KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/மனமென்னும் வேலைக்காரன்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

மனமென்னும் வேலைக்காரன்

  • மனிதன் மனிதனாகவே வாழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பே மனம்.
  • மனிதன் என்ற எஜமானன் ஆனந்தமாக வாழ், அவன் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு வேலையாள்தான் மனம்.
  • மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து மனம் மனிதனைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
  • எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக்காரன் எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும் ?
  • பக்குவப்படாத வேலைக்காரன் எஜமானாக மாறுவது குரங்கைப் பிடித்துச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதை குரங்கோடு ஒப்பிட்டுக் 'குரங்கு மனம்' என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாதவரை பிரச்சினைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.
  • மனம் பல பிரச்சினைகளைப் பல போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான் மாயை !
  • மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பது போலக் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பதுபோல நினைத்து அதனால் அதிகம் பயப்படுவது அல்லது அதற்காக அதிகம் ஆசைப்படுவது இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.
  • மனமே மாயை ! மனதின் மாயை பேயைவிட விசித்திரமானது!
  • நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் நீர்க்குமிழி போல சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக் கூடியவை.
  • இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் ... மனதை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள் மனம் உங்களை கட்டுப்படுத்தாது!