உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
தெளிவற்றத் தெளிவு
- நலிவடைந்த மனதைப் பெற்றவன் வாழ்வின் எதிர்பாராத திடீர், திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம். நலிவடைந்த மனதுதான் தெளிவற்றத் தெளிவு.
- வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.
- தெளிவு மலிவானதல்ல ஒரு சில புத்தகங்களைப் படித்தவுடன் கிடைப்பதற்கு ! பல தனி மனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டு பண்ணும்.
- கஷ்டத்திற்கு தீர்வு - கஷ்டப்படுவதல்ல. துக்கத்திற்கு தீர்வு - துக்கப்படுவதல்ல.
- தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும், நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகி விட்ட 'தெளிவற்ற தெளிவாகத் தான்' இருக்கிறது.
- தெளிவற்ற நிலையிலிருந்து -தெளிவது சுலபம் ! தெளிவற்ற தெளிவிலிருந்து -தெளிவது கடினம் !
- புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம்
தொடர்ந்து கஷ்டங்களையும், துக்கங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
- எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.
- கஷ்டங்களும், ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரணக் கற்கள் என்பது புரியும். இதழ் இதழாகத் தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.
பழகப் பழகிக்கொள்ளுங்கள்
- உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகு சுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது -'இமாலய சாதனைக்குச்' சமம்.
- மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம் பிடித்துக்காட்டும்.
- தன் உடல், மனம், உயிரை அரை குறையாக மதிப்பவன் பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பான்.
- சாதாரணமாகப் பழகுகுவது என்பது அசாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது, கொடுமையிலும் கொடுமை.
- நான்! நான்! எனது! எனது! என்று குறுகிய வட்டத்தில் வாழும்வரை குதூகலம் என்பதைக் கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்.
- இனிமையாகப் பழகப் பழகிக் கொள்ளுங்கள் உங்களை நீங்களே! சுமுகமான உறவுகள் சுலபமாகக் கிட்டிவிடும். தான் உண்டு, தன்வேலை உண்டு என்று இருப்பதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமில்லை. மிருகங்கள் ஏற்கனவே அப்படித்தானிருக்கின்றன.
- சுமுகமான மனித உறவுகளை வளர்த்துக் கொள்வது சுக-வாழ்விற்கான சுலபமான வழி.
- இயல்பாக இருப்பதுதான் மனித இயல்பு.
- சந்தோஷமாகப் பழகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால் சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்திவிட முடியும்.
- தர்மம் தனக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய எல்லாச் செயல்களும் தா்மம்.
- அதா்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய எல்லா செயல்களும் அதா்மம்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள்
- எடுத்த காரியத்தில் நம்பிகைவை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கைக் கை கொடுக்கும்.
- 'என் பெயர் XY/XX நான் ஒரு மனிதன், மனுஷி எனக்கென்று ஒரு குடும்பம், தொழில். என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மனஅளவில் நன்றாக இருக்கின்றேன்'.
- சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன நிலையில் வாழ்கிறான்.
- சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் மனிதனின் மனதைக்
குளறுபடியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன.
- சில நம்பிக்கைகள் முழுவதுமாக மனதை விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும்போது மனிதன் இறந்து விடுகிறான்.
- உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது.
- நம்புங்கள் ... உங்களை நம்புங்கள்! எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள்.
- நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் பிரச்சினை! நம்பிக்கைதான் தீர்வு !
- மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை ; நம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான்.
- சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.
- அதேபோல் நம்பிக்கை மாசடைந்திருந்தால் நம் வாழ்க்கை நாசம் அடைவது உறுதி.
- 'நான் மோசமானவன்' என்று கூறித் தாழ்வு மனப்பான்மையில் நோகவைப்பது அவனின் தவறான நம்பிக்கைதான்.
- 'நான் பெரியவன்' என்று நினைக்க வைத்து உயர்வு மனப்பான்மையால் நோக வைப்பதும் அவனைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.
- ஒருவனின் நம்பிக்கைதான் அவனின் மன, குண செயல்பாட்டின் அச்சாணி, நம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சுக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும். மனிதன் தடுமாறுவான்.
- நம்பிக்கைத் திடமானால் வாழ்க்கைத் திடமாகும். நம்பிக்கைச் சரியானதால் வாழ்வு சரியாகும்.
- உங்கள் நம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துத்தான் அது வாழ்வா ? இல்லை பிரச்சனையா ? இல்லை தீர்வா ? என்று முடிவு செய்யப்படும். நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும் !
கா்மச் சக்கரம்
- பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள் ? இறந்த பின் எப்படி இருப்பீர்கள் ?
- தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன ஒரு கட்டி போன்று உருவான கரு எப்போது தனி மனித உயிராக மாறுகிறது ? எப்போது அந்த கருவில் தனி உயிர் நுழைந்தது ?
- உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும் ? அதை சேகரிக்க முடியுமா ? ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா ?
- இந்த கேள்விக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே
'கர்மா' போன்ற குட்சுமமான விஷயங்களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.
- கருமை அடையாத ஆசைகளும், முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்ததுதான் கர்மா அல்லது கர்மவினை என்றழைக்கப்படுகிறது.
- ஆசை - நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவாதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது.
- ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும்போது அவர்கள் கொண்டிருக்கும் ஆசை, எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப் பொறுத்து அவர்களது அடுத்த பிறவி நிர்ணயமாகிறது.
- மனிதர்கள் தொடர்ந்து விதம், விதவிதமாகப் பிறவி எடுத்தாலும் மூழு திருப்தியை அடையாவிட்டாலும் அரசனும், ஆண்டியும் ஒன்றே. இரண்டு வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
- உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச் சக்கரத்தை (ஆசை - நிராசை) நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.
- கர்மவினைகள்... வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.