KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?

  • அதிகபட்சமாக நமக்கெல்லாம் என்ன தெரியும் ? சில மனிதா்கள்... சில விஷயங்கள் ... சில இடங்கள் ... யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள் ? ஒரு பட்டியலிடலாம்.
  • உங்களின் பெயர் மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இரண்டாயிரம் போர்; உங்களின் பெயர், விலாசம், பெற்றோர் வரை தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள்,

உறவினர்கள் ஆயிரம் பேர்; உங்களின் குணம், நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பத்து பேர்;

  • மொத்தமாக உங்களோடு நேரிடையாக சம்பந்தப்பட்டவர்கள் 300-லிருந்து 350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்! எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
  • இத்தனை கோடி மக்கள் இருந்தும், அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில மனிதர்கள் மட்டுமே.
  • அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் யார் ? யார் ? என்று எண்ண ஆரம்பித்தால் ஐந்து

விரல்களைத் தாண்டுவது பலருக்குக் கடினம். நம் கதி இப்படியிருக்க - மற்றவர்களின் கதி எப்படி இருக்கும் ? ஒரு சிறு ஆய்வு செய்யலாமே! எவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரியும் ?

  • ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்க, பனிரெண்டாவதுவரை வருடத்திற்கு ஐந்தாறு புத்தகங்கள் படித்ததை தாண்டி, கல்லூரியில் ஒவ்வொரு வருடத்திற்கும் படித்த ஒரு சில புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது படித்த பத்திரிக்கைகள், கதைகள், டி.வி.யில் பார்த்த சில சம்பவங்கள் போன்ற செய்திகளைத் தாண்டி உண்மையில் நமக்கு என்ன தெரியும் ?

ஞானம் அடைவதற்கு முதல்படி ...

  • சிரிப்பு உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.
  • சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் வித்தியசங்கள் மிகக் குறைவு.
  • சிரிப்பு - உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.
  • சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய சாதாரண விஷயம் அல்ல.
  • சிரிக்கத் தெரியாத சிலர், அது ஒன்றும் சீரியஸான விஷயம் இல்லை என்பார்கள் - இது தவறு.
  • சிரிப்பை விட சீரியஸாக எடுத்து அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
  • 'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' - இது வெறும் பழமொழி அல்ல. மருத்துவ குணம் கொண்ட 'தியான சூத்திரம்'. தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை.

வாய்விட்டுச் சிரிப்பது நமது அகங்காரத்தை உடைக்கிறது. அகங்காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்கமாக இருப்பார்கள். சிரிக்கிற போது அகங்காரம் கரைந்து வெறுமையாகி விடுகிற சந்தா்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி.