KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பாகம் 2: பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பாகம் 2: பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5

உடனே, தாங்கள் ஓட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதையும் தங்களால் இனி ஈடுகொடுக்க முடியாது என்பதையும் தங்களுடைய சொந்த இருப்புத் தன்மையுடன்கூட தாங்கள் இதுவரை இணக்கமாக இருந்ததில்லை என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். இதுதான் மன அழுத்தமாகவும் நோயாகவும் மாறுகிறது.

அதனால்தான் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு பலனைப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்பி, அதை அடைய முடியாமல் போகும்பொழுது, வாழ்க்கையைத் தோல்வி என்று உணர்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால்கூட, நீங்கள் வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டி வரும். எப்படியிருந்தாலும் இரண்டு வழிகளிலுமே அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

வாழ்க்கையே ஒரு நன்மைதான். நாம் எப்போதும் ஏதாவது இரண்டு பொருட்களில் எது அதிக பயனுள்ளது என்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோமேயானால், அது நாம் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட மனத்துடன்தான் இருக்கிறோம் என்பதையே குறிக்கிறது.

வாழ்க்கையோடு நாம் வியாபாரம் செய்ய முடியாது. நம்முடைய மொத்த வாழ்க்கையையும் ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல நிர்வகிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு வியாபார மனத்திலிருந்தும் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, குறைந்தது அரைமணி நேரமாவது பணத்தை அடிப்படையாகக் கொள்ளாத, நோக்கம் இல்லாத ஏதோ ஒரு செயலில் உங்கள் மனத்தை ஈடுபடுத்துங்கள்; ஏதாவது ஒவியம் வரையுங்கள்; ஏதாவது எழுதுங்கள்; ஏதாவது கவிதை எழுதுங்கள்.

ஒவியம் பெரிய ஓவியக் கண்காட்சியில் உங்கள் ஒவியங்கள் இருப்பது போன்ற கற்பனைக் காட்சிகளைத் தவிர்த்துவிடுங்கள். "இந்த ஒவியங்களை எல்லாம் வரைந்து டெல்லியில்

நம்முடைய வாழ்க்கையை ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல் நிர்வகிக்க முடியாது. ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தி பணம் சம்பாதிப்பேன்," என்பதுபோல் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.

கண்காட்சி நடத்துவது பற்றியோ அல்லது உங்கள் திறமையை மக்களுக்கு எப்படி வெளிக்காட்டுவது என்பதைப் பற்றியோ கவலைப்படாமல், குறைந்தது அரைமணி ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.

ஒவியம் வரையத் தொடங்கும் முன்பாகவே நாம், 'என் நண்பர் வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைக் காட்டி, இந்த எண்ணத்தை நான் எப்படி வளர்த்துக்கொண்டேன், எப்படி இந்த ஒவியங்களை எல்லாம் வரைய ஆரம்பித்தேன் என்றெல்லாம் விவரிப்பேன்' என்று நினைக்கிறோம்.

உங்கள் திட்டங்களை எல்லாம் சொல்லி எப்படி உங்கள் நண்பரைச் சலிப்படையச் செய்யலாம் என்று தீர்மானிக்கிறீர்கள்.

இப்போது என்னுடைய (மோசமான) நிலையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு வருடத்தில் பல வீடுகளுக்குச் செல்கிறேன். நான் போகும்போது சில வீடுகளில், அந்த வீட்டைப் பற்றிய முழு விவரங்களையும் ஆரம்பித்துவிடுவார்கள்.

வீட்டு வாசலில் இருந்தே தொடங்குவார்கள். ''ஸ்வாமிஜி, இந்தப் படம் இந்த ஊரில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து வந்தது. நான் இதை 1962ல் வாங்கினேன்," இது போன்ற

விஷயங்களைப் பேசுவதற்கு மக்கள் விரும்பவே செய்கிறார்கள். அதே போன்று கவிதை எழுதத் தொடங்கும்போதே புலிட்சர் பரிசைக் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள்.

சில கவிதைகளை எழுதியவுடன், 'நான் இதைப் பிரசுரிப்பேன். புகழ் பெற்ற கீதாஞ்சலிக்குக் கிடைத்ததைப் போன்ற அங்கீகாரம் இதற்கும் கிடைக்கும். நான் நோபல் பரிசு பெறுவேன்' என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள். எந்தவிதமான பலனையோ போ பற்றி யோசிக்காமல், வெறுமனே எந்தச் செயலையாவது

செய்யுங்கள். அடுத்த விருந்தின்போது இந்தக் கவிதையை நான் சுத்தமாக வாசிப்பேன் என்றெல்லாம் திட்டம் தீட்ட ஆரம்பிக்காதீர்கள்.

எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல், அதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு அரைமணி நேரம் மட்டும் அந்தச் செயலைச் செய்து பாருங்கள்!

அந்த அந்த அரைமணி நேரத்தில், நீங்கள் உங்கள் சொந்த இருப்பிற்குள் விழுந்துவிடுவீர்கள்.

ஒவியம் வரைவது அல்லது கவிதை எழுதுவது என்பவற்றிற்குப் பகிலாக ஏதாவது வழிபாடு செய்யும் இடங்களுக்குச் சென்று அந்த இடத்தைச் சுத்தம் செய்யுங்கள், துடையுங்கள்.

'நான் இந்தத் தன்னார்வப் பிரிவிற்குத் தலைவராக இருப்பேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். துடைப்பத்தைக் கையில் எடுத்த உடனேயே, பதிலுக்கு எந்தவித பிரதிபலனையும் பெருக்கத் தொடங்குங்கள், சுத்தம் செய்யத் தொடங்குங்கள்.

பொதுச் எந்தவிதமான சுயநலமுமின்றி உங்களை நீங்களே மக்களுக்கு உணவு பரிமாறுங்கள். ஆனால் இதன் மூலம் அதிக அளவு பலனைப் பெறுவது எப்படி என்றோ அல்லது முடிந்த அளவு சிறு அளவிலாவது பலனைப்

பணம், பெயர், புகழ் என்ற எதுவுமே அந்த அரைமணி நேரச் சேவைக்காக உங்களை வந்து சேரக் கூடாது. உங்கள் வாழ்வில் இதற்காகக் குறைந்தது 30 நிமிடங்கள் செலவு செய்தால், வாழ்வின் உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.

பெற்றுவிட வேண்டும் என்றோ நினைக்காமல் உணவு பரிமாறுங்கள்.

சேவை விட்டுவிடுகிறது. நம்மில் பல பேர் சேவை செய்வது எதற்காக என்றால், அதைப் பற்றி மற்றவர்களிடம் போய்ச் சொல்லி அவர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டுமென்பதற்காகவே.

அதனால் இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேதான்; அது, உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனைத் தராத, ஏதாவது பலன் வரும் என்று நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத, எதையாவது ஒன்றைக் குறைந்தது அரைமணி நேரம் செய்வதுதான்.

பணம், பெயர், புகழ் என்று எதுவுமே அந்த அரைமணி நேரச் சேவைக்காக உங்களை வந்து சேரக் கூடாது. உங்கள் வாழ்வில் இதற்காகக் குறைந்தது 30 நிமிடங்கள் செலவு செய்தால், வாழ்வின் உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.

நீங்கள் ரீதியாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் வரையில், பலன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் வரையில், அதிகமான பலனைத் தரும் ? அதனால் சாதிக்கப் போவது என்ன ? அதனால் எனக்கு உங்கள் வாழ்க்கையுடன் பேரம் பேசத் தொடங்கிவிடுகிறீர்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமல்ல. அது அப்படி ஆகவும் முடியாது.

இந்த நுட்பத்தை நீங்கள் பின்பற்றினால் உங்கள் இருப்பைப் புதிய பரிமாணத்தில் பார்ப்பீர்கள்.

சத்தியமாகச் சொல்கிறேன். இந்த 30 நிமிடங்கள் உங்களைக் கிருஷ்ண உணர்ச்சிக்குள் அழைத்துச் செல்லும். உங்கள் வாழ்வில் இந்த 30 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ள நேரமாக அமையும்!

நிறைய பேர் வந்து உட்கார்ந்து வகுப்பைக் கேட்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுது மட்டுமே, மற்றவர்களிடம் சென்று தாங்கள் கேட்டவற்றை எல்லாம் அப்படியே திரும்பச் சொல்ல முடியும் என்பதற்காகவே

தாங்கள் கேட்டவற்றை மற்றவர்களிடம் சென்று அப்படியே சொல்கிறார்கள். இப்படிச் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் முதலில் அதை உங்களுக்குள் ஆழ்ந்து உட்செல்ல அனுமதியுங்கள். அந்தக் கருத்துக்கள் முதலில் உங்கள் இருப்புத் தன்மைக்குள் ஆழ்ந்து செல்லட்டும்.

நீங்கள் நிறுத்தும்போதுதான், தொடங்குகிறீர்கள். நீங்கள் உயிர்த் துடிப்போடு இருப்பீர்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமல்ல. அது அப்படி ஆகவும் முடியாது.