KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/நீஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவதேSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

நீஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவதே

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் எதையும் செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் முற்றிலும் கேள்விப்படாத ஒன்றாகும்.

மனித மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உளவியல் நிபுணர்கள், நாம் நோக்கம் இல்லாமல் செயல்படவே முடியாது என்பதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.

அதனால்தான் இன்று, நோக்கமாகக் கொண்ட குருமார்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நோக்கங்களையே நோக்கமாகக் கொண்ட குருமார்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டு நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி நோக்கங்களுடன் இருக்க வேண்டுமென்பதை மற்றவர்களுக்குச் சம்பாதிக்கும், நோக்கங்களுடைய குருமார்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுளுங்கள், இந்த விஞ்ஞானிகளும் உளவியலாளர்களும் மருத்துவர்களும் நோயாளிகளைப் பற்றி ஆராய்ந்து விட்டு, நோக்கம் இல்லாமல்

செயலாற்றுவது சாத்தியமற்றது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஞானமடைந்தவர்களை ஆனால் அவர்கள் புத்தரை மாதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை. எந்த ஒரு ஞானமடைந்தவரையும் அவர்கள் சந்திக்கவில்லை. அதனால் நோக்கம் இல்லாமல் செயல்படவே முடியாது என்று சொல்லியுள்ளார்கள்.

நோக்கம் இல்லாமல் செயல்படுவதுதான் உண்மையான செயல்பாடு. நோக்கம் இல்லாத செயல்பாடு, நம்மை ஒருபோதும் களைப்படையச் செய்யாது. ஒவ்வொரு கணமுமே நாம் பரவசத்தில் இருப்போம்.

ஆனந்தமாக செயலாற்றுவோம். இந்தக் கருத்தை, இந்த ஒரு நுட்பத்தைப் புரிந்துகொள்ளுங்கள்,

மேலும் முதல் முறையாக கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் ஒரு தியான

நுட்பத்தைத் தருகிறார். அந்த ஆனந்த உணர்வைப் பெறுவதற்காக இன்று நாம் அந்த நுட்பத்தைப் பயிற்சி செய்வோம்.

நான்காவது அத்தியாயம்வரையில் ஞானத்திற்கான பட்டறிவு சம்பந்தமான உபதேசத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனன் ஒரு பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறார் அல்லகு ஏதாவது நுட்பம் இல்லாமல் அர்ஜுனனுடன் தொடர்புகொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறார்.

''இவனுக்கு ஒரு நுட்பத்தைக் கொடுக்காவிட்டால், நான் இவனிடமிருந்து தப்பிக்க முடியாது,'' என்பதைக் கிருஷ்ணர் உணர்ந்து கொண்டார். குருமார்கள் இரண்டு சூழ்நிலைகளில் தியான நுட்பத்தைக் கொடுப்பார்கள். ஒன்று, அந்த நபர் போதுமான பக்குவம் பெற்று

விட்டார் என்று தெரிந்துகொள்ளும்போது கொடுக்கிறார்கள்.

மற்றொன்று, இப்போது இந்த நுட்பத்தைக் கொடுக்காவிட்டால், அந்த நபர் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அமைதியாக இருக்கவே மாட்டார் என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது கொடுக்கிறார்கள்.

கிருஷ்ணர் அர்ஜுன்னைக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று நினைத்தாரா அல்லது 'சில நிமிடங்களுக்காவது இவனை கண்களை முடச்செய்து அமைதியாக அமர வைப்போம் ' என்று நினைத்தாரா என்று என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு நுட்பத்தைக் நோக்கம் இல்லாமல் செயல்படுவதுகான் உண்மையான செயல்பாடு. அது நம்மை ஒருபோதும் களைப்படையச் செய்யாது.

கொடுக்கிறார். நாம் அந்த நுட்பத்தைப் பயிற்சி செய்வோம்.

நுட்பத்திற்கு முன்பாக, அவர் இந்த நுட்பத்தைப் பற்றிய ஒரு அழகான விளக்கத்தை பின்வரும் ஸ்லோகங்களில் சொல்கிறார்.

கேள்வி: ஒடிப்போவது என்று ஆகாதா? நிறைய மக்கள் உலகியல் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கிற துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆச் ரூத்திற்கு வருகிறார்கள் போன்றிருக்கிறது. அவர்கள் ஆச்ரமத்தில் அல்லது காட்டில்கூட வேறு வகையான கஷ்டங்களைச் சந்திக்க மாட்டார்களா ?

அமகான கேள்வி

ஒரு சின்ன கதை.

ஒரு மன நலக் காப்பகத்தில் மூன்று பேர் நீண்ட மனநல தேறியிருக்கிறார்கள், அதனால் அவர்களை விடுவித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இவர்கள் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக, அந்தக் மருத்துவர் அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார்.

சரியான செயலை சர்யான சிந்தனையுடன் செய்யும்பொமுது, நமக்குள் ஒரு அமைத்தைய உணர் மடியம்.

அவர், அவர்களை ஒரு தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே தண்ணீரில் குதிப்பதற்காக உள்ள மேடைமேல் ஏறச் செய்து, அவர்களை அந்த நீச்சல் குளத்தில் குதிக்கச் சொன்னார்.

முதல் மனிதர் குதித்து, தன்னுடைய கால்களை உடைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரை மீண்டும் காப்பகத்திற்குக்கொண்டு சென்றார்கள். இரண்டாமவர் குதித்து, தன்னுடைய கைகளை உடைத்துக் கொண்டார். அவரும் அழுதுகொண்டே காப்பகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

மூன்றாமவர், மேடை மேலிருந்து கீழே பார்த்து விட்டு, நீச்சல் குளத்தில் குதிக்க மறுத்து விட்டார். மருத்துவர், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை, நான் குதிக்கவே முடியாது,'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். மருத்துவருக்கு மிகவும் சந்தோஷம். அவரைக் காப்பகத்திலிருந்து விடுவிக்கும் படிவங்களில் குகையெழுத்திட்டார். காப்பகத்தை விட்டுச்செல்லத் தயாரான அவரிடம் மருத்துவர் கேட்டார், ''எதற்காக நீ குதிக்க மறுத்தாய் ?''

அந்த மனிதர் சொன்னார், ''எனக்குத்தான் நீச்சல் அடிக்கத் தெரியாதே!''

சரியான செயல், ஆனால் தவறான சிந்தனை!

சரியான தீர்மானம், ஆனால் தவறான சிந்தனை!

நாம் வாழ்க்கையில் மூன்று விதமாகச் செயல்படுகின்றோம்.

முதல் நிலை,

சரியான செயல், தவறான சிந்தனை! இதற்கு உதாரணம் மேலே பார்த்த கதை !

இரண்டாவது நிலை

தவறான செயல், தவறான சிந்தனை! அதாவது தவறான சிந்தனையின் காரணமாகச் செய்யப்படும் தவறான செயல்!

இந்த இரண்டாவது நிலை முதல் நிலையைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் நாம் ஏதாவது தவறான செயலைச் செய்யும் பொழுது 'நீ தவறான செயலைச் செய்கிறாய்.'' என்று மற்றவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றோம்.

யாராவது ஒருவர் நம் பெற்றோர், வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள், நண்பர்கள் என்று யாராவது ஒருவர் நம் தவறைச் சுட்டிக் காண்பித் குவிடுவார்கள்.

அவர்களுடைய வேலையே நம் தவறைச் சுட்டிக் காட்டுவதுதானே!

அப்படிச் சுட்டிக் காட்டப்படும் பொழுது, நம்மால் நமது தவறான சிந்தனையை இனம் கண்டுகொள்ள முடியும்; அதனை மாற்றியமைக்க முடியும்; அதனைச் சீராக்க முடியும்.

ஆனால் முதல் நிலையில் நாம் தவறாகச் சிந்திக்கின்றோம் ; ஆனால் சரியான செயலைச் செய்கின்றோம். இப்பொழுது ஒருவரும் நம் செயலைச் சுட்டிக்

காண்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் நாம் கவறாக எதையும் செய்யவில்லை. சரியான செயலையே செய்திருக்கின்றோம். அதனால் நம் தவறான சிந்தனையைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் ஒழிய, நமக்கேகூட அது தெரியாது! அத னால் எதுவுமே நம் தவறான சிந்தனையைத் தடுத்து நிறுத்தாது.

சரியான செயல், தவறான சிந்தனை என்பது தவறான செயல், தவறான சிந்தனையைவிட மிகவும் மோசமானது.

உதாரணக்கிற்கு,

தவறான சிந்தனையின் காரணமாக நாம் ஆச்ரமத்திற்குள் சென்றால், நாம் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாவோம். அதனால்தான், சுமார் ஒரு வருடம்வரை சோதனைக் காலமாக வைத்திருக்கிறேன். நீங்கள் ஞானத்தைத் தவிர, வேறு எதையாவது அடைய வேண்டுமென்று நினைத்து வந்திருந்தால், உங்களுடைய தவறான சிந்தனையை நீங்களே தெரிந்து கொள்வதற்காக ஒரு வருடம் அவகாசம் கொடுக்கப்படுகிறது.

மூன்றாவது நிலை, சரியான செயல், சரியான சிந்தனை!

நீங்கள் சரியான சிந்தனையுடன் அதாவது நான் உள் விழிப்புணர்வு பெற வேண்டும்; நோக்கமும் இன்றி வெறுமனே 'இருப்பதற் காக' மட்டுமே ஆச்ரம வாழ்க்கை என்கிற சரியான சிந்தனையுடன் நீங்கள் ஆச்ரமத்திற்குள் வரும்போது, நீங்கள் சரியான செயலையே செய்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் எந்தவித முயற்சியுமில்லாமல், எந்தவித கண்டமும் இல்லாமல் உங்களுக்குள்ளேயே அமைதியாக இருக்கலாம்.

இந்தப் பரிமாணத்தில், இந்த மூன்றாவது நிலையிலிருந்து மட்டுமே நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்கள்!

கடந்தகாலத்தில் நிறைய பேர் சரியான செயலைத் தவறான சிந்தனையுடன் செய்திருக்கிறார்கள்; அவர்கள் அமைதியாக இருக்க முயற்சி த்திருக்கிறார்கள். சமாதானமாக இருக்க முயற்சித்திருக்கிறார்கள்; அவர்கள் துறவிகள். உலகத்தில் உள்ள மடாலயங்களில் எல்லாம் இப்படிப்பட்ட துறவிகள்தான் நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தாலும் இறந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அவர்களால் சிரித்திருக்க முடியாது.

அவர்களால் அன்பு செலுத்தியிருக்க முடியாது.

அவர்களால் பாடியிருக்க முடியாது. அவர்களால் ஆடியிருக்க முடியாது.

தங்களுடைய வாழ்க்கையையே விலையாகக் கொடுத்து அமைதியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் அப்படியே உறைந்து போய் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய அமைதியானது 'குளிர்ச்சி' எனக் குறிப்பிடும்படியான ஒன்று அல்ல. அது உறைந்து போன பனிக்கட்டி. அது ஒரு இடுகாட்டின் அமைதியே.

இன்னொரு வகையான மக்களும் உலகில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகில் எவ்வளவு இன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ அனுபவித்து விட்டு, எவ்வளவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க முடியுமோ அப்படி வாழ்ந்து விட்டு ஆனந்தத்தை அடைய முயற்சித்திருக்கிறார்கள். நிறைய ஓவியர்கள், கவிஞர்கள், நாட்டியக்காரர்கள், இசைக் கலைஞர்கள் இப்படி இன்னும் பல கலைஞர்கள் இவ்வாறு இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் உயிருடன் இருந்தாலும் மிகவும் மனக்கலக்கத்துடனும் அமைதியற்ற மன நிலையுடனும்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஆனால் அந்த உணர்ச்சி ஒரு நெருப்பைப்போல அவர்களையே எரித்துவிட்டது. நிறைய கலைஞர்களும் கவிஞர்களும் பைத்தியமாகிப் போயிருக்கிறார்கள்.

'எப்படி அமைதியாக வாழ்வது' என்று தெரியாத ஒரே காரணத்தினால், நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவா்களுடைய ஆனந்தமானது அவா்களையே அழித்துவிடும். அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

ஒரு உண்மையான ஸந்யாஸி என்பவர் இந்த இரண்டிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டவர். அவர் ஒரு புதிய மனிதரின் ஆரம்பம். அமைதி என்பது அவருடைய இருப்பு நிலையில் உள் மையப் பகுதியாகவே இருக்கிறது. அமைதி என்பது அவரைச் சுற்றியுள்ள வெளிப் பரிமாணத்திலும் இருக்கிறது. இது ஒரு உன்னதமான இசைவு.

இந்த இசைவுதான் கடவுள்! இதைக் கடவுள், ஞானமடைதல், நிர்வாணம், ஸ்தீயம், அழகு, விடுதலை என்று நாம் விரும்புகிற எந்தப் பெயரைக் கொண்டு அழைக்க விரும்புகின்றோமோ, அந்தப் பெயராலேயே அழைக்கலாம்.

இந்த இசைவுதான் ஜீவன் முக்தி.