KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்

  • ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வேகத்தால் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாததை உங்களுக்குள் அனுமதித்து விடாதீர்கள்.
  • நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதை பிடித்துக்கொண்ட தவறுகள்தான் அதிகம்.
  • அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால் நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற சரியான விஷயங்களும் அதிகம்.
  • நமக்குப் பிடித்தவர்கள் என்பது, அவர்கள் நமக்கு அறவே பிடிக்காத செயலைச் செய்யும்வரை மட்டுமே !

நமக்குப் பிடிக்காதவர்கள் என்பதும் -அவர்கள் நம் மனதுக்கு மிகப் பிடித்த ஒரு செயலைச் செய்யும்வரை மட்டுமே! பிடித்தவர்கள் > பிடிக்காதவர்கள் என்ற இரண்டுமே நிலையில்லாதவை. நம் கருத்துக் கண்ணாடிகளால் மனிதர்களை முத்திரையிட்டு, பிரித்துப் பார்த்து -உண்மையைச் சரிய விட்டுவிட்டு, 'சரி' என்ற பெயரில் தவறு செய்வதை நிறுத்த ஆரம்பித்தால்போதும்…

புத்தனின் நடுநிலை மார்க்கத்தை நெருங்க ஆரம்பித்து விட்டீர்கள் ... நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது.