உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
அங்கீகாரத்தை வெளியே தேடாதீர்கள்
- அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம்
- உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உற்சாகமான மனிதனுக்கு வெளி அங்கீகாரம் தேவையில்லை. அங்கீகாரத்தை வெளியில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனால் உற்சாகமாக இருக்க முடியாது.
- நீங்கள் நல்லவர் ? நீங்கள் அருமையானவர் ? சில குறைகள் இருந்தாலும் சீக்கிரம் மாற்றிக்கொள்ளும் பக்குவம் பெற்றவர் நீங்கள் என்பது போன்ற அங்கீகாரங்களை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
- நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
- நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம். இது உங்களை நீங்களே அவமரியாதை செய்வதற்குச் சமம்.
- உங்களை நீங்களே அங்கீகரிக்க ஆரம்பியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.