கா்மத்திற்கும் மேலான பக்தி
- துறவாலும் காமத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்துகொள்ளுகிறாரோ, அவரே ஸ்த்யத்தை அறிந்தவராகிறார்.
துறவால் அடையப்படுகிற நிலை, கா்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.
- வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும்.
பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான புருஷைத்தை காலந்தாழ்த்தாமல் அடைகிறார்கள்.
- யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் கருத்துக்கள் சரியா தவறா, தூய்மையானதா தூய்மையற்றதா என்பதையெல்லாம் தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கிறாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை
வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார்.
வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்ளமாட்டார்.
- சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார்.
உணர்ச்சீக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை
யத்ஸாங்க்லை: ப்ராப்யதே ஸ்தானும் தத்தியோகைரபிகம்யதே l ஏகம் ஸாங்கியுரு ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி ll
லாங்க்ய யோகம், காம யோகங்கள் மூலமாக அடையப்பட்ட நிலைகள் ஒன்றேதான் என்பதையும், பக்தியினால் பெறப்பட்டதைக் காமாவினாலும் பெற முடியும் என்பதையும் தெரிந்து கொண்டவர், இந்த இரண்டையுமே ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறார். விஷயங்களை, அவை எப்படி உள்ளதோ அப்படியே பார்க்கிறார்.
அழகான ஸ்லோகம்.
ஒரு முக்கியமான விஷயம். நாம் எப்போதுமே கா்மயோகியும் அல்ல; எப்போதுமே ஸ்ரீயாஸியும் அல்ல. அதாவது நாம் எப்போதுமே செயலாற்றுபவர்களும் அல்ல; துறந்தவர்களும் அல்ல. எந்த ஒரு ஸ்ரீயாலியும் 24 மணி நேரமும் ஸ்ரீயாஸியாக இருப்பதில்லை. எப்போது அவர் ஆசையிடம் சரணாகதி அடைகிறாரோ அப்போது அவர் செயலாற்றுபவர் ஆகிறார்.
அதேபோல் காமலோகியும் 24 மணி நேரமும் செயலாற்றுபவர் அல்ல. அவர் பயத்திடம் சரணடையும்போது அவர் ஒரு சந்யாஸி ஆகிறார். அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதகமற்ற குழுநிலையிலும்கூட, நம்பிக்கையோடு முடிவுகளை எடுக்கும்போது நாம் கா்மயோகிகள். நம்பிக்கை இல்லாமல் சோர்வுடன் தீர்மானங்களை முடிவு செய்யும்போது நாம் ஸந்யாஸிகள். இரண்டு பாத்திரங்களையும் செய்வதும் நாம்தான்.
நம்பிக்கை உடையவர் யார்? நம்பிக்கையில்லாதவர் யார்? ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர் நம்பிக்கை உடையவர்; விமானத்தின் இருக்கைக்கான பெல்ட்டைக் (Seat-belt) கண்டுபிடித்தவர் நம்பிக்கை இல்லாதவர்.
வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் இரண்டு பாத்திரங்களாகவும் இருக்கிறீர்கள். சில இருக்கிறீர்கள்; இருக்கிறீர்கள்.
இங்கே, மனப்பான்மை தூய்மையாகவும் சரியாகவும் இருந்தால், இரண்டுமே ஒரே இலக்கில்கொண்டு போய்ச்சேர்க்கும்.
ஒரு புரிந்துகொள்ள வேண்டும்.
ஆசையினால் செய்யப்படுகிற எதுவாக இருந்தாலும் சரி, அது மேலும் மேலும் ஆசையைத்தான் கொடுக்கும். பயத்தால் செய்யப்படுகிற மேலும் உண்டாக்கும், அவ்வளவுதான். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாமே நம்முடைய உடலை அசைக்கும்போதும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியால் நம்முடைய உடல் அசைக்கப்படும்போதும் சரி, அந்த உணர்ச்சியானது நம்முடைய அமைப்பிற்குள் உள்ளேயே உறைந்துவிடுகிறது.
அது நம்முடைய கட்டமைப்பின் ஒரு பாகமாகவே மாறிவிடுகிறது. அதனால் நம்முடைய அமைப்பிற்குள் அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்து ஞானி, உடலில் எழக்கூடிய உணர்ச்சிகளைப் பற்றி ஆச்சரியப்படும் படியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.
அவர் அழகாகச் சொல்கிறார். முடிந்தால் நீங்கள் ஏதாவது ஒரு உணர்ச்சி எழும்போது, உங்களை மையப்படுத்திக்கொண்டு, உடலை அசைக்காமல், அமைதியாக அமர்ந்து, அதனுடன் ஒத்துழைக்காமல் இருங்கள். பதினோரு முறை அந்த உணர்ச்சிகளை இந்த முறையில் சமாளித்து விட்டீர்களென்றால், நீங்கள் அந்த உணர்ச்சியிடமிருந்து விடுதலைபெற்றுவிடுவீர்கள்.
மற்றொரு இந்து ஞானியான விவேகானந்தர், அழகாகச் சொல்கிறார்: ''ஞானிகளும் ஜீவன் முக்தியும் பாரதம் இந்தப் பூமிக்குக் கொடுத்த மிகப் பெரிய அன்பளிப்பு, நன்கொடை!''
ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் நன்கொடையாக வெளியே கொடுக்கே விட்டோம். நாம் நமக்காக அதைப் பயன்படுத்துவதே இல்லை ; மற்றவர்களுக்கு அதை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு, அதை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் மறந்துவிட்டோம்.
சுவாமி விவேகானந்தரிலிருந்து தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா ஞானிகளையும் இந்த உலகத்திற்கே கொடுத்துவிட்டோம்.
அவர்கள் நன்கொடையாகக் கொடுத்ததைப் பயன்படுத்த இந்துக்களாகிய நாம் மறந்தேவிட்டோம்.
முக்கியமான விஷயம் ஒரு புரிந்துகொள்ளுங்கள், உணர்ச்சியின் உதாரணமாக நீங்கள் இச்சையின் பிடியில் சிக்கியிருந்தால் அல்லது பயத்தின் பிடியில் சிக்கியிருந்தால் எப்பொழுதெல்லாம் அந்த உணர்ச்சி உங்கள் இருப்புக்குள் மேலெழும்பி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்கள் உடலை அதனுடன் ஒத்துழைக்க அனுமதிக்காதீர்கள்;
ஞானிகளும் ஜீவன்முக்கியும் பாரதம் இந்த பூமிக்குக்கொடுத்த மிகப்பெரிய அன்பளிப்புகள், நன்கொடைகள் !
உடலை, அந்த உணர்ச்சியைத் தொடர அனுமதிக்காதீர்கள் ;
உடலை, அந்த உணர்ச்சியுடன் இசைந்து செல்ல அனுமதிக்காதீர்கள்.
பதினோராவது முறைக்குள் நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுதலை அடைந்துவிடுவீர்கள் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
''என்ன இது? பதினோரு முறையிலேயேவா! அவ்வளவு சுலபமா அது ?'' என்று கேட்பீர்கள். சுலபம்தான், பெரிய விஷயங்கள் அனைத்துமே எளிதானவைதான். நாம்தான் அவற்றைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் எதையுமே எளிதானது என்று நம்புவதே இல்லை.
ஒரு சின்ன கதை.
ஒரு மனிதா் மருத்துவரிடம் போய், ''டாக்டர் இந்தப் பல்லைப் பிடுங்குவதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும் ?'' என்று கேட்டார்.
மருத்துவர் டாலர்.''
''இரண்டே இரண்டு நிமிட நிமிட வேலைக்குப் போய் தொண்ணூறு டாலரா?' என்று அந்த மனிதர் கேட்டார்.
மருத்துவர் சொன்னார், ''நீங்கள் விரும்பினால் உங்களுக்கு மெதுவாகச் செய்கிறேன்."
எளிமையானதாக இருக்கும் விஷயங்களை நாம் நம்புவதில்லை. விஷயங்களை நாம் சிக்கலாக்கவே விரும்புகிறோம்.
உண்மையாக, பதினோரு முறை என்பதே அதிகம். ஒரு பாதுகாப்பு காரணம் கருதித்தான் கிருஷ்ணமூர்த்தி பதினோரு முறை என்று சொல்லி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சட்டம் வழக்கு இவற்றிற்கு பயந்துதானோ என்னவோ, இந்தப் பாதுகாப்பு காரணத்தைச் சேர்த்திருக்கிறார். சிலா் இதை சில முறை மட்டுமே பயிற்சி செய்து பார்த்துவிட்டு எந்தப் பயனும் கிடைக்கவில்லையென்றால் இவர்மீது அவர்கள் வழக்கு தொடரலாம்! அதனால்தான் பதினோரு முறைகள் என்று சொல்லியிருக்கிறார்.
உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். பதினோரு முறை என்பது மிகவும் அதிகம். உங்களுக்குள் அந்த உணர்ச்சி எழும்போது, அதனுடன் ஒத்துழைக்காதீர்கள். அந்த உணர்ச்சியின் பின்னால் உங்கள் உடல் செல்ல வேண்டாம்.
அந்த உணர்வால், அது கோபமாக இருந்தாலும் சரி, எரிச்சலாக இருந்தாலும் சரி, மன அழுத்தமாக இருந்தாலும் சரி, இச்சையாக இருந்தாலும் சரி, பயமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருங்கள்.
'நான் இந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பேன்' என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
மூன்று அல்லது நான்கு முறைகளுக்குள்ளாகவே நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள், ஏனென்றால் நீங்கள் அந்த நுட்பத்தைக் கற்றுக் கொண்டீர்கள். இப்போது சாவி உங்கள் கையில் இருக்கிறது.
அந்த உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படாமல் இருப்பது எப்படி, உங்களுக்குள் மையம் கொள்வது எப்படி, உங்களுக்குள், உங்கள் இருப்புக் கன்மைக்குள் வேரூன்றி இருப்பது எப்படி என்பதற்கான சாவி உங்களிடம்தான் இருக்கிறது.
உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு
அது பயமாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் உடல் அதனோடு ஒருமுறை ஒத்துழைத்து விட்டது என்றால் போதும், அது மிகுந்த சக்தியும் பலமும் பெற்றுவிடும்.
எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்படுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும். அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் வரும்; பல முறைகள் மிக அதிகமாக, தீவிரமாக வரும். அதன் எண்ணிக்கையும் அதன் தீவிரத் தன்மையும் இன்னும் அதிகமாகும்.
What The Bleep Do We Know? - இது ஒரு அழகான திரைப்படம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். அந்தப் படத்தில் நான் இப்போது சொல்லிய அதே கருத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
எனக்கும் இந்தப் படத் தயாரிப்பாளருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அதை ஆதரிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
ஒருமுறை நியூயார்க்கில், இரண்டு பக்தர்கள் Bombay Dreams என்றழைக்கப்படும் காட்சிக்கு வரும்படி அழைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள்தான் என்னால் இருக்க முடியும். 15 நிமிடங்களில் முடிவதாக இருந்தால் நான் வருகிறேன்,' என்று சொன்னேன். ''இல்லை, காட்சி முடிய மூன்று மணி நேரமாகும், '' என்றார்கள்.
''அப்படியென்றால் அது அது எனக்கானது இல்லை," என்று சொன்னேன்.
அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் எந்தக் காட்சியையும் பார்க்க முடியும் என்று சொன்னேன். அதனால் அதை நான் பார்க்கவில்லை. ஆனால் எப்படியோ What The Bleep Do We Know? என்ற இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.
எப்படி இந்த மக்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சிப் உட்கார்ந்திருக்கிறார்கள்
எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்புடுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும்.
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எதையோ தொலைக்காட்சியில் காண்பிக்கிறார்கள், இவர்களும் உட்கார்ந்து மணிக்கணக்கில் பார்க்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் சில நேரங்களில், அவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கும்போகை, எதையாவது தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் அந்தத் தின்பண்ட டப்பா நிரம்பி இருக்கும். நிகழ்ச்சி முடியும்போது டப்பா காலியாகி இருக்கும். வயிறு நிரம்பி இருக்கும்! இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். இது உடல் பருமனாவதற்கு வழி வகுக்கும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். இந்து தத்துவ ஞானி இராமனுஜாச்சார்யா, "ஆஹாரே சுத்தி – அதாவது உணவின் தூய்மைதான் நம்முடைய குணநலன்களையும் எண்ணங்களையும் நிர்ண யிக்கிறது,''அழகாகச் சொல்கிறார்.
எதையாவது சாப்பிடும்போது, ஜீரணிக்கவில்லை, நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்குள் ஏற்படுகிற எண்ணங்களையும் சேர்த்துத்தான் அதனுடன் ஜீரணிக்கிறீர்கள். அதனால் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடுவதைக்கூட ஒரு வழிபாடுபோல்தான் செய்ய வேண்டும். பிரச்சினை என்னவென்றால் இப்போது வழிபாடும்கூட களங்கப்படுத்தப்பட்டுவிட்டது.
சாப்பிடுவது என்பது ஒரு ஆழமான சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டோ ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அது உங்களை மந்தமாக ஆக்கிவிடும். மந்தம் என்று சொல்லும்போது புரிந்துகொள்ளுங்கள், ஏற்கனவே நம்முடைய அமைப்புக்குள் போதுமான அளவுக்கு மந்தத் தன்மை இருக்கிறது. இந்தப் பழக்கத்தினால் மந்தத் தன்மையின் ஆற்றல் கணிசமான அளவுக்கு அதிகரித்துவிடும்.
எதிர்மறையான எண்ணங்களுடன் ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அதே போன்று, உணவை பரிமாறும் பொழுதும் ஏதாவது புகார்களை, குறைகளைப் பேசிக்கொண்டே பரிமாறாதீர்கள்.
பாரதத்தில், பரிமாறும்போதுதான் வழக்கமாக மனைவி சொல்ல ஆரம்பிப்பார், இல்லை, அது இல்லை. மாதச் செலவுக்குப் பணம் என்கிறீர்கள். அது இன்னும் ஒழுங்காக வீடு வந்து சேர்ந்தபாடில்லை. அது இங்கே இல்லை ... '' என்று முழுக் கதையையும் ஆரம்பித்துவிடுவார்கள்.
சமையல் செய்யும்போதும் பரிமாறும்போதும் சரி, ஒருபோதும் இந்த வீட்டுக் கதைகளை அரம்பிக்காதீர்கள். ஏனென்றால் அந்த எண்ணங்களும் நீங்கள் சமைக்கிற அல்லது பரிமாறும் உணவுக்குள்
எதிர்மறையான எண்ணங்களுடன் ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.
நுழைந்துவிடும். உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்கள் உள்அமைப்புக்குள் நுழைந்து அங்கே குடியேறிவிடும்.
எப்படி இருந்தாலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் பார்ப்பதில்லை. இருந்தாலும் What The Bleep Do We Know? என்ற ஒரு திரைப்படத்தை முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன். அதை உண்மையிலேயே ரசித்துப் பார்த்தேன்.
அந்தத் திரைப்படத்திலுள்ள ஒரு கருத்தை விளக்கிச் சொல்கிறேன். அது ஸ்ரீயமே. அது அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக அல்ல, அது வேதாந்தத்திலிருந்து வந்த ஒரு சத்யம். அதை அவர்கள் பார்க்கிற காட்சி களின் வடிவில் மிக அற்புதமான முறையில் விவரித்திருந்தார்கள்.
எப்பொழுதெல்லாம் உங்கள் அமைப்புக்குள் உணர்ச்சி மேலோங்குகிறதோ அது ஒரு தூறல் அல்லது சாரல் மழையைப் போன்றது. அது மழையைப்போல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அது உங்கள் உள் அமைப்புக்குள், உங்களுடைய இருப்புக்குள் நிகழ்கிறது. அங்குள்ள குறிப்பிட்ட அணுக்கள் இந்த உணர்ச்சிகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன.
உதாரணமாக ஆக்ரமிக்கப்படும்பொழுது, கோபம் என்ற அந்த உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய அணுக்கள் இருக்கின்றன. அவை அவற்றைப் பிடித்துவைத்துக் கொள்கின்றன. அவை, அவற்றைப் பிடித்து வைத்துக்கொண்டு மட்டும் சும்மா இருப்பதில்லை. அவை மறு உற்பத்தியையும் தொடங்கிவிடுகின்றன.
ஒவ்வொரு அணுவும் இந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி அணுக்களும், அடுத்த முறை கோப மழை பொழியும்போது அந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றுமே நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்தச் செயல் ஒரு தொடர்ச் சங்கிலிபோல் நீண்டுகொண்டே இருக்கிறது.
வாழ்க்கையின் அடிப்படையான தன்மையே மறு உற்பத்தியும் விரிவடைதலும்தான்! இந்த இரண்டின் அடிப்படைத் தன்மைகளைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமென்கிற ஒரு உள்ளுணர்வுதான்.
தொடர்ந்து வாழ வேண்டுமென்கிற இந்த உள்ளுணர்வு ஸ்வாதிஷ்டான சக்ரத்தால் ஆளப்படுகிறது. இது நம்முடைய உடலின் பயத்திற்கான சக்தி மையம். மறு உற்பத்தி என்பது மூலாதாரமையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது நம்முடைய உடலின் காமம் சார்ந்த சக்தி மையம்.
இந்த இரண்டு தொடர்புடையவை. சம்பந்தப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு சக்ரங்களும் நம்முடைய உடலில் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன.
கோபம் என்ற உணர்ச்சியைப் பற்றிக் கொண்ட அணுக்கள் உற்பத்தியைத் தொடங்கி ஒவ்வொரு அணுவும் மேலும் ஐந்து அல்லது ஆறு அணுக்களை உற்பத்தி செய்கின்றன. அடுத்த முறை கோபம் என்ற சாரல் வரும்போது, கோபம் வரும்போது இந்த எல்லா அணுக்களுமே அதே உணர்ச்சியைப் பற்றிக் கொள்கின்றன.
அசல் அணுக்களின் அளவுக்கு இவையும் வளர்ந்துவிடுகின்றன. அதே அளவுக்கு வளர்கின்றன. இப்போது இந்தச் செல்களும் கொடங்குகின்றன. மூன்றாவது முறையும் சாரல் அடிக்கும்போது. இந்த எல்லா அணுக்களுமே அந்த உணர்ச்சியைப் பற்றிக்கொண்டு, அதைச் சேர்க்கு வைக்கத் தொடங்கும். அதனால்தான், ஒவ்வொரு முறையும் அதே உணர்ச்சி பெய்யப் பெய்ய, அது மேலும் மேலும் பலமடைகிறது. நாம் அந்த உணர்ச்சிக்கு அடிமையாகிறோம். நம்மால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
முதல் முறை கோப மழை நம்மீது பெய்யும்போது, நாம் பத்து நிமிடங்கள் பாதிப்படைந்தால், அடுத்த முறை அது இருபது நிமிடங்கள் ஆகும். மூன்றாவது முறை அது அரைமணி நேரமாகும். உணர்ச்சி இப்படியாகத்தான் மேலும் பலமடைகிறது. நம்முடைய இருப்பில் நாம் மீண்டும் மீண்டும் இந்த எதிர்மறையான உணர்ச்சிகளுடன் ஒத்துழைக்கும்பொழுது, நாம் அதே மன நிலையையைத்தான் உருவாக்கிக்கொள்வோம். அதே மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் உருவாக்கிக்கொள்வோம்.
இன்னொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த உணர்ச்சிகளை நம்முள் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அதே விஷயத்தைத்தான் நாம் மற்றவர்கள்மீதுகூடக் காட்டுகிறோம். நமக்குள் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நாம் மற்றவர்கள்மீது வாந்தி எடுத்துவிடுகிறோம்.
ஆசைகளைப் பலப்படுத்துவதற்காக நாம் நம்முடைய செயல்பட்டோமென்றால், நாம் ஆட்கொள்ளப்பட்டு, அதையே பரவச் செய்கிறோம். நாம் ஆசை என்ற உணர்ச்சியை மற்றவர்கள்மீது வாந்தி எடுத்து விடுகிறோம்.
அடுத்த படியாக, நம்முடைய பயத்தை நாம் பலப்படுத்தினால், மீண்டும் நாம் அச்சம் என்ற உணர்வின் அத்துடன் பயம் என்ற உணர்ச்சியைக் காட்டி மற்றவர்களையும் துக்கப்படுத்துகிறோம்.
தெளிவாக இருங்கள். பலம் மிக்க போர் வீரர்கள் அதனால்தான் அவர்கள் மற்றவர்களைத் துக்கப்படுத்துகிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பயமுறுத்துகிறார்கள்.
போர் வீரர்கள் உண்மையில் கோமைகள். யார் ஒருவர் தம்முடைய இருப்பைக் நம்முடைய ஆசைகளைப் பலப்படுத்துவதற்காக நாம் செயல்பட்டோமானால், நாம் ஆசை எனும் உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, அதையே பரவச் செய்கிறோம்.
கைப்பற்றுகிறாரோ, யார் ஒருவர் தம்முடைய இருப்பை ஜெயிக்கிறாரோ அவர்தான் உண்மையான வீரம் மிக்க போர் வீரராவார். அவர் மட்டுமே உண்மையான போர் வீரர்.
விரும்பியதை அடைந்துவிடும் சக்தி படைத்தவர்கள் நீங்கள்
பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தால், மற்றவர்களிடமும் அதே பயத்தைத்தான் நாம் உற்பத்தி செய்கிறோம்.
இப்போது, சில நிமிடங்கள் உட்கார்ந்து பகுத்து ஆராயுங்கள்.
''இந்த வாழ்க்கை முற்றிலுமாக,
இத்தனை ஆண்டுகளாக,
நான் பயத்தாலும் ஆசையாலும் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அடைந்தது என்ன ?
நான் பெற்றது என்ன ?
நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் ?
உண்மையில் என்ன நிகழ்ந்திருக்கிறது ? ''
விழிப்புணர்வுடன் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விழிப்புணர்வுடன் இந்தக் கருத்து உங்கள்மீது செயல்பட அனுமதியுங்கள். ''இன்றிலிருந்து ஆசையினாலோ, பயத்தினாலோ நான் எந்த ஒரு காரியத்தையும்
பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தோமானால், நாம் மற்றவர்களிடமும் அதே பயத்தை உற்பத்தி செய்கிறோம். செய்யமாட்டேன்,'' செய்யுங்கள்.
உடனே உங்களுக்குள் ஒரு பயம் எழும். ''என்னுடைய பில்கள் என்ன ஆகும் ? அவற்றிற்கு யார் பணம் கொடுப்பார்கள். என்னுடைய அடமானத்தை யார் மீட்கப் போகிறார்கள் ? என்னுடைய கார் என்ன ஆகும் ? என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள் ? என்னுடைய சமுதாய அந்தஸ்து, பெயர், புகழ் இவை எல்லாம் என்னவாகும் ? அதை யார் பராமரிப்பார்கள்?'' என்பது போன்ற பயங்கள் உங்களுக்குள் எழும்.
கெளிவாகக் தெரிந்துகொள்ளுங்கள். ஆசையும் பயமும் இல்லாமல்கூட, உங்களை போதுமான சக்தியும் பலமும் உங்களிடமும் இருக்கின்றன.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு, ஆசையிடமிருந்தோ. உங்களுக்கு பயக்கிடமிருந்தோ சக்தி தேவையில்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.
ஆசையும் பயமும் இல்லாமல், உங்களை நீங்களே பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான சக்தியும் பலமும் உங்களிடமே இருக்கிறது.
இதைத்தான் முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்குமான சக்தி உங்களிடம் போதுமான அளவு இருக்கிறது.
மற்றொரு பெரிய ஹிந்து ஞானி மஹாவீரர் சொல்கிறார், "நீங்கள் இந்தப் பூமிக்கு வரும்போதே, நீங்கள் இந்த மனித உடலெடுத்து வரும்போதே, நீங்கள் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டுமென்று விரும்பினீர்களோ அதை அடைவதற்கும் போதுமான சக்தியைக்கொண்டு வருகிறீர்கள்.''
நீங்கள் ஏற்கனவே போதுமான எரிபொருளைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆசையிடமிருந்தோ, பயத்திடமிருந்தோ உங்களுக்கு எரிபொருள் தேவையில்லை.
நீங்கள் எப்போதும் நான் ஆசை அல்லது பயத்தினாலான எரிபொருள் போடுவதை நிறுத்திவிட்டால், நான் செயல்படுவதே நின்று போகும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இல்லை, நீங்கள் அப்படி நினைக்கத் தேவை இல்லை. ஏனென்றால் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்ட எரிபொருள் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
போதுமான எரிபொருள் இருக்கிறது. ஆனால் உளவியலாளர்கள், 'உந்துதல் இல்லாத செயல்பாடு' என்பதை ஒருபோதும் நம்புவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் புத்தரைப் பார்த்ததே இல்லை.
உளவியலில் கொண்டிருக்கிற மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு முடிவிற்கே வருகிறார்கள். ''நோக்கம் இருந்தால் மட்டுமே ஒருவரால் செயல்பட முடியும், '' என்ற இந்த ஒரு முடிவிற்குத்தான் வருகிறார்கள்.
பறவைகள் பாடுவதற்கு எந்த நோக்கத்தை பெற்றிருக்கின்றன ? இன்றைய உளவியலாளர்கள், உடல் சார்ந்த தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்குக்கூட ஒரு அர்த்தம் கற்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
பாடுகிற அந்தப் பறவை தன்னுடைய துணையை அழைக்கிறது என்று சொல்கிறார்கள். பறவைகளின் பாடலுக்குக்கூட ஒரு விளக்கம் கற்பிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். எதையுமே அது உள்ளது உள்ளபடியாகவே அவர்கள் பார்ப்பதில்லை.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார்,
ய: பச்யதி ஸா பச்யதி
ஆசை, பயம் இவற்றின் தாக்கங்களைத்தாண்டிய ஒரு மனிதரால்தான், பொருட்களை, விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும். நீங்கள் அச்சம் அல்லது ஆசை இவைகளின் பிடியில் சிக்கிக் கொண்டீர்களானால், விஷயங்களை நீங்கள் விரும்பியவாறுதான் பார்ப்பீர்கள். அவற்றை உள்ளபடியே பார்க்கமாட்டீர்கள்.
உதாரணமாக, அழகான உயரமான கட்டிடம் ஒன்று இருந்தால், அதைப்
நோக்கம் இருந்தால் மட்டுமே செயல்பட முடியும்! - உளவியல்வல்லுநர்கள். ரோக்கம் இல்லாமல் செயல்படுவதுதான் உண்மையான செயல்பாடு! - கீதை.
பார்த்த மாத்திரத்திலேயே ஆசையின் வயப்பட்ட ஒருவர் 'எனக்கும் இதே மாதிரி ஒரே ஒரு கட்டிடம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்.
பயத்தின் வயப்பட்ட மனிதர், 'நான் இவற்றை எல்லாம் பார்க்கவே கூடாது. அவை எனக்குள் உள்ள ஆசைகளைத் தூண்டிவிட்டுவிடும். அதனால் நான் எங்கேயாவது காட்டில் போய்த்தான் தங்கவேண்டும்' என்று நினைப்பார்.
பயத்தின் வயப்பட்ட மனிதன் ஒரு தனிப்பட்ட முறையிலே ஆசையின் வயப்பட்ட மனிதர் வேறொரு வழியில் சிந்தனை செய்கிறார். இந்த இரண்டு உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நபராலேயே, விஷயங்களை அவை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும்.
ய: பசஃயதி ஸா பச் யதி
என்ன 'இருக்கிறதோ' அதை மட்டுமே அவர் பார்ப்பார்.
இப்போதே செய்துகொள்ளுங்கள், வாழ்க்கை தள்ளப்பட்டோ ஈர்க்கப்பட்டோதான் வாழ்ந்தேன். இனிமேலும் அதையே தொடர்ந்து செய்ய விரும்புகிறேனா ? ''
"உங்களுக்கு தேவையில்லை, " என்று மஹாவீரரும் அழகாகச் சொல்லியிருக்கிறார். சமுதாயத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட, சமூதாயத்தால் கட்டுறுத்தப்பட்ட ஒரு நபருக்கு, ஆசையிலிருந்தும் பயத்திலிருந்தும் சக்தி தேவைப்படாது என்ற உண்மையை நம்புவதற்குக்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.
நீங்கள் எல்லோரும் இங்கே அமைதியாக அமர்ந்துகொண்டு, "அவர் பேசிக் கொண்டிருக்கட்டும், நாம் கேட்டுக் கொண்டிருப்போம். நாம் வேறு என்ன செய்ய முடியும் ?'' என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறுமனே இங்கே உட்கார்ந்திருப்பதாலேயே, நான் சொல்லுவதை நீங்கள் நம்ப முடிந்து விடுவதில்லை அல்லது என்னுடைய வார்த்தைகளை உண்மையென்று உங்களால் நம்பிவிட முடிவதில்லை.
உங்களுடைய மனத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுகின்றன என்பதும் தெரியும்.
உங்கள் வயது 30 அல்லது 40 அல்லது 50 அல்லது 60 என்னவாக இருந்தாலும் சரி, சரி, உங்கள் கடந்தகாலம் முழுவதிலுமே நீங்கள் ஆசையினாலும் பயத்தினாலும் சக்தியூட்டப்பட்டுதான் வாழ்ந்தீர்கள்.
ஒரு பத்து நாள்கள், பத்தே பத்து நாள்கள் மஹாவீரருக்காகக் கொடுத்துப் பாருங்கள். அடுத்த பத்து நாள்களுக்கு நான் மஹாவீரரின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்வேன்' என்று முடிவெடுங்கள்.
ஆசை, பயம் இவற்றைத்தாண்டிய மனிதரால்தான். பொருட்களிலும் விஷயங்களிலும் உள்ளவற்றை உள்ளதை உள்ளவாறே பார்க்க முடியும்.
''உங்களுக்குப் பயத்திடம் இருந்தும் ஆசையிடம் இருந்தும் சக்தி தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் நிறைய சக்தியைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இறைவன் உங்களைப் பூமிக்கு அனுப்பும்போதே, நீங்கள் பிறக்கும்போதே, உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் கொடுத்துத்தான் அனுப்பியிருக்கிறார்,' என்று மஹாவீரர் சொல்கிறார்.