KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ருசித்தல்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ருசித்தல்

  • 'விழிப்புணர்வோடு ரசித்து ஈடுபடும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.

ருசிக்கு அடிமையானவன் -பசிக்குப் புசிக்காமல், ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்குப் புசிப்பதால் ... உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது. உடல், ருசியின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுகிறது.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் ... மனிதன் ருசிக்குச் சாப்பிடுகிறான். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன ! ! !