KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/விழிப்புணர்வின்மையே நிதானமின்மைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

விழிப்புணர்வின்மையே நிதானமின்மை

  • கோபம், சீற்றம் என்பவை நிதானமின்மை இருப்பதற்கான வெளி அறிகுறிகள்.
  • தடுமாற்ற உணர்வு நிதானமின்மை இருப்பதற்கான உள் அறிகுறி.
  • கோபப்படும் போதும் சீற்றப்படும் போதும் தடுமாறும் போதும்… முழு உணர்வோடு இருப்பதுதான் விழிப்புணர்வோடு இருப்பது.
  • நம் எல்லோருடைய கோபமும் சிறு பிள்ளைத்தனமானது. இது மறுக்க முடியாத உண்மை.
  • கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.
  • வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி இல்லாமல்போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோம்.
  • வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள்தான் நம்மைச் சீற்றமடைய வைக்கிறது! நிலைகுலைய வைக்கிறது! நிதானத்தையே கலைக்கிறது ! நிதானமின்மையை உருவாக்குகிறது ! எப்போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம்.
  • தடுமாற்றுவது உலகின் இயல்பு! தடுமாறுவது மனதின் இயல்பு! தடுமாறாமல் இருப்பது ஆத்மாவின் இயல்பு!
  • எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும், சீற்றமும் இருக்கும்.
  • கோபமும், சீற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு நிதானமின்மை ஏற்படும்.
  • நில நடுக்கத்தைப்போல் ஒவ்வொரு கோபத்திலும் அக நடுக்கம் ஏற்படுகிறது! நாடி நரம்புகள் உலுக்கப்படுகின்றன! ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது ! இதனால் யாருக்கென்ன பிரயோஜனம் ? கொஞ்சம் யோசியுங்கள்.
  • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
  • தடுமாற்றங்கள் எவ்வளவு ? கோபங்கள் எவ்வளவு ? எரிச்சல் எவ்வளவு ? என்று புரியவரும்.
  • நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக் களங்கப்பட்டு நிதானமின்மையாக மாறியிருக்கிறது என்று தெரியவரும். தவறுகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ?
  • 'ஆம்' என்றால் நிதானத்திற்கான முதல் படியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள்.
  • வெளி உலகில் வாழும் மனிதர்கள் தங்கள் உள் உலகத்திற்குள் செல்வதற்கான

'பாலத்தைக்' கண்டுபிடிப்பதுதான் - உள் உலக சாதனையின் முதல்படி.

  • தன் தடுமாற்றங்களைக் கண்டுபிடிப்பது பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள், தடுமாற்றம் அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்குள்ளேயே காத்துக்கொண்டிருக்கிறது.
  • தட்டுத் தடுமாறினாலும், பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான எளிய வழி.
  • விழிப்புணர்வு ஓர் சக்தி. தடுமாற்றத்தை தாண்டும் வல்லமையை அது நமக்குத் தரும்.
  • நிதானமின்மைக்குள் புகுந்து நிதானம் நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல் ஆரம்பியுங்கள்.