KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/உங்களை உத்தமராக்கும் உண்மைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உங்களை உத்தமராக்கும் உண்மை

  • எப்போதும் எதனாலும் அசைக்க முடியாத கருணை உணர்வோடு இருப்பதே குணமுதிர்ச்சியின் பூரண வெளிப்பாடு. இந்த நிலையைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து, வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
  • முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி முரெ - சென்னின் அழகானக் கூற்று ஒன்று ... காற்றில் சருகாகிவிடு! ஆற்றில் தக்கையாகி விடு!
    • என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!

காற்றோடு காற்றாகச் செல்லும், தக்கை நீரோடு நீராகச் செல்லும், ஆனால் சருகு சருகாக இருக்கும். தக்கை தக்கையாக இருக்கும்.

இரண்டுக்குமே கஷ்டம் இருக்காது. இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறேன். வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக்கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி.

அப்படி மாறிவிட்டால்... மற்றவர்களும் நம்மைப் போன்றே, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிப்பவர்கள்தான். அவர்களும் நம்மைப் போன்றே, சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் இழந்து, செய்வதறியாது மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பவர்கள்தான் என்ற உண்மை புரிய வரும்.

  • கோபத்திற்குப் பதில் கருணை பிறக்கும்.
  • வெறுப்பிற்கு பதில் அன்பு பிறக்கும்.
  • சலிப்பு களிப்பாக மாறும். எப்போது ? குணம் முதிர அனுமதித்தால்!