சீர்வரிசையோடு பூமிக்கு வந்தவர் நீங்கள்
இறைவன் உங்களைப் பூமிக்கு அனுப்பும்போதே உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் உங்களுடனேயே அனுப்பியிருக்கிறார்.
பாரதத்தில், மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்கள் வீட்டிற்குத் தேவையான பான பொருட்கள் அனைத்தையும் துடைப்பத்திலிருந்து கார்வரை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாவற்றையும் மகளுடன் அனுப்பி அத்துடன் ஒரு வரதட்சணையும் சேர்த்தே கொடுக்கிறார்கள்.
பாரதம் எப்போது இதைப் புரிந்துகொண்டு வரதட்சணை என்ற கருத்திலிருந்து வெளியே வரப்போகிறதென்று உங்களில் யாராவது வரதட்சணை பெற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் உண்மையிலேயே ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால், முதலில் என்னவென்றால், நாளையே அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.
என்னவெல்லாம் உங்கள் மாமனார் மாமியார் வீட்டிலிருந்து பெற்றுக் கொண்டீர்களோ, அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்படி உங்கள் மாமனார் மாமியார் யாரும் உயிருடன் இல்லையென்றால், அதை உங்கள் மனைவியிடமே கொடுத்துவிடுங்கள்.உண்மையாகவே சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் வரதட்சணையை வைத்திருந்தால், செல்வத் திருமகள் லக்ஷ்மி, உங்களுடைய வீட்டைத் தம்முடைய முழு ஆசிகளால் ஒருபோதும் நிரப்பமாட்டாள்.
இரண்டு விஷயம் இருக்கிறது. லக்ஷ்மி உங்கள் வாழ்வில் இரண்டு விதமான
வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிறார். ஒன்று வெளியுலக வசதிகள், மற்றொன்று உள்ளுலக ஆனந்தம்.
உறுதியாகச் சொல்லுகிறேன். வரதட்சணையை வைத்திருக்கிறவர் வீட்டில் உள்ளுலக லக்ஷ்மியை வைத்திருக்கமாட்டார். வெளியுலக லக்ஷ்மி தனக்கிருப்பதாக அவர் நினைக்கிறார். அவ்வளவுதான்!
எழைக்கும் பணக்காரரைக்கும் என்ன வித்தியாசம் ? ஏழை தரையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பணக்காரர் மெத்தையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை. அந்த சோபாவின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்கிறது, வேறு ஒன்றும் இல்லை.
எப்படியிருந்தாலும் ஒரு மகளை எல்லாச் சீர் வரிசைகளுடனும் அவருடைய மாமனார் மாமியார் வீட்டிற்கு அனுப்புவதைப்போலத்தான், கடவுள் எல்லாவற்றுடனும் உங்களை இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்கிறார். வேதாந்தத்தில் இதை நாம் ப்ரார்க் காமா என்று சொல்கிறோம்.