உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
கனவு! கற்பனை! நிஜம்!
- வாழ்க்கையை பற்றிய நமது கற்பனைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.
- கற்பனை என்ற மனத்திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப் படத்தையே விதம், விதமாகப் பார்த்து சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும் 'மகா பாவிகள்'.
- எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் ? எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும் ? என்னென்ன
*
சொத்து, சகம், சௌகரியம் வேண்டும் ? என்று எதிர்கால தேவைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவால் மனிதனுக்குப் பரிசாகத் தரப்பட்ட 'மனதின் ஒரு செயல்பாடு'தான் கற்பனை.
கற்பனைகளை ... நிஜமாக்க முயல்பவனுக்கு, கற்பனை ஒரு உந்து சக்தி. கற்பனைகளை ... நிஜமாக்காமல், கற்பனை மேல் கற்பனை செய்து வாழ்வை வீணடிப்பவனுக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.
- எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஓர் அற்புதம்!
நிகழ் காலத்தை வீணடிக்கத் துணைபோகும் கற்பனை அற்பம்!
- கற்பனை அற்புதமா ? அற்பமா ?
- என்பது கற்பனைகளை நீங்கள் நிஜமாக்குவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
- கற்பனைச் சக்தி - நீங்கள் உங்களின் காரியங்களை திட்டமிட்டு சரியாக முடிப்பதற்காகக் கடவுளால் வழங்கப் பட்ட ஓர் அற்புதம்.
- கற்பனைகள் நிஜமாக்குவதற்காக என்றால் கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக கற்பனை சரியே!