உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
உங்களை மகானாக்கும் பட்டியல்
- குணமுதிர்ச்சியைப் பெறுவது சாதாரண மனிதன் ஞானமடைவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று.
- கோபம் -பாசம் -
பயம் -
- என்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறன்தான் குணமுதிர்ச்சி.
- உணர்ச்சிகளைத் தாண்டி, தானும் மற்றவர்களும் பரவசைமடையுமாறு வாழச் செய்யும் குணமுதிர்ச்சியே ஞானம்.
- உடலைத் தாண்டிய மனதையும், உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க வைக்க குணமுதிர்ச்சி பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.
- குணக் கோளாறுகளைத் தாண்டிய குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய வேண்டிய முதல் செயல், தானும் மற்றவர்களும் குணக்கோளாறால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.
- 'பட்டியலிடுவதே' குணக்கோளாறுகளை மறையச் செய்து குணமுதிர்ச்சியை வளா்க்கும்.
- உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.
- கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப் போன பரிதாபம்.
- பாசமும், பகையும்...சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும், வெறுப்பாகவும் வெளிப்படுகிறது.
- அது மதம் மீதான வெறியாகவோ, காமம் மீதான வெறியாகவோ, போர், புகழ் போன்றவற்றின் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பைப் பற்றிக் கொண்டு மனிதனை படாதபாடுபட வைக்கிறது.
- நீதி நெறிகளை தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும் நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும்- இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்து விடும்.