KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/நிதானம் ஓர் தானம்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

நிதானம் ஓர் தானம்

  • நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்கும் நிலையான சமாதான உணர்வே -நிதானம்.
  • நிதானம் - நீங்கள் ஆரோக்கியமானவர் என்ற செய்தியை வெளியிடும் கொள்கைப் பரப்புச் செயலாளர்.
  • நிதானம் - ஆன்மீகவாதியின் அடையாளச் சின்னம்.
  • நிதானம் இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள்தான்.
  • கோபத்தை நாம் பயன்படுத்தினால் - அது நிதானம்.

கோபம்

நம்மைப் பயன்படுத்தினால் - அது நிதானமின்மை.

  • கோபத்தை வெறும் சக்தியாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவதுதான் நிதானத்தின் முதல்படி.
  • நிதானம்தான் நீ செய்யும் தானங்களிலேயே சிறந்த தானம். நிதானம் எல்லாச் குழ்நிலைகளையும் முழுமையாகக் கொண்டாட உதவச் செய்யும்.
  • நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி ! திருப்தி !

சந்தோஷம் !

ஆகியவை பல நூறு தானங்கள் செய்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது.

  • முதலில், எவ்வளவு சலனப்படுகிறீர்கள் என்பதையும், எவ்வளவு மனத்தடுமாற்றம் உங்களுக்குள் இருக்கிறது என்பதையும் கண்டுபிடியுங்கள். பாதிப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
  • இரண்டாவது, சலனப்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு இருங்கள். எவ்வளவு சலனப்படுகிறீர்கள் ? எப்படிச் சலனப்படுகிறீர்கள் ? எதற்காகச் சலனப்படுகிறீர்கள் ? - என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.
  • இப்படியே தொடர்ந்து விழிப்புணர்வோடிருக்கும்போது உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும் - அதற்குப் பெயர்தான் நிதானம்.