உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஒரு தியானிக்கு எது தேவை?
- வெறும் உடலால் மாத்திரம் தியானம் செய்வது ... ஒரு நல்ல உடற்பயிற்சி. அவ்வளவே. உடலோடு சேர்ந்து மனதையும் தியானத்தில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல சடங்கு. அதற்கு மேல் ஆகாது.
- உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் முழுமையாக தியான முறையில் ஈடுபடுத்தினால்தான் அது தியானம்.
- சிரத்தையில்லாதவனால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.
- ஆழ்ந்த சிரத்தையைச் செய்யும் செயலிலெல்லாம் கொண்டு வரக் கற்றுக் கொண்டுவிட்டால், செய்யும் செயலெல்லாம் தியானமாகும்.