KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தப்பின் கதைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தப்பின் கதை

  • 'தப்பு' என்பது சுட்டிக் காட்டுவது ...
  • ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அவ்வளவே.
  • 'தவறு' என்பது ...
  • ஒரு மனிதன் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக் கொள்ள பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு.
  • ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.
  • ஆனால் இன்று ... 'தப்பு' துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

'தப்பு' என்ற சொல்லை, தங்கள் தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களின் கண்களை மூட வைக்கும் மிளகாய் தூள்போல் பலர் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

'தவறு' செய்யும்போது அல்லது 'தவறு செய்கிறோம் என்ற உணர்வு வரும்போது, தவறுக்குப் பயப்படுவதைவிட, மற்றவர்கள் தவறாகப் பேசிவிடுவார்களே!' என்று பயப்படும் கூட்டம்தான் அதிகம்.

நாம் தவறு என்று சொல்வது நம்மை பொறுத்தவரையில் மட்டுமே சரி. மற்றவருக்கு அதே தவறு 100% சரியாக இருக்கலாம்.

  • ஏனென்றால் ...

ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு மனிதா்க்கும், ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், 'தவறு' என்பது வேறுபடுகிறது.

  • நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுதான்.
  • விஷயம் இப்படியிருக்க ... உறவினர்களும் இன்றைய சமுதாயமும்

எதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறதோ, அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அதை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது மிகப் பெரிய தவறு.