KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் ... ரிலாக்ஸ் ...Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் ... ரிலாக்ஸ் ...

  • எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் மனம் தொடர்ந்து நிறம் மாறிக் கொண்டேயிருக்கும்.
  • ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர் 'நீ அழகு' என்று சொல்லிவிட்டால்போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கா்வமாக மாறிவிடும்.
  • அதே பெண்ணையோ இல்லை ஆணையோ 'நீ மோசம்' என்று தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லி விட்டால் போதும், தான் மோசமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும்.

மனித மனது உறுதியாக இல்லாததால்தான், மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்கள் மனிதனை குரங்காட்டம் ஆட வைக்கிறது. ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை மாற்றி விட்டது. உறுதித்தன்மையும், தெளிவும் மனதின் முதுகெலும்புகள்.

ஒரு முறை யோசியுங்கள் ... ஏன் வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா ? நாமே நிர்ணயிக்கக் கூடாதா ? பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!

  • முதலில் உங்களை நீங்களே

ரிலாக்ஸாக அனுமதியுங்கள். களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்.

  • தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு நல்ல எண்ணங்களை முழுவிழிப்புணர்வோடு உங்கள் மனத்திற்குள் நுழையச் செய்யுங்கள்.

புது மனதை நீங்களே வடிவமையுங்கள். புது எண்ணங்களால்! இது சாத்தியமானதே.

  • நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசன்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்! என்பதை அனுபவபூர்வமாய் உணர்வீர்கள்.