KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/கோபத்தை அடக்காதீர்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

கோபத்தை அடக்காதீர்கள்

  • எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.
  • கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள். கோபம் ஒரு மன உணர்வு. உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும், தேவையும் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் அதுதான் உங்களுக்கு எமனாகவும் இருக்கும்.
  • கோபத்தை அடக்கி வைக்கும்போது, அது நம் மனதுக்குள் கிடந்து குமுறுகிறது. வெளிவர முடியாத கோபம் நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அடிக்கடி கோபப்பட்டு, அதை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அழுத்தி விடுகிறவர்களுக்குதான் ரத்த அழுத்தம் வருகிறது ; மாரடைப்பு வருகிறது ; நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது. அதேபோல், அளவுக்கு மீறி கோபப்படும்போது பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.

கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாக இருந்தால் நீங்கள் தாரளமாக ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால் கட்டுக் கடங்காத குதிரை உங்களைக் கீழே தள்ளி விடும்.

  • அளவுக்கு மீறிய கோபம்தான் சாபமாக மாறும். சாபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
  • கோபத்தை நீங்கள் தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். சக்தியைச் சேமியுங்கள். முக்தி நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.