எதனிடம் சரணடைகிறீர்களோ அதுவே உங்களை வழி நடத்தும்
ஒரு அழகான உபரூஷத கதை.
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒரு பறவை அமைதியாக அமர்ந்து அதற்குள் இருக்கும் உள் இருப்பின் மௌனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அது முழுமையாகத் திருப்தி அடைந்த பூர்ணத்துவமான இருப்பு. அதற்குச் சற்று கீழே அமர்ந்துள்ள மற்றொரு பறவை சுறுசுறுப்பாகக் கிளைக்குக் கிளைக்குத்தாவி பழங்களைக் கொத்தித் தின்கிறது.
ஒரு சமயம் அது மரத்தின் வேறு பக்கமாகச் சென்று பழங்களைத் தேர்வு செய்து தின்கிறது.
பிறகு எங்கே ஆரம்பித்ததோ அதே பக்கத்திற்குத் திரும்பி வந்து மற்றொரு பழத்தைக் கொத்தித் தின்கிறது. பழங்கள் சுவையாக இருந்தால் அது மகிழ்ச்சி யை அனுபவிக்கிறது. பழங்கள் சுவையாக இல்லாவிட்டால் துக்கத்தை
ஒருபக்கம் சென்று இன்பத்தை அனுபவிக்கிறது. மறுபக்கம் சென்று கஷ்டத்தை அனுபவிக்கிறது. தொடர்ந்து அது இங்கும் அங்குமாகச் சென்றுகொண்டே இருக்கிறது.
திடீரென்று மேலே பார்த்த இந்தப் பறவை அங்கு அமைதியாக அமாந்திருக்கும் அந்தப் பறவையைப் பார்த்து, 'அது மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது ? அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும்; அந்தப் பறவையிடம் பேச வேண்டும்' என்று நினைத்தது. இவ்வளவு நேரமும் அமைதியாக இருக்கும் அந்தப் பெரிய பறவையின் பக்கம் மெது மெதுவாக அந்தச் சின்ன பறவை சென்றது.
இது அந்தப் பறவையின் அருகில் சென்று கொண்டிருக்கும்பொழுதுகூட,
தொடர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டே செல்கிறது. அந்தப் பழங்கள் சுவையாக இருந்தால் மகிழ்ச்சியாகவும், புளிப்பாக இருந்தால் துக்கப்பட்டுக்கொண்டும் இருந்தது.
திடீரென்று அந்தப் பறவையின் மிக அருகில் சென்றபோதுதான், இதுவரை பாதை மாறிச் சென்று புளிப்பான பழங்களைத் தின்று துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அழகாகவும் அமாந்திருக்கிற அந்தப் பெரிய பறவையும் தான்தானே தவிர, அது தனியான வேறெதுவோ இல்லை என்று அதற்குத் தெரிய வந்தது. அந்தப் பெரிய பறவையும் தன்னுடைய சொந்த இருப்புதானே தவிர, வேறு ஒரு தனியான இருப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டது. இந்தச் சின்ன பறவை அந்தப் பெரிய பறவையோடு ஐக்கியமாகி விட்டது.
இது ஒரு அழகான கதை.
இதேபோலத்தான், ஒரு சாதாரண ஜீவாத்மாவாக நீங்கள் இருக்கிறவரையில் நீங்கள் பயத்திற்கும் பேராசைக்கும் நடுவில் கிடந்து போராடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்கும் சென்றுகொண்டே இருப்பீர்கள். தள்ளப்படுவீர்கள்.
உங்கள் குழப்பமடையாமலும் உங்களுக்குள் இதுவரை தொடப்படாமல் இருந்து கொண்டிருக்கிற உங்களின் இருப்பு நிலையை உணரத் தொடங்கிய உடனேயே, நீங்கள் அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மேலும் மேலும் அதன் அருகில் செல்லச் செல்ல நீங்கள்தான் அது என்று உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள்தான் அந்த விழிப்புணர்வு.
ஒரு சாகாரண ஜீவாத்மாவாக நிங்கள் கருக்கிறவரையில், பயத்திற்கும் பேராசைக்கும் நடுவில் கிடந்து போராடிக் கொண்டிருப்பீர்கள்.
கிருஷ்ணர் இங்கு அதைத்தான் சொல்கிறார். பயத்திற்கும் பேராசைக்கும் இடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நாம் ஒன்று பயத்திடம் சரணடைகிறோம் அல்லது பேராசையிடம் சரணடைகிறோம். மிக மிகச் சிலரே, அபூர்வமானவர்களே புத்திசாலித்தனத்திடம் தெய்வீக விழிப்புணர்விடம் சரணடைகிறார்கள்.
தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொண்டிருக்கிற சிலர் என்னிடம் வந்து, "ஏன் நாம் தெய்வத்திடம் சரணடைய வேண்டும் ?'' என்று கேட்பார்கள். நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையையும் ஒரு கணக்கைப்போலவே
பார்க்குக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.
அர்ஜுனன் கேட்கிறார், "எனக்கு மிகுந்த பலனைத் தருவது எது?' வியாபாரத்தைப் பொறுத்தவரை சரியாக வைத்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் வாழ்க்கையில் அப்படி அல்ல. புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் வாழ்க்கையில் மிகவும் மோசமான கோல்வியாளர்களாகவே இருப்பார்கள்.
நீங்கள். தெய்வத்திடம் சரண்டையவில்லை என்றால், அச்சத்திடமோ அல்லது ஆசையிடமோ சரணடைந்திருப்பீர்கள்.
அவர்களால் வாழவே முடியாது. ஏனென்றால் அவர்கள் குறியாக இருப்பார்கள். கணக்கிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
மக்கள் என்னிடம் வந்து, 'நான் ஏன் கடவுளிடம் சரணடைய வேண்டும் ? அப்படிச் சரணடைந்தால் எனக்கு என்ன கிடைக்கும் ?'' என்று கேட்பார்கள்.
தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், அச்சத்திடமோ அல்லது ஆசையிடமோ நீங்கள் சரணடைவீர்கள், அவ்வளவுதான்.
எதையோ சரணடையுங்கள் என்று நான் சொல்லவில்லை. தெய்வத்திடம் சீரணாகத செய்வது பற்றி நான் உங்களுக்கு எந்தச் சத்தியமோ, வாக்குறுதியோ தரவில்லை. ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், நீங்கள் உங்கள் அச்சத்திடமும் ஆசையிடமும் சாணடைவீர்கள்.