KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/டிடியும் தாண்டி விடலாம் ... வாSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

டிடியும் தாண்டி விடலாம் ... வா

  • திருப்தியின்மையால்தான் மீண்டும், மீண்டும் விட்டில் பூச்சி போலவே மனிதன் சிற்றின்பங்களின் வலையில் சிக்கிக் கொள்கிறான்.

'சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது. தாண்டிவிடலாம் - முயற்சி செய்' என்று ஞானியர் சொல்லக் காரணம், அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றை சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே பெருந்துன்பத்தையும் தந்து விடுவதுதான்.

  • இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் -'சிற்றின்பங்கள்' சாதாரணக் கூழாங்கற்களை விடச் சிறியவை.
  • பேரின்பம் இறைவன் கொடுத்த இரத்தினம். சிற்றின்பம் இறைவன் கொடுத்த கூழாங்கல்.

நாம் இரத்தினத்தை விட்டு விட்டு கூழாங்கல்லை வைத்து, ராசிக்கல் வியாபாரம் செய்யும் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக வாழ்வு கூழாங்கற்களைத் தரும். தியான வாழ்வு இரத்தினங்களைத் தேடித் தரும். கூழாங்கல்லா? இரத்தினமா? எது தேவை. இரண்டுக்குமே சாத்தியமுண்டு. முடிவு செய்யுங்கள்.