KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியதுSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது

யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்க எதுவுமே தடையில்லை. சாதனை பெரிய விஷயமா என்ன ? எச்சரிக்கை !

  • சாதிக்கலாம் என்ற கனவையும், சாதித்தபின் நிம்மதியாயிருக்கலாம் எனும் நம்பிக்கையையும், சாதனை துடைத்தெறிந்துவிடும்.

சாதனை என்பது நாம் நினைக்குமளவுக்கு பெரிய விஷயமல்ல என்ற உண்மை சாதிக்கும்வரை மனிதனுக்குத் தெரியாது, புரியாது.

  • உள்ளுலகில் சாதித்தவன் வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தமாயிருப்பான். நிம்மதியாயிருப்பான். உள்ளுலகில் சாதிக்காதவனுக்கு வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை!
  • சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்துதான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.

பாச வலை

  • நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றவரை நேசிப்பதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியும்.

நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள் மலராதவரை... 'நேசம்' என்ற பாச வலையால் ஒருவரை ஒருவர் மனதளவில் கட்டிப் போட்டு, மற்றவரை நம் கைக்குள் வைத்திருக்க உதவும் ஒரு தந்திர வலையாகத்தான் 'நேசத்தை' நாம் பயன்படுத்த முடியும்.

  • உங்கள் உறவுகளுக்கு முழுச் சுதந்திரம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், தெரிந்துகொள்ளுங்கள் ... இவ்வளவு காலமாக நேசம் என்ற வேஷமிட்டு பாச நாடகம்தான் நிகழ்ந்திருக்கிறது. உண்மையான நேசம் இன்னும் நிகழவில்லை.
  • பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி நம் நெருங்கிய உறவுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறோமா ? அல்லது நம் கட்டுக்குள் அவர்களை வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா ? ஆராயுங்கள். உண்மை புரியும். பாச வலையின் இறுக்கம் தெரியும்.