஸத்யம் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், 'உடலால் ஸத்யம் என்ன?' நாம் இதற்கு முன்னால் இதைக் கேட்டிருக்க மாட்டோம்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு, தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. 1 . வாய்மை - வாய்மூலமாக ஸத்யம் பேசுவது. 2. உண்மை -இதயம் மூலமாக ஸத்யத்தைச் சிந்திப்பது. 3. மெய்மை - உடல் மூலமாக ஸத்யத்தை வாழ்வது.
ஒரு சின்ன கதை:
திருவாரூர் அருகில், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் என்ற ஒரு பெரிய ஞானி வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:
ஒருமுறை தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்த அரசவைப் புலவர் ஒருவர், சுவாமிகளின் சாந்நித்தியத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்மீது பரணி பாடினார். பரணி என்பது செய்யுள் வகைகளுள் ஒன்று, இதில் ஆயிரம் செய்யுள்கள் இருக்கும். போரில் தமது பலத்தையும், துணிவையும் காட்டி, ஆயிரம் யானைகளைக் கொன்ற ஒருவர் மீதுதான் பொதுவாக 'பரணி' பாடப்படும்.
இங்கு, ஞானியின் சாந்நித்தியத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் புலவர், அந்த இடத்திலேயே ஆயிரம் பாடல்களை எழுதி முடித்தார்.
ஆனால், அந்த நாட்டின் அரசரோ, பரணி பாடப்படுவதற்குரிய தகுதி தமக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார். ஒருநாள் அரச வையில், அந்த அரசர் அகங்காரத்தோடும் பெருமிதத்தோடும், ''இந்தத் தேசத்திலேயே என் மீது மட்டுமே பரணி பாடப்பட்டுள்ளது!' என்று சொன்னார்.
அங்கிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்து, ''இல்லை அரசே! நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள். தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் மீதும் பரணி பாடப்பட்டுள்ளது. அதையும், நமது அரசவை புலவர்களில் ஒருவரே பாடியுள்ளார்,'' என்றார்.
இதைக் கேட்டவுடன் அரசருடைய அகங்காரம் புண்பட்டது. அவர் கோபத்துடன், ''என்ன? பரணி பாடப்பட்ட அந்நபர் யார்? அவரை இங்கே அழைத்து வாருங்கள்,'' என்றார். உடனே அந்தப் புலவர், ''இல்லை அரசே! அவர் ஒரு பிச்சைக்காரர். அவர் இங்கே வரமாட்டார்,'' என்றார்.
பிச்சைக்காரர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றுமே இல்லாதவர்களை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது.
நாம் விரும்புவதைச் செய்யுமாறு சொல்லி யாரை வேண்டுமானாலும் கட்டாயப்படுத்திவிட முடியும், ஆனால் ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் பெயரைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ, புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு
போரில் தமது பலத்தையும், துணிவையும் காட்டி, ஆயிரம் யானைகளைக் கொன்ற ஒருவர் மீது பாடப்படுவதே 'பரணி'.
ஆசைகள் இருக்காது.
ஆசைகள் கொண்ட ஒருவர்தான் கட்டுப்படுகிறார். அதனால், ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது.
இந்த விஷயத்தில், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரர் - ஒரு துறவி. அதனால் காவலர்களால் அவரை அரசர் முன் கொண்டுவந்து நிறுத்த இயலவில்லை. அரசர் இப்போது, தாம் இன்னும் ஆழமாகத் தாக்குண்டதாக உணர்ந்து, அவருடைய கோபம் பரணி பாடிய புலவர் மீது திரும்பியது. ''ஒரு பிச்சைக்காரன் மீது பரணி பாடிய அந்த முட்டாளை உடனே இங்கே அழைத்து வாருங்கள்,'' என்றார் அரசர்.
புலவர் அந்த கொண்டுவரப்பட்டார். அரசர், "முட்டாளே, உனக்கு என்ன துணிவு இருந்தால் ஒரு பிச்சைக்காரன் மீது பாணி பாடுவாய், " என்று கேட்டார்.
ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆசைகள் இருக்காது.