KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/அறிவு, அதிகாரம், திருப்திSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

அறிவு, அதிகாரம், திருப்தி

  • சாதனைக்குப் பிறகு சொர்க்க சுகம் அடையலாம் என்ற கனவு பொய்த்து நரக வேதனையை அடைய நேரிடும்போதுதான் வாழ்வே மாயமாகத் தெரிகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வருகிறது.
  • அறிவு,

அதிகாரம்,

திருப்தி

  • இந்த மூன்று துறைகளில்

எதுவேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.

  • நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை -ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.
  • அறிவின் சிகரத்தை அடைய அதிகாரத்தின் உச்சியைத்தொட - அதற்கே உரிய உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.
  • ஆனந்த அனுபவமான திருப்தியில் - அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும், புரிந்து கொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.
  • தியானமும், ஞானமும் கைகூடினால் நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதனைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்

  • ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. தெரிந்த சிலருக்கு அது புரியாத ஒன்று. அனுபவித்து உணர்ந்த வெகு சிலருக்கு அது விளக்க முடியாத ஒன்று.
  • ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அதையும் தாண்டி ...
  • 'ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது; ஆனந்தத்தை இப்படிக் கூட அடையலாம், இதுதான் ஆனந்தம்' என்று சுட்டிக் காட்ட முடியும். ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.
  • எல்லா ஞானிகளின்... ஞான உபதேசங்களும், தியான முறைகளும் அந்த ஆனந்தக் கடலை காட்டத்தான்.
  • தனி மனிதன் தன் தனி வாழ்வில் தனக்குள்ளேயே ஆழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த ஆனந்தம்.