KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/எங்கே இருக்கிறார் கடவுள்?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

எங்கே இருக்கிறார் கடவுள்?

  • இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்றால், அவன் இல்லாத இடம் என்று ஒரு இடம், ஏன் ஒரு அணுகூட இருக்க முடியாது.
  • இறைவன் சக்தி வடிவமானவன், இறைவன் உருவமற்றவன் என்பது ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை. இறைவன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது. இறை சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள் தான் - இது ஒரு நல்ல துவக்கம். முடிவு அல்ல.
  • இறைவன், சக்தி வடிவில் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம் ?

இதற்குக் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum Physics) அருமையான விளக்கம் சொல்கிறது. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 99.99 சதவிகிதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன.

  • ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி மயம். ஒவ்வொரு பொருளும் சக்தி மயம். இன்றைய விஞ்ஞானம் 'அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது' என்று கூறுகிறது.
  • இதைத்தான் இறைவன் சக்தி வடிவானவன் என்றும், 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த' என்றும் சொன்னார்கள் நம்முடைய

ஞானிகள்.

  • இது மெய்ஞானம்.
  • சக்தி அழிவில்லாதது ; ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும்.
  • பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரித்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.
  • அது போலத்தான் மனித உயிர், கருவான பின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனிதனாக இருந்துவிட்டு, பின்பு காற்றில் கலந்துவிடுகிறது.
  • காற்றில் கலந்த உயிர் மீண்டும் மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படி சக்தி மாறி, மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
  • பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்ச கால அட்டவணையில் மனிதத் தோற்றம் ஒரு கண நேர நீர்க்குமிழி போன்றது.
  • 'இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று ஞானிகள் சொன்னது இதைத்தான்.
  • மனிதனிலும், தூணிலும், துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே.
  • சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்தச் சக்திதான் இறைவன்.
  • ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவமெடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.
  • நமது உடல்கூட நமது உயிர்ச் சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறான். ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான்.

ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?

  • மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது எப்படி? என்பது தெரியாது. பொறுத்துக் கொள்வது என்பது மனிதாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.
  • மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப் படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த பொறுத்துக் கொள்ளும் தன்மை (Tolerance).
  • பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது மனிதனின் பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்).

மன வளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக்கொள்ள முடியாமை.

  • மனிதன் தன் பொறுத்துக்கொள்ளுக் தன்மையை இழக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிருகமாகிறான்.
  • பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் புரிந்துக்கொள்ளும் தன்மையைப் பொறுத்தது.
  • நான் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவது ... யார் எது செய்தாலும் அதற்கு எந்தவித பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வது - என்று தயவு செய்து மாற்றிப்புரிந்து கொண்டு விடாதீர்கள்.
  • பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அது உணர்ச்சிப் பக்குவ நிலை.
  • ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது ஏன் இப்படி தத்தளிக்கிறேன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? இப்படி என்று உள்முகமாக திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.
  • ஏன் ? ... ஏன் ? ... ஏன் ? ... என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்ததால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும்.
  • உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
  • பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரியப்புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!