KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

  • கையில்லாதவன் கழுத்தில்லாதவனுக்கு மாலை அணிவிக்க முயன்றால் ... அது எப்படியிருக்கும் ? ஒருவர் இன்னொருவரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களும் தீர்ப்புகளும் அப்படிப்பட்டதே.

நம்மை நாமே புரிந்து கொள்வது கடினம். பல வேளைகளில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வருவது நமக்கே கடினமாக இருக்கும். இதை கவனித்திருக்கிறீர்களா ?

நம்மைப் பற்றியே நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில் - உலகத்தையும், உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் ... 'மஞ்சள் நிற'க் கண்ணாடி போட்டுக்கொண்டு 'ஊதா' நிறத்தை ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்தது 'பச்சை' எனத் தீர்ப்பு எழுதுவதைப் போன்று இருக்கும்.

  • இந்த ஒரு உதாரணத்தை முழுமுமையாகப் புரிந்துகொண்டால் மொத்தத் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

யாரையும் எதையும் எப்போதும் - 'தீர்ப்பிட முடியாது' என்பது உண்மை.

  • 'தீர்ப்பிடக் கூடாது' என்பது அறிவுரை. - 'தீர்ப்பிடாமல் இரு' என்பது தியானம்.

நம் மனக்கண்ணணக் குருடாக வைத்துக் கொண்டு மற்றவர்களின் குணத்தைப் பற்றியும், நடத்தையைப் பற்றியும் விமா்சிக்க ஆரம்பிக்கும்போதுதான் வினையே ஆரம்பிக்கிறது.