ஜீவன் முக்தியை மலர்க்கிடும் அருமையான உபாயம்
மீண்டும் மீண்டும் இந்த ஒரே விஷயத்தில்தான் அர்ஜுனன் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். ஏனெனில் அவர் வாழ்க்கையை ஒரு வியாபாரமாகத்தான் பார்த்தார். கிருஷ்ணர் மிகவும் பொறுமையாக இருந்தார். அவர் மிகவும் கருணையுள்ளவர். அன்பின் திருவுருவம்.
மிகச் சரியாக அங்குலம் அங்குலமாக அர்ஜுனனை மேலேகொண்டு வருகிறார். அவர் பொறுமையை இழக்கவில்லை. ''நான் உனக்கு முன்பே சொன்னேனே,'' என்றும் சொல்லவில்லை.
கிருஷ்ணர், காமம், ஸன்யாஸம், யாகம், கடமை மற்றும் துறவு என்ற பாதைகளின் கோட்பாட்டை விளக்குவதற்காக, இந்த ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காக மட்டும் குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.
நாம் பார்க்கப் போகிற காமம், ஸன்யாஸம் என்ற கோட்பாடுகளை விளக்க குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.
ஆனால் எந்த நேரத்திலும் பொறுமையை இழக்காமல் அவர் இதைச் செய்தார். ஒருமுறைகூட அவர் அர்ஜுனனிடம் சத்தம் போட்டுப் பேசியது இல்லை. அவர் கருணையே வடிவானவர்.
அவர் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழே இறங்கி வந்து, ஒரே கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திச் சொல்லி, மெதுவாக அர்ஜுனனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
காமமும் ஸன்யாஸமும் அதாவது கடமையும் துறவறமும் பற்றிய கேள்வி,
நினைவு தெரிந்த காலம் தொட்டே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் பதில் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் இந்தக் கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கீதை ஏன் இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கிறது கேட்பார்கள். ஏனென்றால் அதை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை!
கீதை ஏன் இன்றளவும் நாகரிகமான மக்களுக்கும்கூட இருக்கிறது ? கீதை 5000 ஆண்டுகளுக்கு
5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டாலும் கன்றளவும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறது கீதை !
முன்பே சொல்லப்பட்டாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறதே, அது ஏன் ?
அது ஏனென்றால் மனிதன், தான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. சரித்திரம், தானாகவே திரும்புகிறது.
விழிப்புணர்வற்ற நிலையில் நடக்கும் செயல்பாடானது ஒருபோதும் விழிப்புணர்வு சக்திக்குள் வருவதில்லை. மனிதர்கள் பெரும்பாலும் அந்த விழிப்புணர்வற்ற நிலையாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.
பெரும்பான்மையான நேரங்களில், அவர்கள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதைக்கூட அறியாமல்தான் இருக்கிறார்.
மேலும் அதனால்தான் அவர் மேலும் சென்றுகொண்டே இருக்கிறார் எதையும் சாதிக்காமலேயே! அவருக்கு ஏதோ தேவையென்று அதன் பின்னால் எட்டிப் பிடித்துவிட்ட உடனேயே, அவர் வேறு ஏதோ ஒன்றைத் தேட ஆரம்பித்துவிடுகிறார். அதனால் அவருக்குள் எப்போதும் ஒரு அமைதியின்மை, ஓய்வின்மை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.
அமைதியின்மை மனிதனுக்குள் நிலையான அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். விழிப்புணர்வை இந்த மன அழுத்தத்திற்குள் பெருக்கெடுக்கச் செய்வதன் மூலம்தான், நீங்கள் இதிலிருந்து விடுபட முடியும்.
நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, உங்களுக்குள் ஒரு மன அழுத்தம் ஏற்பட அனுமதித்து, அதை நீங்கள் விழிப்புணர்வுடன் கடந்து வந்தால், அப்பொழுது உங்களுக்குள் நடக்கும் அந்தச் செயல்முறையில் நீங்கள் ஜீவன்முக்தி அடைந்துவிடுவீர்கள். வேறு ஒன்றும் தேவையில்லை.
ஒரே ஒருமுறை மன அழுத்தம் உண்டானால்போதும், அது உங்களை முழுவதுமாக எரித்துவிடும். நீங்கள் ஜீவன் முக்தராக ஆகிவிடுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றிவிடலாம்
ஆனால் நாம் நம்மீது வேலை செய்ய எதையுமே முழுமையாக அனுமதிப்பதில்லை. நம்மையே நாம் எதிர்கொள்ளப் பயப்படுகிறோம். தைரியமாக அதை எதிர்கொள்வதற்கும், உண்மையை அறிவதற்கும் பதிலாக, நம்முடைய விழிப்புணர்வற்ற நிலையிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு, அது நம்மை ஆட்சிசெய்யும்படியாக விட்டுவிடுகிறோம்.
வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய ஆசிரியர். அது நமக்குக் கற்றுத்தரும்
பாடங்களைக் காட்டிலும் சிறந்த பாடல்களை வேறு யாரும் கற்றுத்தர முடியாது. வாழ்க்கை நமக்குத் தொடர்ந்து கற்றுத் தந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் நாம்தான் ஒருபோதும் அந்த முக்கியமான பாடங்களைக் கவனிப்பதும் இல்லை, கற்றுக் கொள்வதும் இல்லை. இந்தப் பிறவியில் நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம் என்பதைக் குறித்துக் கொள்வதே இல்லை.
நம்முடைய பயணம் முடியும் தறுவாயில், ''நான் இவ்வளவு தூரத்தைக் கடந்து வந்துள்ளேன். நான் இந்த இந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவியில் நான் எந்த இடத்தில் விட்டேனோ
அந்த இடத்திலிருந்து தொடர்வேன், ' என்று அந்த இடத்தை நாம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அளவு செய்தாலே போதுமானது. பிறவி என்று சொல்லும்போது ஏதோ நம்முடைய மொத்த வாழ்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நாள் இரவையும் பகலையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.
ஒவ்வொரு பகலும் இரவுமே ஒரு பிறவிதான், ஒரு ஜென்மம்தான். அது ஒரு வாழ்க்கைச் சுழற்சி. ஒவ்வொரு நாளுமே நாம் இறந்தும் பிறப்பெடுத்துக்கொண்டும்தான் இருக்கிறோம்.
'நான் இன்று ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தினமும் விழிப்புணர்வுடன் தீர்மானியுங்கள் அல்லது ஒரு நாள் என்பது அதிகமாகத் தெரிந்தால் வாரத்திற்கு ஒருமுறை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
''இந்த வாரம் நான் ஒரு கருத்தைப் பற்றித் தெளிவாக என்னுடைய விழிப்புணர்வு நிலைக்குள் செல்ல அனுமதிப்பேன், '' என்று உங்களுக்கு நீங்களே இப்போதிலிருந்தே ஜீவன் முக்தத் தன்மையை அடைந்துவிட்டீர்கள்.
நான் சொல்கிறேன், இப்படியாக வாரம் ஒரு கருத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை நீங்கள் அனுமதித்திருந்தால்கூட, இப்போது நீங்கள் ஞானமடைந்திருக்க வேண்டும். வாழ்க்கை உங்கள்
ஒருமுறை உங்களுக்குள் மன அழுத்தம் ஏற்பட அனுமதித்து, அதை விழிப்புணர்வுடன் கடந்தாலேபோதும், நீங்கள் ஜீவன் முக்தி அடைந்துவிடுவீர்கள்.
கவலையுமில்லாமல், ஆனந்தமாக நித்யானந்தமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வார ஆரம்பத்திலும் 'இந்த வாரம் முற்றிலும் நான் என்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனிப்பேன், இவ்வளவு தூரம் பயணம் செய்வேன், இந்த இடத்தில் நிறுத்திக்கொள்வேன், அதைத் தெளிவாக குறித்துக்கொள்ளவும் செய்வேன்' என்று தீர்மானியுங்கள்.
அடுத்த வாரம், நீங்கள் எந்த இடத்தில்விட்டீர்களோ அந்த இடத்தை திரும்பிப் பார்த்து, "ஆம் இந்த வாரம் நான் இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன், தொடங்குகிறேன்,'' என்று சொல்லுங்கள். இதை நீங்கள் உண்மையாக கடைப்பிடித்தீர்களானால், அதுவே போதுமானது. உங்களுடைய மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்; உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்.
புதுப்புது தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே!
ஆனால் என்ன ஒரு பிரச்சினை என்றால், நாம் எப்போதுமே தவறான இடங்களிலேயே குறியீடு செய்கிறோம்.
ஒரு சின்ன கதை :
இரண்டு நண்பர்கள் ஒரு படகை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்கள். ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் நூறு மீன்களைப் பிடித்தார்கள். நண்பர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, "இந்த இடத்தை அடையாளம் குறித்து வைத்துக்கொள். அடுத்த முறை நேரடியாக இங்கேயே வந்து மீன் பிடிக்கத் தொடங்கிவிடுவோம்,'' என்று சொன்னார்.
அடுத்த முறை மீண்டும் மீன் பிடிப்பதற்குப் போனார்கள். அப்போது மீன் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைக் குறிக்கச் சொன்னவர் மற்றவரைப் பார்த்து, ''நீ அந்த இடத்தைக் குறித்து வைத்தாயல்லவா ?'' என்று கேட்டார். அதற்கு இன்னொருவர், ''ஆமாம் நான் அந்த இடத்தின் அடையாளமாக படகில் இரண்டு குறுக்குக் கோடுகள் போட்டு வைத்திருக்கிறேன்,'' என்று பதில் சொன்னார்.
அதற்கு முதலாமவர், ''என்ன முட்டாளடா நீ? நல்லவேளை, நாம் இன்றும் அதே படகைக்கொண்டு வந்திருக்கிறோம். இல்லையென்றால், இப்பொழுது நாம் என்ன செய்ய முடியும் ?'' என்று கேட்டார்.'
நாமும்கூட அடையாளம் வைக்கிறோம்; வாழ்க்கையில் அல்ல, படகில்!
நம்முடைய வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் அடையாளம் குறிக்க வேண்டுமோ, அந்தச் சிறந்த பகுதிகளில் நாம் அடையாளங்களை ஒருபோதும் குறிப்பதில்லை.
நாம் இலக்குகளையுமே நம் அடையாளங்களாகக் குறித்து வைத்துக் கொள்கிறோம்; அதிலேயே சிக்கிக்கொள்கின்றோம். ஆசைகள் மற்றும் உலகளாவிய நோக்கங்களின் மேல் இடப்படுகிற அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு, புதிய அடையாளங்கள் இடப்படுகின்றன.
அவை, நம்மைச் சுற்றியுள்ள அடிப்படையிலும் இந்தச் சமூகம் எதைச் சொல்கிறதோ அதன் அடிப்படையிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்கள் தற்காலிகமானவை. அவை நம் உள் வளர்ச்சியை ஒன்றும் பிரதிபலிக்காது என்பதை மறந்தேவிடுகிறோம்.
உள்முக முக்கியத்துவம் அதைப் பற்றிச் சிந்திப்பதற்குகூட நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த ஒரு புரிந்துகொள்ளுதலையும் நம்மீது செயல்பட நாம் அனுமதிப்பதே இல்லை.
நம்மைக் கீழே விழச்செய்கிற படுகுழிகளைப் போன்ற குறைபாடுகள் நம்மிடம் எவை எவை இருக்கின்றன, நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பவற்றைப் பற்றிய உணர்ச்சியுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தாலே
வாரம் ஒரு கருத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை உங்கள் இருப்பு நிலைக்குள் செல்ல அனுமதியுங்கள், அதுபோதும், நீங்கள் ஞானமடைந்து விடலாம்.
போதும் என்றால், நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். அதன் மூலம் நல்ல தனி மனிதராகவும் வளர்ச்சியடைகிறோம்.
ஆனால் நாம் திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அளவுகோல் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தவறுகள் என்னவோ அவையேதான்!
பெரிய அளவில் தவறுகளைச் செய்யும் ஒருவர் தலைவராகிறார். அதே தவறுகளைக் குறைந்த அளவில் செய்பவர் தொண்டராகிறார். அவ்வளவுதான்.
பெரிய அளவில் தவறுகளைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பவர் தலைவர். அதே தவறுகளைச் சிறிய அளவில் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்துபவர்தான் தொண்டர். ஒரு தலைவருக்கும் தொண்டருக்கும் வித்தியாசம் இதுதான்.
நான் சொல்கிறேன். ஒரே ஒரு பாடத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய அனுமதித்து, அது உங்கள் வாழ்க்கைக்குள் ஊடுருவி, செயல்படத் உங்களுடைய உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்.
''ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தவறுகளைச் செய்யுங்கள்,'' என்று எப்போதும் நம்முடைய பிரம்மசாரிகளுக்கும் பிரம்மசாரிணிகளுக்கும் மற்றும் ஆச்ரமவாசிகளுக்கும் சொல்வதுண்டு, உண்மையைச் சொல்லப் போனால், புதிதாகத் தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. புதிய தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் புதுமையாகச் சிந்திப்பவராகவும், புதுமைகளைப் படைக்கும் திறன் பெற்றவராகவும்கூட இல்லை. அதுதான் இங்கே பிரச்சினை.
மீண்டும் ஒருமுறை இதே தவற்றைச் செய்யமாட்டேன் என்று நீங்கள் உறுதி செய்தாலும்கூட, உங்கள் வாழ்வு உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்; ஆனால் மீண்டும் மீண்டும் நாம் ஒரே மாதிரியான தவறுகளை மட்டுமே செய்கிறோம். ஏனென்றால் நம்முடைய மனம் அதே பாதையிலேயே செயல்பட்டுப் பழகிவிட்டது.
இந்தப் பாதைதான் ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் காம வாழ்க்கையையோ அல்லது ஸன்யாஸ வாழ்க்கையையோ மேற்கொண்டோமென்றால், நாம் ஆனர்த்தத்தை நித்யானர்த்தத்தை ஒருபோதும் அடைய முடியாது. முடிவில்லா விழிப்புணர்வு நிலையை நாம் ஒருபோதும் அடைய முடியாது.
காமம், ஸ்ரீயாஸம் இந்தப் பாதைகளைப் பற்றி பகுத்துப் பார்ப்போம்.
காமம், ஸரியாஸம் என்கிற இந்த இரண்டு கருத்துக்களையும் பார்க்கலாம். காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் செய்யப்படுவது கா்மம். எப்போதும் மாறாமல் நம்முள் நிலைகொண்டிருக்கும் பயத்தின் காரணமாகச் செய்யப்படுவது ஸ்ரீயாஸம்.
நமக்குள் எப்போதுமே வாழ்க்கையைப் பற்றிய துணிந்து இல்லையென்றால், துறந்துவிட காயப்பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் ஸ்ரீயாஸத்திற்கு முதல் காரணம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பாரம்பரியமாக நாம் ஸ்ரீயாஸம் என்று சொல்வது எல்லாமே வாழ்க்கைக்குப் பயந்து ஓடியதைத் தவிர வேறெதுவும் இல்லை.
ஸ்ரீயாஸம் என்பது வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு, தப்பி ஓடுவதாகத்தான் இருக்கிறது. சிலா் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள இயலாமல் அவற்றால் மூழ்கடிக்கப்படும் பொழுது, மேற்கொண்டு வாழ முடியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியாக ஸ்ரீயாஸம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கைச் சுழலில் சிக்கி மூழ்கிவிடுவோமோ என்று பயப்படுபவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்குள்ளிருக்கும் ஆழமான பயங்களை மறைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
அடுத்து கா்ச-செயல்பாடு என்ற பெயரில், மக்கள் போராசையினால் பொருள் சார்ந்த செல்வங்களைத் தேடி அதன் பின்னால் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒருபுறம் பயத்தைப் பார்த்துப் பயந்து அதை விட்டு விலகி ஒடிக் கொண்டிருக்கும் மக்கள், மறுபுறம் பேராசை மேல் ஆசைப்பட்டு அதை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் மக்கள்.
இரண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அடையவோ அல்லது விழிப்புணர்வைப் பெறவோ மாட்டார்கள். இரண்டு பிரிவினருமே சரியான பாதையில் இல்லை.
லந்யாஸம் பொறுப்புகளைக் கட்டிக்கழிப்பது அல்ல ; மாறாக எல்லாவற்றிற்குமே பொறுப்பேற்றுக் கொள்வது.
உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.
- பேராசையிடம் சரணடைந்தவர்கள்.
- பயத்திடம் சரணடைந்தவர்கள்.
- மூன்றாவதாக, மிக உயர்ந்த பிரபஞ்சப் பேரறிவிடம், தெய்வீக விழிப்புணர்விடம், நிலையான முடிவில்லாத விழிப்புணர்விடம் சரணடைந்தவர்கள்.
பேராசையிடம் சரணடைந்தவர் காணாமல் போகிறார். முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மூலாதார கூரத்தில் அவர் சிக்கிக் கொள்கிறார். இங்குதான் நமது மொத்தப் பேராசையும் நிலைகொண்டுள்ளது.
இந்த மாதிரியான மனிதர்கள், உலகியல் பொருட்களைத் தங்கள் உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற பேராசையின் காரணமாக பல பொருட்களைத் தேடி அவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். அது மீண்டும் மீண்டும் பேராசைக்கே வழி வகுக்கிறது.
அதனால் அவர்கள் மேலும் மேலும் இந்தப் பேராசை என்னும் விஷச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், பேராசைக்கு அவர்கள் அடிமையாகிப் போகிறார்கள்.